கைத்தூன்
கைத்தூன் (Kaithoon) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். கைத்தூன் நகரம் 20 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. கோட்டா தோரியா எனப்படும் புடவைகளுக்கு இந்த இடம் பிரபலமானது.
கைத்தூன் Kaithoon | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°08′27″N 75°58′04″E / 25.1407°N 75.9679°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
மாவட்டம் | கோட்டா |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 20,362 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மக்கள் தொகை
தொகு2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[1] கைத்தூன் நகரத்தில் மக்கள் தொகை 20,362 பேர்கள் என்றிருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் 52% மற்றும் பெண்கள் 48% ஆக இருந்தனர். கைத்தூனின் சராசரி கல்வியறிவு 62% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 73% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 51% ஆகவும் இருந்தது. கைத்தூனில், 17% மக்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர்.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 வெளியிட்ட அறிக்கையின்படி, கைத்தூன் நகராட்சியின் மக்கள் தொகை 24,260 ஆகும். இதில் 12,468 ஆண்கள் மற்றும் 11,792 பெண்கள் இருந்தனர். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் 3468 பேர் இருந்தனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ "Kaithoon Population, Caste Data Kota Rajasthan - Census India", www.censusindia.co.in (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-12-13