முதன்மை பட்டியைத் திறக்கவும்

மகாவலி ஆறு அல்லது மகாவலி கங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். இது பீதுறுதாலகால ] இருந்து ஊற்றெடுத்து திருகோணமலையில் கடலில் சேர்கின்றது இது இலங்கையின் மிக நீளமான ஆறாகும், மேலும் நீரோட்டத்தின் படி முதலாவது பெரிய ஆறும் ஆகும். இந்த ஆற்று நீரைப் பயன்படுத்தி வேளாண்மையும் நீர்மின் உற்பத்தியும் பெருமளவில் நடைபெறுகிறது. சுமார் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலம் இவ்வாற்று நீரின் மூலம் பயிரிடப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.மகாவலி கங்கை என்பது சிங்கள மொழியில் மணற்பாங்கான பெரும் ஆறு எனப் பொருள் தரும்.இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 22282 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 40 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 10237 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் முதலாவது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]

மகாவலி ஆறு
Mahaweli Ganga by Gampola.jpg
மூலம் ஓட்டன் சமவெளி
வாய் திருகோணமலை
நீரேந்துப் பகுதி நாடுகள் இலங்கை
வாய் உயரம் கடல் மட்டம்
வெளியேற்றம் 8900 106கனமீட்டர்
நீரேந்துப் பகுதி 10237 சது.கி.மீ.

இலங்கையின் முக்கிய நீர்மின் திட்டங்கள் மகாவலியை மறித்துக் கட்டப்பட்ட அணைகள் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. இவற்றில் முக்கிய நீர்மின் திட்டங்கள்:

இவற்றுக்கு மேலதிகமாக பல நீர்பாசனத் திட்டங்களும் அவ்வாற்றில் அமைக்கப்பட்டுள்ளன:

  • மினிப்பே
  • பொல்கொல்லை
  • உல்கிட்டிய/ரக்கிந்தை
  • மாதுரு ஓயா

மேலும் பார்க்கதொகு

ஆதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாவலி_ஆறு&oldid=2129065" இருந்து மீள்விக்கப்பட்டது