கையாத் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஹையாத் (Hayat ) எனும் பாரசீக மொழித் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தினை ஈரானிய இயக்குநர் கோலாம் ரேஸா ரமீஸானி (Gholam Reza Ramezani) இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கான கதையை கோலாம் ரேஸா ரமீஸானியும், மோஜ்தாபா கோஷ்க்தாமனும் எழுதியுள்ளனர்.
கதை
தொகுஹயாத், 12 வயது சிறுமி. ஈரானின் கிராமம் ஒன்றில் வசிக்கிறார். மிகக் கடினமாக பள்ளித் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறாள். தேர்வுக்கு முதல் நாள் இரவில் அவளது தந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். வீட்டில் இருக்கும் கைக்குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஹையாத்துக்கு. ஆனால் ஹையாத் தேர்வு எழுதவே விரும்புகிறார். மிகக் கடின போராட்டத்திற்குப் பிறகு சற்று தாமதமாக தேர்வு எழுதச் செல்கிறார் ஹையாத். ஹையாத் எனும் பாரசீகச் சொல்லுக்கு வாழ்க்கை என்று பொருள்.
நடிகர்கள்
தொகு- மொகம்மது சையது பாபாக்ஹோன்லோ
- மெகர்தாத் ஹசைனி
- ஹசாலே பர்ஸாஃபர்
விருதுகள்
தொகு- ஆம்ஸ்டர்டாம் திரைப்பட விழா 2005
- மாட்ரிட் குழந்தைகள் திரைப்பட விழா 2005
- கோல்டன் எலிபெண்ட் திரைப்பட விழா 2005
- இசுத்தான்புல் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா 2005
- யூனிசெப் விருது (Centre International Du Film Pour L’enfance et la Jeunesse, IRAN UNICEF Award)
- அர்ஜெண்டினா குழந்தைகள் திரைப்பட விழா 2005
- செக் குடியரசு திரைப்பட விழா 2005
- உருகுவே குழந்தைகள் திரைப்பட விழா 2005
- பெலாரஸ் குழந்தைகள் மற்றும் சர்வதேச திரைப்பட விழா 2005