கொடிக்கால்பாளையம்
கொடிக்கால்பாளையம் (Kodikkalpalayam) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டதின் தலைநகரான திருவாரூர் நகராட்சியின் ஒரு பகுதி ஆகும்.[1] இந்த நகராட்சிப் பகுதிக்குள் அடங்கியதாக திருவாரூர் நகராட்சியின் வார்டு எண்கள்: இரண்டு,மூன்று, நான்கு, ஐந்து,ஆறு உள்ளது. மேலும் திருவாரூர் நகராட்சி 2022 ஆம் ஆண்டு நடந்த நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட வார்டு முறையின் கீழ் நடைபெற்றது.
இருப்பிடம்
தொகுஇந்த பகுதியானது மாவட்டத் தலை நகரான திருவாரூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் (வடக்கில்) அமைந்துள்ளது. கொடிக்கால்பாளயம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டமான திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்டு உள்ள ஒரு நகரப் பகுதி. இப்பகுதி திருவாரூரிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டிணத்தில் இருந்து 25 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து மற்றும் மயிலாடுதுறையில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் , தஞ்சாவூரில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கொடிக்கால்பாளையத்துக்கு அருகிலுள்ள வானூர் நிலையம் திருச்சிராப்பள்ளி \ காரைக்கல் வானூர்தி நிலையங்களாகும். மேலும் அருகிலுள்ள தொடருந்து நிலையமாக திருவாரூர் சந்திப்பு தொடருந்து நிலையம் உள்ளது. கோடிக்கால் பாளையத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகம் 25 கி.மீ தொலைவில் உள்ளது.
மக்களின் தொழில்
தொகுஇங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் வெளிநாடுகளில் வேலை தேடுகிறவர்களாக உள்ளனர். மற்றவர்கள் சுற்றி உள்ள கிராமங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறு கடைகளை நடத்துகிறவர்களாக உள்ளனர். கடந்த தசாப்தம் வரை, 80 சதவீத மாணவர்கள் உயர்கல்வியைத் தவிர்ப்பவர்களாகவும், தங்களின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வளைகுடா நாடுகளில் வேலைகளைத் தேர்ந்தெடுத்தனர். ஆச்சரியம் என்னவென்றால், சிந்தனை மாற்றத்தால் கல்வியின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினர் உணர்ந்தவர்களாக மாறியுள்ளனர். தற்போதெல்லாம் இளைய தலைமுறையினர் தங்கள் பட்டங்களை முடித்து அதற்கும் மேலாக செல்ல தயாராக உள்ளனர்.
இளைஞர்கள்
தொகுமுந்தைய தலைமுறை மக்கள் போதுமான தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்களாகளாக இருந்ததால், அவர்கள் அன்றாட தகவல்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை, ஆனால் இந்த தலைமுறையினர் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பல இளைஞர்கள் கிராமங்களில் இருந்தகொண்டே தினசரி செய்திகளை சமூக ஊடகங்கள் வழியாக தெரிவிக்கின்றனர். அதில் சில
வரலாறு
தொகுமாவட்டத்தின் இந்த பகுதி பெரும்பாலும் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களால் நிறைந்துள்ளது. இருப்பினும் இப்பகுதியில் பிற சமய மக்களும் ஆதிகுடிகளும் உள்ளனர். இந்த பிராந்தியத்தின் வரலாறானது திரு. எலியாசின் இஷாக் அவர்கள் எழுதிய சிரார் கொடிநகர் என்ற நூலில் இருந்து அறியப்படுகிறது. இந்த நூலாசிரியரான எலியாசின் இஷாக் இந்த கிராமத்திலிருந்து வந்த நன்கு அறியப்பட்ட இரண்டாவது பட்டதாரி ஆவார்.
திருவாரூரின் வரலாற்றில் கொடிக்கால்பாளையத்தின் வரலாறு நீண்ட கால அளவைக் கொண்டுள்ளது, இங்கு இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் இப்போது கொடிக்கல்பாளயம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் குடியேறிய காலத்தில் சோழ மன்னரால் இப்பகுதி ஆட்சி செய்யப்பட்டது.
இந்த அகன்ற பிராந்தியப் பகுதியானது இந்த கிராமத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. இந்த கிராமத்தைச் சுற்றிய பகுதிகளில் வெற்றிலை பயிரிடப்பட்டதால் அதாவது வெற்றிலைக் கொடி பயிரிட்டதால், இந்த கிராமமானது பெயர் கொடிகால்பாளயம் என்ற பெயரைப் பெற்றது.
முந்தைய காலத்திலேயே இந்த கிராமத்தில் புதியதாக மின்சார வாரிய அலுவலகம் அமைக்கப்பட்டது. இப்போதும் இந்த கிராமத்தில் சில வாரியத்துக்கு சொத்துக்கள் சில உள்ளன.
இந்த சிற்றூரில் பொருவாக பின்பற்றப்படும் சமயமாக இசுலாம் உள்ளது. நகரத்தின் இந்தப் பகுதியியல் நான்கு பள்ளிவாசல்கள் உள்ளன.
பள்ளிகள்
தொகுநகரின் இந்த பகுதியில் மூன்று பள்ளிகள் கல்வி அளித்து வருகின்றன. 1975 ஆம் ஆண்டு வரை நடுநிலை பள்ளியாக இருந்ததை தரம் உயர்த்தும் போது உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. மேலும் ஊர் ஜமாஅத் நிர்வாகிகள் முயற்சி காரணமாக மேல்நிலைப் பள்ளியாக 2007ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. மேலும் ஒரு நகராட்சி தொடக்கப்பள்ளியும், முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் துணை நிறுவனமான மத்லபுல் கைராத் மழலையர் மற்றும் தொடக்க பள்ளியும் 04.06.2006 அன்று முதல் இயங்கி வருகிறது. இப்போது எதிர்காலத் திட்டமாக மகளிர் உயர்நிலைப்பள்ளி விரைவில் நிறுவப்படவுள்ளது.
மேலும் தெற்கு தெரு ஹாஜி தி.இப்ராம்சா ராவுத்தர் பெண்கள் அரபிக் கல்லூரி 2016ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
அஞ்சல் அலுவலகம்
தொகு1915 ஆம் ஆண்டில் கொடிக்கால்பாளயம் 610001 அஞ்சல் அலுவலகம் தொடங்கப்பட்டது. 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இது செயல்பட்டுவருகிறது. அஞ்சல் அலுவலகத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக 2015 சனவரி 22 அன்று சிறப்பு அஞ்சல்தலை கண்காட்சியை மாதலபுல் கைரத் பள்ளி மற்றும் திருவாரூர் நகர அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தி கொண்டாடினர். இதன் சிறப்பு நேரடி ஒளிபரப்பு முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சியான புத்தியதலைமுறை காலை 10 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பியது. மேலும் இந்த அஞ்சல் அலுவலகத்திற்கான சிறப்பு கருத்தரங்கும்ம் 100 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.