கைத்து
கைத்து (Kaithu) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா நகரத்தின் முக்கியமான புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். மற்றொரு புற நகரான அன்னடேலுக்கு அருகில் கைத்து புறநகர் உள்ளது. கைத்து பகுதி மிகவும் செழிப்பானதாகவும் மக்கள் தொகை மிகுந்த பகுதியாகவும் உள்ளது.
கைத்து | |
---|---|
Suburb | |
நேர வலயம் | UTC+5:30 (IST) |
நிலவியல்
தொகுசிம்லாவின் அன்னடேல் மற்றும் வண்டி சாலை பகுதிக்கு அருகில் கைத்து புறநகரம் அமைந்துள்ளது. சிம்லாவின் முக்கிய புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவிலும் சிம்லா இரயில் நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலும் கைத்து புறநகர் அமைந்துள்ளது. சிம்லா மாநகராட்சியின் வார்டு எண் 3 என்று எண்ணிடப்பட்டு கைத்து புறநகரம் நிர்வகிக்கப்படுகிறது. அன்னடேல் புறநகரம் கைத்து புறநகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. கைத்துவின் சுங்கி கானா பகுதியில் ஒரு குருத்வாராவும் உள்ளது.
கைத்து புறநகரம் மேல் கைத்து மற்றும் கீழ் கைத்து என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கீழ் கைத்துவில் கீழ் கைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கொண்டிருக்கிற்றது. மேல் கைத்துவில் நகர காவல் நிலைய அமைந்துள்ளது. [1] இதைத் தவிர பொதுப்பணித் துறை காலனிகளுடன் ஒரு கோவில் மற்றும் உயர் நீதிமன்ற விருந்தினர் மாளிகையையும் மேல் கைத்துவில் உள்ளன. கைத்து புறநகரத்தில் மூன்று மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களும் இரண்டு குரு கோல்வார்கர் பூங்காக்களும் (கோல் பகாடி) உள்ளன. கைத்து புறநகர் பகுதி பைன் வியூ விடுதிக்கு அருகிலுள்ள வட்டச் சாலையில் தொடங்கி ஃபிங்காசு தோட்டத்திற்குக் கீழே சுங்கி கானா வரையிலும், குரு கோல்வால்கர் பூங்காவுக்கு மேலே வரையிலும் பரவியுள்ளது.
கல்வி
தொகுலோரெட்டோ கோவென்ட் தாரா கூடம் என்ற பெயரில் ஒரு கன்னி மாடப் பள்ளி கைத்து புறநகரில் இயங்குகிறது. [2] இலக்கணப் பொதுப் பள்ளி மற்றும் இமாலயன் பொதுப் பள்ளி என இரண்டு பொதுப் பள்ளிகளும் இங்குள்ளன. கூடுதலாக, மூன்று அரசுப் பள்ளிகளும் கைத்து புற நகரில் செயல்படுகின்றன. கைத்து உயர்நிலைப் பள்ளி என்ற பெயரில் ஒரு பள்ளியும் புச்செயில் மற்றும் சுங்கி கானா பகுதிகளில் தலா ஒரு பள்ளியும் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "कैथू पुलिस लाइन के कांस्टेबल समेत चिट्टे के साथ चार गिरफ्तार, निलंबित". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.
- ↑ "Loreto Convent Tara Hall, Shimla: Château de perfection". hindustantimes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.