கொப்பத்துப் பரணி

பரணி இலக்கியங்களில் கொப்பத்துப் பரணி காலத்தால் முந்தியது. நூலின் காலம் 11-ஆம் நூற்றாண்டு.

கொப்பம் என்பது கர்நாடக மாநிலம் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள ஊர். தற்போது கொப்பல் அழைக்கப்படுகிறது. கங்கை கொண்ட சோழனது இரண்டாவது மகன் இரண்டாம் இராசேந்திர சோழன். இவன் கொப்பத்தை வென்றதைப் பாடுவது இந்தப் பரணி நூல். கொப்பத்துப் போரின்போது சோழவேந்தனாக விளங்கியவன் முதலாம் இராசாதிராசன். இவன் கொப்பத்துப் போரில் யானைமீதேறிப் போரிட்டபோது கொல்லப்பட்டான். இதனால் இவனை ‘யானைமேல் துஞ்சிய தேவர்’ எனச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன.

மேலைச் சாளுக்கிய வேந்தன் ஆகவமல்லன் இவனை எதிர்த்துப் போரிட்டுக் கொன்றவன். கொல்லப்பட்ட சோழனின் தம்பி இரண்டாம் இராசேந்திரன் படைநடத்திப் போரில் வெற்றி கண்டான். இதனைப் பாடுவதே கொப்பத்துப் பரணி.

கொப்பத்துப் பரணி நூல் இப்போது கிடைக்கவில்லை. என்றாலும் இந்தப் பரணி நூல் பற்றிப் பின் வந்த இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. [1]


குறிப்பு

தொகு
  • கங்கை கொண்ட சோழன் (முதலாம் இராசேந்திரன்)
  • கங்கை கொண்ட சோழனின் முதல் மகன் முதலாம் இராசாதிராசன்
  • கங்கை கொண்ட சோழனின் இரண்டாம் மகன் இரண்டாம் இராசேந்திரன்

கருவிநூல்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
    • கலிங்கத்துப் பரணி 191,
    • விக்கிரம சோழன் உலா 19-20,
    • வீரசோழிய உரை ‘தற்றுற்று அன்று வெம்போர்’ எனத் தொடங்கும் விருத்தம்,
    • ’திருமருவிய செங்கோல் வேந்தன்’ எனத் தொடங்கும் இரண்டாம் இராசேந்திரன் மெய்க்கீர்த்தி
    • இராசராசன் உலா கண்ணி 25
    • ”ஒண்திறல் இரட்டமண்டலம் எய்தி” எனத் தொடங்கும் ஓராசேந்திரன் மெய்க்கீர்த்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொப்பத்துப்_பரணி&oldid=3704201" இலிருந்து மீள்விக்கப்பட்டது