கொட்டக்கரை தம்புரான் நினைவு கலை அருங்காட்சியகம்
கொட்டக்கரா தம்புரான் நினைவு கலை அருங்காட்சியகம் (மலையாளம் : കൊട്ടാരക്കരത്തമ്പുരാൻ സ്മാരക ക്ലാസിക്കൽ കലാ മ്യൂസിയം) என்பது இந்தியாவின், கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரையில் அமைக்கபட்டுள்ள ஒரு கலை அருங்ஙாட்சியகம் ஆகும்.
1983 இல் தொடங்கப்பட்ட இந்த கலை அருங்காட்சியகமானது 2010 ஏப்ரல் 15 இல் இந்த ஊரில் உள்ள கோயிலகத்திற்கு (அரண்மனை) மாற்றப்பட்டதுது.
இந்த அருகாட்சியகமானது கேரளத்தின் பாரம்பரிய நடனங்களை மேம்படுத்துவதற்காக அமைக்கபட்ட அருங்காட்சியகம் ஆகும். இது குறிப்பபாக கதகளி, மோகினியாட்டம் போன்ற ஆட்டங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்களை அவற்றின் அசலான உடையில் காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் இங்கு கதகளியிலும், மோகினியாட்டத்திலும் பயன்படுத்தப்படும் கை முத்திரைகள், பரத நாட்டியத்தின் 108 கரணங்கள்[1] மற்றும் இந்த துறையில் சிறந்த மேதைகள் பயன்படுத்திய ஆபரணங்கள், உடைகள் புத்தகங்கள் போன்றவை காட்சிப்படுத்தபட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் ஐந்து காட்சியகங்கள் உள்ளன அவை கை சைகைகள் காட்சியகம், கதகளி ஆடை காட்சியகம், நாணய காட்சியகம், சிற்பக் காட்சியகம், பெருங்கற்கால காட்சியகம் போன்றவை ஆகும். இந்த காட்சியகத்தில் ஐந்து முகம் கொண்ட முழவு போன்ற சில அரிய இசைக்கருவிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
தொகுஇந்த அருங்காட்சியகமானது கோட்டாரக்கரை தம்புரான் பிறந்த கோயிலகத்தில் (அரண்மனை) துவக்கபட்டது. இந்த அரண்மனை வேனாடு வம்சத்தின் ஒரு கிளையான இளையதத்து ஸ்வரூபத்தின் தலைமை இடமாக செயல்பட்டது. 350 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான இந்த அரண்மனை கொல்லம் மாவட்டத்தில் கோட்டாரக்கரை கணபதி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.[2]