கொத்மலை அணை
கொத்மலை அணை (ஆங்கிலத்தில் Kotmale Dam, சிங்களத்தில் කොත්මලේ වේල්ල) இலங்கையில் உள்ள மகாவெலி கங்கை ஆற்றின் துணை ஆறான கொத்மலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓர் அணை ஆகும். இவ்வணை நீர்மின் உற்பத்திக்கும், நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள நீர்மின் நிலையம் இலங்கையின் இரண்டாம் பெரிய நீர்மின் நிலையமாகும். இங்குள்ள மூன்று விசையாழிகள் மூலம் பெறப்படும் இதன் மொத்த மின்னுற்பத்தித் திறன் 201 மெகாவாட் ஆகும். சுவீடன் அரசின் நிதியுதவியுடன் பெப்ரவரி 1979 ஆம் ஆண்டு தொடங்கிய இவ்வணையின் கட்டுமானம் 1985-இல் முடிக்கப்பட்டது.[1]
கொத்மலை அணை | |
---|---|
நாடு | இலங்கை |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | பெப்ரவரி 1979 |
உரிமையாளர்(கள்) | மகாவெலி ஆணையம் |
இணையதளம் http://www.mahawelicomplex.lk/kotdam.htm |
சான்றுகள்
தொகு- ↑ "கொத்மலை அணை". Archived from the original on 2020-09-26. பார்க்கப்பட்ட நாள் 2015-09-10.