கொடுக்குச் செடி ஜென்லிசியா
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ கொடுக்குச் செடி உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
ஜென்லிசியா ரிப்பன்ஸ் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
துணைப்பேரினம்: | |
இனம்: | ஜெ.ரிப்பன்ஸ்
|
இருசொற் பெயரீடு | |
ஜென்லிசியா ரிப்பன்ஸ் Benj. (1847) | |
வேறு பெயர்கள் | |
|
ஜென்லிசியா ரிப்பன்ஸ் என்ற ஒரே ஒரு செடி மட்டும் இந்த இனத்தில் உள்ளது. இது மிகச்சிறிய பூச்சியை உண்ணும் தாவரமாகும்.
வளரியல்பு
தொகுஇது ஆழமற்ற நீரில் வாழ்கிறது. இதன் அடிப்பகுதியில் மட்டத்தண்டு கிழங்கு உள்ளது. இதில் வெர் இல்லை. இச்செடி நீரின் அடிப்பகுதியில் வளர்கிறது. ஆனால் பூக்கள் நீருக்கு மேலே வருகிறது. மட்டத்தண்டு கிழங்கை ஒட்டி அடிப்பகுதியில் இலைகள் ரோஜாப்பூ இதழ் அடுக்கில் அமைந்துள்ளன. இதில் இரண்டு வகையான இலைகள் கரண்டி வடிவத்தில் இருக்கும். மற்றொரு வகை இலை பூச்சியைப் பிடிக்கும் பொறியாக செயல்படுகிறது. பூச்சியைப் பிடிக்கும் குழாய் வடிவ இலைகள் நேரடியாக மட்டத் தண்டு கிழங்கோடு இணைந்து இருக்கும். இது நீரின் கீழே தொங்கி கொண்டு இருக்கும். இந்த இலைகள் மிகச் சிறியதாகு 1 செ.மீ. நீளம் மட்டுமே உடையது. இதன் அடிப்பகுதியில் சிறிய காம்பு கெட்டியாக இருக்கும். இதன் மையப் பகுதி ஊதிப்போய் பை போல் இருக்கும். இதன் மேல் பகுதி இரண்டாக பிரிந்து கை போல் காணப்படும். இந்தக் குழாய் வடிவ சாடி மேல் நாடுகளில் ஈல் (விலாங்கு மீன்) என்ற ஒரு வகை மீனைப் பிடிக்க பயன்படும் பொறி போலிருக்கும். இந்த இலைகள் நண்டின் முன் பகுதியில் நீட்டிக்கொண்டிருக்கும் கொடுக்குபோல் உள்ளது. இந்த கைகள் சுருள்போல் முறுக்கிக் கொண்டு இருக்கும். இந்த கைகளின் மேல் பகுதியில் மிகச்சிறிய துவாரங்கள் இருக்கும்.
பூச்சிகளை செரித்தல்
தொகுகுழாயின் மேல்பகுதியில் பல சுரப்பிகள் உள்ளன. இதில் தேன் போன்ற ஒட்டக்கூடிய திரவம் சுரக்கிறது. பையின் உள்பகுதியில் பல முடிகள் கீழ்நோக்கி வளைந்து இருக்கும். இதற்கு கீழே பூச்சிகளை செரிக்கக் கூடிய சீரண சுரப்பிகள் உள்ளன. துவாரத்தின் வழியாக உள்ளே செல்கின்ற பூச்சிகள் பையின் அடியில் உள்ள சீரண சுரப்பிகளால் சுரக்கப்படும் செரிப்பு நீரால் செரிக்கப்படுகிறது.
காணப்படும் பகுதிகள்
தொகுபெரும்பாலான செடிகள் பிரேசில் நாட்டில் வளர்கிறது. மற்றவை தென் அமெரிக்காவில் வளர்கிறது. இவற்றில் பெரும்பாலான செடிகள் சதுப்புகளிலும், நீர் ஆழமில்லாத பகுதிகளில் வளர்கிறது
மேற்கோள்கள்
தொகு[1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001
- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.