கொடி ஆடு

கொடி ஆடு என்பது தமிழகத்தின் ஒரு வெள்ளாடு இனமாகும். [1] இவை தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் கருங்குளம் போன்ற பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றன. இவ்வாட்டின் உடல் அமைப்பு மெலிந்து காணப்படும். நீண்ட கால்களைக் கொண்டு உயரமாகவும் இவற்றின் கொம்புகள் நல்ல நீளமாகவும், பார்க்க கம்பீரமாகவும் இருக்கும். காதுகள் நடுத்தரஅளவில் வெளிப்புறமாக வளைந்திருக்கும். இக்கிடா ஆட்டின் எடை 37 கிலோ மற்றும் பெண் ஆட்டின் எடை 31 கிலோ கொண்டதாக இருக்கும். இந்த ஆடுகளில் கரும்போறை, செம்போறை என்று இரண்டு வகைகள் உள்ளன. கரிய நிற உடலில் வெள்ளைப் புள்ளிகளும், வெள்ளை உடம்பில் கருப்புப் புள்ளிகளும் இருந்தால் அவை கரும்போறை. சிவப்பு நிற உடம்பில் வெள்ளைப் புள்ளிகளும், வெள்ளை உடம்பில், சிவப்புப் புள்ளிகளும் இருந்தால் செம்போறை எனப்படுகின்றன.[2] இவை ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனக்கூடியன.[3] கொடி ஆட்டின் காலும் கொம்பும் மிக நீளமாக இருக்கும். பிறந்து 15 மாதங்களில் மூன்று அடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். பெண் ஆடு பிறந்து ஏழு மாதங்களிலேயே 15 கிலோ எடைவரை வளர்ந்துவிடும். அதேகாலத்தில் கிடா ஆடு 20 கிலோ எடைக்கு வந்துவிடும். இறைச்சிக்காகவே கொடி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.[4] தமிழ்நாட்டில் 2016 ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 67 ஆயிரம் கொடி ஆடுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்தொகு

  1. "குறைந்த செலவில், அதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர்!". தினமணி (2016 மார்ச் 24). பார்த்த நாள் 20 மே 2016.
  2. "வெள்ளாட்டு இனங்கள்". தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகக் கால்நடை பராமரிப்புத் துறை. பார்த்த நாள் 14 மே 2016.
  3. "வெள்ளாட்டு இனங்கள்". Jamsetji Tata National Virtual Academy. பார்த்த நாள் 20 மே 2016.
  4. டி. கார்த்தி (2018 மார்ச் 10). "விறுவிறு வளர்ச்சி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 1 ஏப்ரல் 2018.
  5. "2 ஆட்டினங்களுக்கு தேசிய அங்கீகாரம்". கட்டுரை. தீக்கதிர் (2016 செப்டம்பர்). மூல முகவரியிலிருந்து 2019-02-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 பெப்ரவரி 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடி_ஆடு&oldid=3241800" இருந்து மீள்விக்கப்பட்டது