கைச்சில்லி

முதிரோர் தனிமையில் இருக்கும்போது தன் இளமைக்கால நினைவுகளை வெளிப்படுத்தி அமர்ந்துகொண்டு கை விரல்களைப் பயன்படுத்தி ஆடும் விளையாட்டு கைச்சில்லி

நொண்டி அடித்தும், சில்லை மிதித்தும், சில்லை நொண்டிக்காலால் உந்தி உதைத்து அரங்குக்கு வெளியே தள்ளி மிதித்தும் சிறுவர் சில்லி விளையாடுவர். காலால் விளையாடப்படும் இந்த விளையாட்டைக் கைவிரல்களைப் பயன்படுத்தி விளையாடுவது இந்தக் கைச்சில்லி விளையாட்டு. இந்த விளையாட்டுக்கு அரங்கம் கையை நகர்த்தி விளையாடப்படும் அளவுக்குச் சிறிதாக வரையப்படும்.

ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் கால்போல் பயன்படுத்தி இதனை வாளையாடி மகிழ்வர். இதனை இரு முதியவர் ஆடுதலும் உண்டு.

மேலும் பார்க்க தொகு

கருவிநூல் தொகு

  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு 1954
  • இரா. சுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராஆய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைச்சில்லி&oldid=973673" இலிருந்து மீள்விக்கப்பட்டது