கொடுதி வழிபாடு

கொடுதி வழிபாடு என்பது தீமைதரும் தெய்வங்களுக்குப் படையலிடுவதைக் குறிப்பதாகும்.[1] இவ்வாறு படையல் இடுவதால் தீமை தரும் தெய்வங்கள் துன்பம் தராமல் சாந்தியடையும் என்று நம்புகின்றனர்.

பிரிவுகள்

தொகு

விவசாயக் கொடுதி, வேட்டைக் கொடுதி என இருவகைப் பிரிவுகளில் கொடுதி சடங்குகள் உள்ளன. [1]

விவசாயக் கொடுதி என்பது கொடுதிச் சடங்குகளில் உற்பத்தியை மையமாகக் கொண்டு நடத்தப்படுபவை. வேட்டைக் கொடுதி என்பது வேட்டையில் பொருள் கிடைப்பதின் பொருட்டு நடத்தப்படுபவை.

விவசாயக் கொடுதி

தொகு
  • மீனக்கொடுதி - விவசாயத்துக்குத் திட்டமிடும் வழிபாடு [2]
  • கச்சிக் கொடுதி - அறுவடைக்கு முன்னர் செய்யப் படும் வழிபாடு [2]
  • பூக்கொடுதி - அறுவடை செய்த தானியத்தில் விதைகளைச் சேகரிப்பதற்கான வழிபாடு [2]

பிற கொடுதி

தொகு
  • மகரக் கொடுதி - வன தெய்வங்களுக்காக நடத்தப்படும் வழிபாடு [2]
  • அம்மங்கொடுதி - அம்மை போன்ற நோய்கள் தாக்கும் காலங்களில், பெண் தெய்வத்துக் காக நடத்தப்படுவது [2]

கார்த்திகை கொடுதி

தொகு

மேற்கு தொடர்ச்சி மலையயில் வாழும் பழங்குடிகளான காணி மக்கள் கார்த்திகை மாதம் முழுவதும் கொடுதி வழிபாடு செய்கின்றனர். [3] எனவே கார்த்திகை கொடுதி எனவும் அழைக்கப்படுகிறது. [4]

வனதேவதைகளைத் திருப்திப்படுத்தவும், நோய் அண்டாமலிருக்கவும் இவ்வழிபாட்டினை நடத்துகின்றனர். இவ்வழிபாட்டினை நடத்தும்போது கார்த்திகைச் சாற்றுப்பாடல் பாடுவது வழக்கம். இவ்வழிபாட்டு விழாவினை அவர்கள் நடத்தும் அனைத்துவிழாக்களை விடவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஒவ்வொரு குடியிருப்பிலும் கொண்டாடுகின்றனர்.

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் - மகாகவி பாரதியார் அச்சகம் - பக்கம்- 277
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "மண்... மக்கள்... தெய்வங்கள்! - 7". https://www.vikatan.com/. {{cite web}}: External link in |website= (help)
  3. "காணி மக்களின் கார்த்திகை பொங்கல்". Dinamalar.
  4. "'காணி பழங்குடிகள்' - மேற்கு தொடர்ச்சி மலை பூர்வகுடிகளின் அற்புத வாழ்க்கை!". Samayam Tamil.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுதி_வழிபாடு&oldid=3708378" இலிருந்து மீள்விக்கப்பட்டது