கை. கொளந்தபாளையம்

கை. கொளந்தபாளையம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், பரமத்தி பரமத்தி-வேலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இங்கே வசிக்கும் மக்களின் கூற்றுப்படி 2023 ஆம் ஆண்டில் 100 தலைக்கட்டுக்கும் (குடும்பங்கள்) குறைந்த அளவில் மக்கள் வசிக்கும் இடமாக உள்ளது.

இதே வட்டத்தில் உள்ள இன்னொரு ஊரின் பெயரும் கொளந்தபாளையமாக அமைந்த நிலையில் இந்த ஊரின் பெரும்பான்மை மக்களின் சாதி சொல்லை குறிக்கும் வகையில் K (கை) முன்னொட்டு சேர்த்து வழக்கப்பட்டுவருகிறது.

அமைவிடம்

தொகு

இந்த ஊர் மாவட்ட தலைநகர் நாமக்கல்லில் இருந்து வடமேற்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்செங்கோடு நகரின் தென்கிழக்கில் 27 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஊர் வேலகவுண்டம்பட்டியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த ஊர் பரமத்தி-வேலூ சட்டமன்ற தொகுதிக்கும், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டது.

உள்கட்டமைப்பு வசதிகள்

தொகு

அருகில் உள்ள சிறு மற்றும் பெரு நகரங்குளுடன் மோட்டார் பயணம் செய்ய ஏதுவாகத் தார்ச்சாலை உள்ளது. தினமும் மூன்று முறை நாமக்கல்லில் இருந்தும், இரண்டு முறை திருச்செங்கோட்டில் இருந்தும் அரசு பேருந்து வசதி உள்ளது. கிராமத்தில் மின்சார இணைப்பும், தொலைக்காட்சி இணைப்புகளும் பல வீடுகளில் காணப்படுகிறன்றன. பல ஆண்டுகளாக வாரச் சந்தை ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்பட்டு வருகிறது. சந்தையில் வேளாண் அறுவடைப் பொருட்களும், வீட்டு உபயோக பொருட்களும், திண்-பண்டங்களும் கிடைக்கும்.

பள்ளி

தொகு

இது மிகச் சிறிய ஊராக இருப்பினும், ஊரின் தெற்கே அரசினர் பள்ளிகள் செயல்பட்டுவருகிறது. 1983 தோற்றுவிக்கப்பட்ட இப்பள்ளியில் பள்ளி, ஆண் பெண் இருபாலருக்கும் பொதுப்பள்ளியாக இயங்கிவருகிறது. தொடக்க வகுப்புகள் முதல் உயர் வகுப்பு வரை தமிழ்நாடு மாநில அரசின் பாடத்திட்டத்தின் படி செயல்பட்டுவருகிறது. தமிழ்வழி கல்வி புகட்டும் கல்விச்சாலை ஆகும்.

தொழில்

தொகு

இந்த ஊரின் உள்ளே கைத்தறி நெசவும், புறத்தில் விவசாயமும் முக்கியத் தொழிலாக விளங்கிய இவ்வூரில் நகரமயமாக்கலுக்குப் பின்னர் வருடாவருடம் புறக்குடி பெயர்வு மிக அதிகமாகியது. விசைத்தறிகளின் வளர்ச்சியும், கைத்தறி பொருட்களுக்குச் சந்தையின்மையும் காரணியாகக் கூறப்படுகிறது. குடிபெயர்வில், நிறையக் குடும்பங்கள் ஈரோடு, தாராபுரம், அந்தியூர்,பள்ளிபாளையம், திருச்செங்கோடு போன்ற அருகாமை நகரங்களுக்கு நகர்ந்துள்ளனர்.

கோயில்கள்

தொகு

ஊரின் மையத்தில் பாவடி திடல் அருகே மாரியம்மன் கோவில், முத்துக்குமார சாமி கோவில்,விநாயர் கோவிலும், புடவைக்காரி அம்மன் கோவில்களும், ஏழு கன்னிமார் கோவிலும் அமைந்துள்ளது.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கை._கொளந்தபாளையம்&oldid=3867804" இலிருந்து மீள்விக்கப்பட்டது