கொஞ்சி ரியோசு
கொஞ்சி ரெய்சு ரியோசு (Conchi Reyes Ríos) எசுப்பானிய நாட்டைச் சேர்ந்த ஒரு காளைச் சண்டை வீராங்கனையாவார். 1991 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 11 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[2] குடும்பத்தில் காளைச் சண்டை வரலாறு இல்லை என்றாலும், காளைச் சண்டை உலகின் மீதான காதல் இவரது தாய்வழி தாத்தாவிடமிருந்து வந்தது . 2011 ஆம் ஆண்டில், காளையின் இரண்டு காதுகளையும் எடுத்த முதல் பெண்மணி என்ற சிறப்புக்கு உரியவராகத் திகழ்ந்தார் . 2015 ஆம் ஆண்டில், இவர் எசுப்பானிய தேசிய காளை சண்டை வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றார். அப்போது இப்பட்டியலில் இடம்பெற்ற 825 பேரில் ஆறு பெண்களில் ஒருவராக இருந்தார்.
கொஞ்சி ரியோசு Conchi Ríos | |
---|---|
2016 ஆம் ஆண்டில் கொஞ்சிரியோசு[1] | |
பிறப்பு | 11 மார்ச்சு 1991 முர்சியா மாகாணம் |
தேசியம் | எசுப்பானியா |
பணி | காளைச்சண்டை |
துணைவர் | இயோசு மானுவல் மாசு |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு1991 ஆம் ஆண்டு முர்சியா பிராந்தியத்தில் கொஞ்சி ரியோசு பிறந்தார். காளைச் சண்டை வீராங்கனையாக வேண்டும் என்ற இவரது இலட்சியத்தை அவரது தாத்தா பாட்டி ரியோசின் 15 வயதில் அறிந்தனர். தாத்தா இவரை உள்ளூர் காளை வளையத்திற்கு அழைத்துச் சென்றார். முதலில் ஒரு கன்றுக்குட்டியைப் பார்க்க அழைத்துச் சென்று ரியோசின் இலட்சியத்தை சோதித்தார். ரியோசு பயம் காட்டாமல் , ஆர்வத்தை மட்டுமே காட்டினார்.[3]
2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று ரியோசு காளைச் சண்டையில் பொது வெளியில் அறிமுகமானார். பகட்டான எசுப்பானிய காளைச் சண்டையின் மூன்று நிலைகளில் முதன்மையானதாகக் கருதப்படும் குதிரையில் ஏறி காளைச் சண்டையிடும் வீராங்கனையாக 2009 ஆம் ஆண்டு இவர் அறிமுகமானார். இதேவகையில் காளைச்சண்டையில் ஈடுபட்ட இலூயிசு மிகுவல் கேசரேசை ரியோசு ஆதரித்தார். 2011 ஆம் ஆண்டு எசுப்பானியாவின் மாட்ரிட்டு நகரில் உள்ள லாசு வென்டாசு என்ற மிகப்பெரிய காளைச்சண்டை வளையத்தில் சைமன் லோபசு, இயெமெனெசு ஃபோர்டெசு மற்றும் இயோசு குரூசு ஆகியோரை உள்ளடக்கிய ஒரு போட்டியில் தோன்றினார்.[2] இதே ஆண்டு நடைபெற்ற ஒரு காளைச் சண்டையில் போட்டியிட்ட ரியோசு காளையின் இரண்டு காதுகளை எடுத்து இச்சாதனையைச் செய்த முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார். ஆனால் இச்சாதனைக்குப் பின்னர் மூன்று ஆண்டுகளாக அவருக்கு மற்றொரு காளைச் சண்டை இல்லாததால் இதை ஒரு வெற்றியாக அவர் கருதவில்லை. ரியோசு கல்விக்காக நேரத்தை செலவிட்டார். காளைச்சண்டை என்ற இலட்சியம் கொண்டிருக்காவிட்டல் தான் ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை செய்யக்கூடும் என்று பயந்தார். விளையாட்டில் குறைவான கட்டுப்பாடுகள் உள்ள பெருவில் இவர் காளைச் சண்டையை தேர்ந்தெடுத்தார்.[3]
2015 ஆம் ஆண்டில், 825 பேர் கொண்ட காளைச் சண்டை வீரர்கள் தேசியப் பட்டியலில் உள்ள ஆறு பெண் காளைச் சண்டை வீரர்களில் இவரும் [1] .ஒருவராக இடம் பெற்றார்.[3] 2016 ஆம் ஆண்டில் இவர் முர்சியாவில் உள்ள செகெகனில் மூத்த காளைச் சண்டை வீரர் எல் கார்டோப்சு மற்றும் அன்டோனியோ புவேர்டாவுடன் சேர்ந்து தோன்றினார்.[1]
2016 ஆம் ஆண்டில், இவரும் இவரது காதலரான இயோசு மானுவல் மாசும் டோரியோசுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். இவர்கள் இருவரும் ஒவ்வொரு நாளும் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். இப்பயிற்சியில் ஒரு சக்கர சாதனத்தை காளையாகப் பயன்படுத்தி இரண்டு மணி நேரம் அதனுடன் காளைச் சண்டை பயிற்சியும் அடங்கும். ] 2016 ஆம் ஆண்டு பிரித்தானிய ஒலிபரப்பு ஆணையத்தின் ஆண்டின் சிறந்த பெண்மணிகள் 100 பேர் பட்டியலில் ரியோசும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது ஐரோப்பிய பெண்களில் இவர் மட்டுமே எசுப்பானியர் ஆவார். 820 காளைச் சண்டை வீரர்களில் இடம்பெற்றிருந்த நான்கு பெண்களில் இவர் ஒருவர் மட்டுமே எசுப்பானியர் என்று பிபிசி நிறுவனம் மேலும் பெருமைபடுத்தியது. "பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தை நான் நம்புகிறேன். ஒவ்வொருவரும் தாம் என்னவாக இருக்கவேண்டும் மற்றும் வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதற்காக போராட வேண்டும். என்ற ரியோசின் சொற்களை அந்நிறுவனம் மேற்கோள் காட்டியும் சிறப்பித்தது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Corrida toros fiestas Alcañiz, La Comarca.tv, Retrieved 26 November 2016
- ↑ 2.0 2.1 Conchi Rios பரணிடப்பட்டது 2016-11-27 at the வந்தவழி இயந்திரம், TauroWeb.es, Retrieved 26 November 2016
- ↑ 3.0 3.1 3.2 La última torera de España, Elmundo.es, 23 November 2016, David López Canale, Retrieved 26 November 2016
- ↑ "BBC 100 Women 2016: Who is on the list?". பிபிசி. 21 November 2016. பார்க்கப்பட்ட நாள் 7 December 2016.
- ↑ Press release, 23 November 2016, El Mundo, Retrieved 26 November 2016
புற இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Conchi Ríos தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.