கொத்தங்குடி சுந்தரேசுவரர் கோயில்

கொத்தங்குடி சுந்தரேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் நாச்சியார்கோவில் புறநகர்ப் பகுதிக்கு அருகிலுள்ள கொத்தங்குடி கிராமத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயில் ஒரு தேவார வைப்புத் தலமாகும்.[2] திருஞானசம்பந்தரால் புகழப்பட்ட கோயில் இது.[3] 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் நாள் இக்கோயிலின் கும்பாபிசேகம் நடைபெற்றது.[4]

கொத்தங்குடி சுந்தரேசுவரர் கோயில்
கொத்தங்குடி சுந்தரேசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
கொத்தங்குடி சுந்தரேசுவரர் கோயில்
கொத்தங்குடி சுந்தரேசுவரர் கோயில்
சுந்தரேசுவரர் கோயில், கொத்தங்குடி, தஞ்சாவூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°54′46″N 79°28′15″E / 10.9129°N 79.4707°E / 10.9129; 79.4707
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
அமைவிடம்:கொத்தங்குடி, நாச்சியார்கோவில்
ஏற்றம்:66 m (217 அடி)
கோயில் தகவல்
மூலவர்:சுந்தரேசுவரர்
தாயார்:மீனாட்சி அம்மன்
வரலாறு
கட்டிய நாள்:1,300 வருடங்கள் தொன்மை வாய்ந்தது[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 66 மீட்டர் உயரத்தில், 10°54′46″N 79°28′15″E / 10.9129°N 79.4707°E / 10.9129; 79.4707 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கொத்தங்குடி சுந்தரேசுவரர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் தாயார் மீனாட்சி அம்மன் ஆவர். மகாவிஷ்ணு, மகாலட்சுமி, பிரம்மா, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், கங்கா காவிரி விநாயகர், விநாயகர், ஐயப்பன், சூரியன், சந்திரன், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், காஞ்சி மகாபெரியவர், நவக்கிரகங்கள் ஆகியோரும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Suriyakumar Jayabalan. "தலை சாய்ந்து காட்சியளிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர்". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.
  2. மாலை மலர் (2021-04-27). "கொத்தங்குடி மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.
  3. "Temple where Sundareswara is a cradle baby". The Hindu (in Indian English). 2020-03-12. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.
  4. "கொத்தங்குடி மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா". Dinamalar. 2017-04-06. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.
  5. "Arulmigu Sundareswarar Engira Soundareeswaraswamy temple, Kothangudi - 612602, Thanjavur District [TM047204].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.

வெளி இணைப்புகள்

தொகு