கொத்தவரை
கொத்தவரை Cyamopsis tetragonoloba | |
---|---|
கொத்தவரை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Eudicots
|
தரப்படுத்தப்படாத: | Rosids
|
வரிசை: | Fabales
|
குடும்பம்: | Fabaceae
|
பேரினம்: | Cyamopsis
|
இனம்: | C. tetragonoloba
|
இருசொற் பெயரீடு | |
Cyamopsis tetragonoloba (L.) Taub. | |
வேறு பெயர்கள் | |
Cyamopsis psoralioides L. |
கொத்தவரை அல்லது சீனி அவரை (தாவர வகைப்பாடு : Cyamopsis tetragonoloba ; ஆங்கிலம்:Guar / cluster bean) என்பது உணவாகப் பயன்படும் காய்களைக் கொண்ட தாவரம் ஆகும்.
உயிரியல்
தொகுகொத்தவரை செடி வகையைச் சேர்ந்தது. 3 முதல் 4 அடி உயரம் வளரக்கூடியது. கொத்தவரை மண்ணில் நைட்ரசன் சத்தை அதிகரிக்க செய்து மண்ணின் வளத்தை பெருக்குகிறது.
பயிரிடுதல்
தொகுதேவையான காலநிலை
தொகுமிதமான சூரிய ஒளியும், அதே நேரத்தில் மண்ணில் ஈரப்பதமான காலநிலையும் தேவை.[1]
தேவையான மண்வளம்
தொகுகொத்தவரை பல்வேறு வகையான மண் வகைகளில் வளரும் தன்மையுடையது.
அதிகமாகப் பயிரிடப்படும் இடங்கள்
தொகுஇது வடமேற்கு இந்தியாவிலும் பாக்கித்தானிலும் கூடுதலாகப் பயிரிடப்படுகிறது.
பயன்கள்
தொகுஇது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
- கொத்தவரங்காயில் புரதம் நிறைந்துள்ளது.
- நீரில் கரையும், சீரணத்திற்கு உதவும் நார்ச்சத்தும், உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு உதவும் நீரில் கரையாத நார்ச்சத்தும் இதில் உள்ளது.
- கொத்தவரங்காயில் போலிக் அமிலம் உள்ளதால் இதை கர்ப்பிணிப் பெண்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
- இதிலிருக்கும் கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- இரும்புச் சத்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.
- கொத்தவரங்காய் விதை மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது.இதை பொடி செய்து உட்கொண்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
- உடல் எடையையும் உடல் கொழுப்பையும் குறைக்கும்.
- மலச்சிக்கலையும் போக்கும்.
ஆதாரங்கள்
தொகு- ↑ Whistler R.L. and Hymowitz T. 1979. Guar: agronomy, production, industrial use and nutrition. Purdue University Press, West Lafayette