கே எப் சி
அமெரிக்க துரித உணவு சங்கிலி
கேஎஃப்சி (KFC, Kentucky Fried Chicken) என்பது புகழ்பெற்ற வேக உணவுச்சாலைகளின் கூட்டமைப்பாகும். இதன் தலைமையகம் கென்டக்கி, லூயிவிலில் அமைந்துள்ளது. கேஎப்சி விற்பனை அடிப்படையில் மக்டொனல்டுசிற்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்திலுள்ளது.[1] 2012ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 120 நாடுகளில் 18,0000 கிளைகளைக் கொண்டுள்ளது.
நிறுவுகை | 1930 வடக்கு கோர்பின், கென்டக்கி |
---|---|
நிறுவனர்(கள்) | ஹார்லண்டு சாண்டர்சு |
தலைமையகம் | 1441 கார்டினர் ஒழுங்கை, லூயிவில் (கென்டக்கி), ஐக்கிய அமெரிக்கா |
அமைவிட எண்ணிக்கை | 18,000 (2012)[1] |
முதன்மை நபர்கள் | டேவிட் நோவாக், ரொஜர் ஈட்டன் |
தொழில்துறை | வேக உணவுச்சாலை |
வருமானம் | அமெரிக்க டாலர்15 பில்லியன் (2011)[2] |
தாய் நிறுவனம் | Yum! Brands |
இணையத்தளம் | www |
கேஎப்சி உலகின் முதல் உலகளாவிய உணவுச்சாலைகளின் கூட்டு நிறுவனம் ஆகும். இது தனது கிளைகளை இங்கிலாந்து, மெக்சிக்கோ, ஜமைக்காவில் 1960களின் நடுப்பகுதியில் ஆரம்பித்தது.
கிளைகள்
இந்தியாவில் 350 கிளைகள் உள்ளன. இந்திய உணவுப்பழக்கத்திற்கு ஏற்றவாறான தின்பண்டங்களையும் விற்கின்றனர்.[3] இங்கு கோழிக்கறியில் செய்யப்பட்ட உணவுகளும், கிரஷர்ஸ் எனப்படும் குளிர்பானங்களும் விற்கின்றனர்.[4]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Annual Report 2012". Yum!. பார்க்கப்பட்ட நாள் April 7, 2013.
- ↑ Lopez, Linette (July 13, 2011). "The 10 Largest Restaurant Chains In America". Business Insider. http://www.businessinsider.com/the-10-largest-restaurnant-chains-in-the-united-states-2011-7?op=1. பார்த்த நாள்: February 27, 2013.
- ↑ Saxen, R. (2002). Marketing Management. McGraw Hill Education. p. 508. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-392-2331-1. பார்க்கப்பட்ட நாள் November 7, 2017.
- ↑ "KFC Menu, Menu for KFC, Sector 18, Noida". சொமேட்டோ. பார்க்கப்பட்ட நாள் August 27, 2016.