கொனார்க் கடற்கரை

கொனார்க் கடற்கரை (Konark Beach) அல்லது சந்திரபாகா கடற்கரை (Chandrabhaga Beach) இந்தியாவின் கிழக்குக் கரையில் உள்ள ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை ஆகும். இது இந்தியாவின் சிறந்த கடற்கரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஒடிசாவின் பூரி மாவட்டம், கொனார்க் நகரில் சூரியக் கோவிலுக்கு கிழக்கே 3 கிமீ தொலைவிலும்,[1] புரி நகரில் இருந்து 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. சந்திரபாகா என முன்னர் அழைக்கப்பட்ட இக்கடற்கரை தொழுநோயாளிகளுக்கு இயற்கையான சிகிச்சை அளிக்கும் இடமாக கருதப்பட்டது. கோனார்க் கடற்கரை இந்தியாவின் முதல் நீலக் கொடி சான்றிதழைப் பெற்றது - இது சுற்றுச்சூழலுக்கு உகந்த சுத்தமான கடற்கரைகளுக்குக் கொடுக்கப்பட்ட குறிச்சொல், சுற்றுலாப் பயணிகளுக்கான பன்னாட்டுத் தரத்தின் வசதிகளைக் கொண்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Chandrabhaga Beach, Konark". Visit Odisha. Odisha Tourism. Archived from the original on 2 August 2012. பார்க்கப்பட்ட நாள் 31 May 2012.
  2. "Infographic: Chandrabhaga beach gets Blue Flag tag, here's what it means - Times of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொனார்க்_கடற்கரை&oldid=3902861" இலிருந்து மீள்விக்கப்பட்டது