கொமரம் பீம்

இந்திய பழங்குடியின தலைவர் (1900-1940)

கொமரம் பீம் (Komaram Bheem) (அக்டோபர் 22 1901 - அக்டோபர் 27 1940) இவர் ஐதராபாத்தின் விடுதலைக்காக ஆசாப் ஜாகி வம்சத்திற்கு எதிராக போராடிய ஒரு பழங்குடித் தலைவராக இருந்தார். [1] கொமரம் பீம் அபோதைய ஆளும் ஐதராபாத் நிசாமின் அரசாங்கத்திற்கு எதிராக கெரில்லா போரில் பகிரங்கமாக போராடினார். இவர் நீதிமன்றங்கள், சட்டங்கள் மற்றும் வேறு எந்த நிசாம் அதிகாரத்தையும் மீறி, காடுகளின் வாழ்வாதாரத்தை விட்டு வெளியேற மறுத்தார். இவர் நிசாம் நவாபின் வீரர்களுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்தினார். மேலும் பாபி ஜாரியை அடைவதற்கு கடைசி மூச்சு வரை போராடினார். [2] [3] [4] இவரது வாழ்க்கை வரலாற்றை முதலில் தெலுங்கானா கிளர்ச்சியின் தோழர் புச்சலப்பள்ளி சுந்தரையா என்பவர் எழுதியுள்ளார்.

கொமரம் பீம்
ஐதராபாத்தில் மொமாரம் பீமின் சிலை.
பிறப்பு1900 அல்லது 22 அக்டோபர் 1901
சங்கேபள்ளி, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய தெலங்காணா, இந்தியா)
இறப்பு1940 (வயது 39 அல்லது 40)
ஜோடேகாட், ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1928–1940
அறியப்படுவதுஐதராபாத் இராச்சியத்திற்கு எதிரான புரட்சியாளர்

வாழ்க்கை

தொகு

பின்னர் நிசாமின் ஆட்சியில் தெலங்காணா மாநிலத்தில் உள்ள கொமரம் பீம் மாவட்டத்தின் காடுகளில் கோண்ட் பழங்குடியினரின் (கொய்தூர்) குடும்பத்தில் பீம் பிறந்தார். இவர் வெளி உலகிற்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. முறையான கல்வியும் இல்லை. [5] ஆதிவாசிகளின் உரிமைகளை உறுதிப்படுத்தியதற்காக இவரது தந்தை வன அதிகாரிகளால் கொல்லப்பட்டபோது கொமரம் பீமுக்கு வெறும் 15 ஆண்டுகள் தான் ஆகியிருந்தது. இவரது தந்தை இறந்த பிறகு, பீமின் குடும்பம் சர்தாபூர் கிராமத்திற்கு குடிபெயர்ந்தது.

மைபாத்தி அருண்குமார் என்பவர் தனது புத்தகத்தில் இவ்வாறு விவரிக்கிறார்: “ஜங்லாட் காவல்துறை, வணிகர்கள் மற்றும் சமீன்தார்களால் கோண்ட் மற்றும் கோலம் ஆதிவாசிகளை சுரண்டுவதற்கான கதைகளை பீம் கேட்டு வளர்ந்தார். உயிர் பிழைப்பதற்காக, வணிகர்கள் சுரண்டப்படுவதிலிருந்தும், அதிகாரிகளை மிரட்டி பணம் பறிப்பதிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயன்ற பீம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்தார். போடு விவசாயத்திற்குப் பிறகு உற்பத்தி செய்யப்படும் பயிர்கள், நிசாம் அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டன. ஜங்லாட்களின் நிலம் தங்களுடையது என்று வாதிட்டனர். அவர்கள் ஆதிவாசி குழந்தைகளின் விரல்களை வெட்டி, சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதாக குற்றம் சாட்டினர். வரி பலவந்தமாக வசூலிக்கப்பட்டது. இல்லையெனில் தவறான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விவசாயத்திலிருந்து கையில் எதுவும் இல்லாமல் போன பிறகு, மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறத் தொடங்கினர். இத்தகைய சூழ்நிலையில், ஆதிவாசிகளின் உரிமைகளை கேட்டு போராடியதற்காக இவரது தந்தை வன அதிகாரிகளால் கொல்லப்பட்டார். பீம் தனது தந்தை கொலை செய்யப்பட்டதால் கிளர்ந்தெழுந்தார். தந்தை இறந்த பிறகு, இவரது குடும்பம் சங்கேபள்ளியில் இருந்து சர்தாபூருக்கு குடிபெயர்ந்தது.”[6]

இவர் " ஜல், ஜங்கிள், ஜமீன் " (நீர், காடு, நிலம்) என்ற முழக்கமிட்டார். வரையறையின்படி, காடுகளில் வாழும் மக்களுக்கு வனத்தின் அனைத்து வளங்களிலும் உரிமை இருக்க வேண்டும் என்பதாகும். [7]

ஆளுமை

தொகு

கொமரம் பீம் கோண்டு ஆதிவாசி சமூகத்தினரிடையே ஒரு தெய்வமாக கருதப்படுகிறார். மேலும் கோண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் அஸ்வயுஜா பௌர்ணமியில் பீமின் நினைவு ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறாரகள். அங்கு இவரது வாழ்க்கை மற்றும் போராட்டத்தை நினைவுகூரும் விதமாக ஜோடேகாட்டில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. [8] 2011 ஆம் ஆண்டில் டேங்க் பண்டில் பீம் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இது பிப்ரவரி 2, 2012 அன்று செயல்படுத்தப்பட்டது.

பிரசித்தி பெற்ற கலாச்சாரம்

தொகு

கொமரம் என்ற தலைப்பில் பழங்குடித் தலைவரை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம், ஆந்தில மாநில நந்தி விருதுகள் (1990): தேசிய ஒருங்கிணைப்பு குறித்த சிறந்த திரைப்படம் மற்றும் அறிமுக படத்தின் சிறந்த இயக்குனர் போன்ற பல விருதுகளைப் பெற்றது.

72 வாரங்கள் வெற்றிகரமாக ஓடிய "வீரபீம்" என்ற தலைப்பில் கொமரம் பீம் பற்றிய ஒரு தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பப்பட்டது. பிரபல இயக்குனர் / தயாரிப்பாளர் நாகபாலா சுரேஷ்குமார் இயக்கிய இந்த தொலைக்காட்சித் தொடர் சிறந்த ஆந்திர அரசாங்கத்தால் 4 நந்தி விருதுகளை வென்றது. [9]

இராஜமௌலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் கொமரம் பீம் வேடத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். [10]

குறிப்புகள்

தொகு
  1. "Tributes paid to Telangana martyrs" இம் மூலத்தில் இருந்து 2006-10-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061028163647/http://www.hindu.com/2005/09/18/stories/2005091816590500.htm. 
  2. "BJP demands inclusion of komaram bheem biography in curriculum". The Siasat Daily. 22 October 2010.
  3. Rao. "Komaram Bheem project launch today". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/komaram-bheem-project-launch-today/article2640810.ece. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-19. பார்க்கப்பட்ட நாள் 2020-01-07.
  5. "Biography of Great Freedomfighter komaram Bheem" (PDF). etelangana.org.
  6. Poyam, Akash (2016-10-16). "Komaram Bheem: A forgotten Adivasi leader who gave the slogan 'Jal Jangal Jameen'". Adivasi Resurgence (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
  7. Poyam, Akash (2016-10-16). "Komaram Bheem: A forgotten Adivasi leader who gave the slogan 'Jal Jangal Jameen'". Adivasi Resurgence (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
  8. Poyam, Akash (2016-10-16). "Komaram Bheem: A forgotten Adivasi leader who gave the slogan 'Jal Jangal Jameen'". Adivasi Resurgence (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
  9. "The Komaram Bheem story - The Times of India" இம் மூலத்தில் இருந்து 2013-10-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131028151557/http://articles.timesofindia.indiatimes.com/2012-12-10/news-interviews/35725739_1_feature-film-komaram-bheem-allani-sridhar. 
  10. Kanoj, Priyanka (14 March 2019). "Who is Komaram Bheem? The freedom fighter on whom SS Rajamouli's RRR is based upon". International Business Times, India Edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொமரம்_பீம்&oldid=3551753" இலிருந்து மீள்விக்கப்பட்டது