கைன்ரெம் அருவி
இந்தியாவின் மேகாலயாவில் உள்ள நீர்வீழ்ச்சி
கைன்ரெம் அருவி (Kynrem Falls) இந்திய மாநிலமான மேகாலயாவில் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் சிரபுஞ்சியிலிருந்து 12 கிலோமீட்டர் (7.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சிரபுஞ்சிக்கு அருகிலுள்ள தங்கராங் பூங்காவிற்குள் இந்நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.[1] இது இந்தியாவின் 7 ஆவது உயரமான நீர்வீழ்ச்சி என்ற சிறப்புக்கு உரிய அருவியாகும்.[2] 305 மீட்டர் (1,001 அடி) உயரத்தில் இருந்து செங்குத்தாக[3] விழும் கைன்ரெம் அருவியில் மூன்று அடுக்குகளாக நீர் கொட்டுகிறது.[4] கொட்டும் நீரானது இரண்டு வெவ்வேறு நீரோடைகள் அல்லது சிற்றோடைகளாகப் பரவுகிறது. ஒவ்வொன்றும் மூன்றாவது அடுக்கின் கடைசிக் கட்டத்தில் பாயும் போது ஒன்றிணைந்து வேகத்தைப் பெறுகின்றன.
கைன்ரெம் அருவி Kynrem Falls | |
---|---|
மூன்று அடுக்குகளுடன் கைன்ரெம் நீர்வீழ்ச்சி | |
அமைவிடம் | கிழக்கு காசி மலை மாவட்டம், மேகாலயா, இந்தியா |
ஆள்கூறு | 25°13′37″N 91°42′58″E / 25.227°N 91.716°E |
வகை | அடுக்குகளால் ஆனது. |
மொத்த உயரம் | 305 மீட்டர்கள் (1,001 அடி) |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kynrem Falls". india9. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
- ↑ "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2012-08-25. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
- ↑ "Kynrem Falls". Times of India Travel. பார்க்கப்பட்ட நாள் 2022-03-16.
- ↑ "Kynrem Falls". World Waterfall Database. Archived from the original on 2010-12-01. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.