கொத்தடிமை முறை (இந்தியா)

இந்தியாவில் கொத்தடிமை முறை (Debt bondage in India) 1976 ஆம் ஆண்டு சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டது. ஆனால் அந்தச் சட்டம் அரசாங்கத்தால் பலமாக அமல்படுத்தப்படாததால் கொத்தடிமை முறை இன்றும் நடைமுறையில் உள்ளது.[1] கொத்தடிமைக் கூலி என்னும் முறை கடன் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான கடுமையான பணம் மற்றும் சக்தி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக உருவாயிற்று. கடன் வாங்கியவர் கடனை அடைக்க இயலாமல் அடிமை போன்ற சுரண்டலுக்கு உள்ளவார். இப்படிப்பட்ட சுரண்டலுக்கு வழிவகுக்கும் கடன் மற்றும் தொழிலாளர் ஒப்பந்தங்கள் இதில் பிணைந்து ஈடுபடுகிறது.[1]

உலகில் மிக அதிகமாக அடிமை முறை நடைமுறையில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

தலித் இயக்கத்தின் எழுச்சியும், 1949 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்ட அரசாங்கச்  சட்டமும்,[2] அத்துடன் தொண்டு நிறுவனங்களும் அரசு அலுவலகங்களும் தொழிலாளர் சட்டங்களை அமலாக்குவதற்கும் கொத்தடிமைக் கூலிகளை மீட்டு மறுவாழ்வளிப்பதற்காக செய்து கொண்டிருக்கும் பணிகளும் தான் இந்தியாவில் அடிமை தொழிலாளர்களின் குறைப்பிற்கு பங்களித்ததாகத் தெரிகிறது. இருப்பினும், சர்வதேசத் தொழிலாளர் அமைப்பால் வழங்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின்படி, இந்தியாவில் கொத்தடிமை முறையை ஒழிப்பதில் இன்னும் பல தடைகள் உள்ளதாகத் தெரிகிறது.[3][4]

கொத்தடிமை முறை

தொகு

சித்தார்த் காரா என்பவரின் மதிப்பீட்டின்படி, உலகில் பிணைக்கப்பட்ட தொழிலாளர்கள் அல்லது கொத்தடிமைகள் 84 முதல் 88% தெற்காசியாவில் தான் உள்ளனர்.[5] இந்தியாவில் கடன் அடிமைத்தனம் விவசாயப் பகுதிகளில் மிகவும் அதிகமாக உள்ளது. சிறு கடன்களை வாங்கிய விவசாயிகள், வருடத்திற்கு 100% கடனைத்தாண்டிய வட்டி செலுத்துகிறார்கள்.[1]

குழந்தைகள்

தொகு

குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, ஒரு நாட்டின் பொருளாதார நலன்களில் தீவிர பிரச்சினை இருப்பதை காட்டுகிறது.[6] இந்தக் குழந்தைகள் கடன் அடிமைத்தனத்துடன் பிணைக்கப்படும்போது நீண்டகால முதலாளித்துவ-அடிமை உறவு உருவாகிறது. குறைந்தபட்சம் அல்லது ஊதியம் இல்லாத இந்த அடிமைத்தன வேலை கடன் அடைத்து  தீர்ப்பதற்காக வாழ்நாள் முழுவதும் நீடிக்கவும் செய்கிறது.[7]

மதிப்பீடு

தொகு

பிரச்சனையின் மதிப்பீடுகள் வேறுபடுகின்றன. 1993-ன் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் 251,000 பிணைக்கப்பட்ட தொழிலாளர்கள் உள்ளதாக மதிப்பிட்டது,[8] ஆனால் பந்துவா முக்தி மோர்சா 20 மில்லியன் கொத்தடிமைகள் உள்ளனர் என்கிறது. 2003 ஆம் ஆண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வு, பட்டுத் தொழிற்துறையில் கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் எனும் ஒரு பெரிய பிரச்சனையை வெளியிட்டது.[9]

பங்களிப்புக் காரணிகள்

தொகு

என ஆசிரியரும் கல்வியாளருமான சித்தார்த் காரா நம்புகிறார்.[1]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "A $110 loan, then 20 years of debt bondage". CNN. June 2, 2011 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 12, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201112042406/https://thecnnfreedomproject.blogs.cnn.com/2011/06/02/a-110-loan-then-20-years-of-debt-bondage/. 
  2. Hart, Christine Untouchability Today: The Rise of Dalit Activism, Human Rights and Human Welfare, Topical Research Digest 2011, Minority Rights
  3. "International Dalit Solidarity Network: Key Issues: Bonded Labour".
  4. Ravi S. Srivastava Bonded Labor in India: Its Incidence and Pattern InFocus Programme on Promoting the Declaration on Fundamental Principles and Rights at Work; and International Labour Office,(2005). Forced Labor. Paper 18
  5. Kara, Siddharth (2012). Bonded Labor: Tackling the System of Slavery in South Asia. New York: Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231158480.
  6. "Magnitude of Child Labour in India" (PDF). Archived from the original (PDF) on 2013-10-08.
  7. "Incidence and Pattern" (PDF).
  8. "Statement by observer for India to the United Nations Working Group on Contemporary Forms of Slavery (para 81), report". பார்க்கப்பட்ட நாள் September 7, 2006.
  9. "SMALL CHANGE: Bonded Child Labor in India's Silk Industry". Human Rights Watch. January 2003. பார்க்கப்பட்ட நாள் September 7, 2006.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தடிமை_முறை_(இந்தியா)&oldid=3726797" இலிருந்து மீள்விக்கப்பட்டது