கொக்பொரோக் நாள்
கொக்பொரோக் நாள் (Kokborok Day) ஒவ்வொரு ஆண்டும் சனவரி பத்தொன்பதாம் நாளன்று திரிபுரா மாநிலத்தில் நினைவுகூரப்படுகிறது. கொக்பொரோக் மொழியை பேசும் மக்களின் கோரிக்கையை ஏற்று, 1979ஆம் ஆண்டில் ஆட்சி மொழியாக்கப்பட்டது. இந்த ஆணையை அப்போதைய திரிபுராவின் முதல்வரான நிரூபன் சக்கரவர்த்தி ஆணை பிறப்பித்தார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் கொக்பொரோக் நாள் கொண்டாடப்படுகிறது.[1][2] இந்த மொழி, திரிபுராவின் பழங்குடியினர் தன்னாட்சிப் பிரதேசத்தில் முதல் நிலையைப் பெற்றுள்ளது.
நடவடிக்கைகள்
தொகுஇந்நாளில் கொக்பொரோக் மொழிக்கான இலக்கிய நிகழ்வுகள் நடக்கின்றன. புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. பழங்குடியினரின் பண்பாட்டுக்கூறுகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த மொழியின் வளர்ச்சியை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுக்களும் கூடுகின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "tripura state prepares to observe kokborok day". Archived from the original on 2015-02-01. பார்க்கப்பட்ட நாள் 2015-02-02.
- ↑ Kokborok day observed
- ↑ "Language Wing - TTAADC - Tripura" (PDF). Archived from the original (PDF) on 2014-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-02-02.