கோலாம் ரேசா ரமீசானி
கோலாம் ரேஸா ரமீஸானி (Gholam Reza Ramezani) ஈரானைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 1960 ஆம் ஆண்டு ஈரானில் பிறந்தவர். இவர் 1983 ஆம் வருடம் உதவி இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தனது சினிமா வாழ்வைத் தொடங்கினார். இயக்குநர் அமிர் நாதிரிடம் உதவி இயக்குனராக தி ரன்னர் (The Runner) திரைப்படத்தில் பணி புரிந்தார். இவர் பல குறும்படங்களை இயக்கியுள்ளார். இவரின் இரண்டாவது திரைப்படமான தி கார்ட் (The Cart) சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றது. இவரது திரைப்படமான கையாத் குறிப்பிடத்தக்க ஒன்று. இத்திரைப்படம் குழந்தைகள் திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப் பெற்றுள்ளது.
இயக்கிய திரைப்படங்கள்
தொகு- தி லாக்ஸ்மித் (The Locksmith)
- பாஸி (Bazi)
- கையாத் (Hayat)
- தி கார்ட் (The Cart)
- ஓபோர் அஸ் டேல் ( Oboor az tale)
கதை எழுதிய திரைப்படங்கள்
தொகு- க்ரானாஸ் (Granaz)
- தி லாக்ஸ்மித் (The Locksmith)
- பாஸி (Bazi)
- கையாத் (Hayat)
- தி கார்ட் (The Cart)
- ஓபோர் அஸ் டேல் ( Oboor az tale)
ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த திரைப்படங்கள்
தொகு- கையாத் (திரைப்படம்) (Hayat)
தயாரிப்பாளராக பணிபுரிந்த திரைப்படங்கள்
தொகு- கையாத் (Hayat)