கொம்தார் கோபுரம்
கொம்தார் கோபுரம் என்பது (மலாய்: Kompleks Tun Abdul Razak (KOMTAR); ஆங்கிலம்: KOMTAR Tower; சீனம்: 光大大厦) மலேசியா, பினாங்கு மாநிலத்தில், ஜோர்ஜ் டவுன் மாநகரத்தில் அமைந்து உள்ள உயரமான கோபுரம் ஆகும். இதுவே பினாங்கு மாநிலத்தின் மிக உயரமான வானளாவிய கட்டிடம்; மற்றும் மலேசியாவில் பதினொன்றாவது உயரமான கட்டிடம்.
கொம்தார் கோபுரம் KOMTAR Tower | |
---|---|
கொம்தார் கோபுரம் | |
மாற்றுப் பெயர்கள் | காம்ப்ளக்ஸ் துன் ரசாக் |
பதிவு உயரம் | |
Tallest in மலேசியா from 1986 to 1987[I] | |
முந்தியது | டத்தோ ஓன் கோபுரம் |
பிந்தையது | கோலாலம்பூர் மே வங்கி கோபுரம் |
பொதுவான தகவல்கள் | |
வகை | சில்லறை விற்பனை போக்குவரத்து மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் |
முகவரி | ஜோர்ஜ் டவுன், 10000 பினாங்கு, |
நகரம் | ஜோர்ஜ் டவுன் |
நாடு | மலேசியா |
கட்டுமான ஆரம்பம் | 1974 |
நிறைவுற்றது | 1986 |
புதுப்பித்தல் | 2013 – 2017 |
செலவு | 207 மில்லியன் |
உயரம் | |
கூரை | 248.7 m (816 அடி) |
மேல் தளம் | 68 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 68 |
தளப்பரப்பு | 71,080 m2 (765,100 sq ft) |
உயர்த்திகள் | 26 மின்தூக்கிகள் (Mitsubishi) (Fujitec Elevators) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | கட்டிடக் கலைஞர்கள் குழு 3 (Jurubena Bertiga International Sdn Bhd) |
அமைப்புப் பொறியாளர் | ஓவ் அரூப் பார்ட்னர்ஸ் (Ove Arup & Partners) |
புதுப்பித்தல் குழு | |
புதுப்பித்தல் நிறுவனம் | ஒன்லி ஒன் குரூப் (Only World Group) |
மேற்கோள்கள் | |
[1][2][3] |
1988-ஆம் ஆன்டில் கோலாலம்பூரில் உள்ள மே வங்கி கோபுரத்தின் (Menara Maybank Kuala Lumpur) உயரத்தை இந்தக் கோபுரத்தின் உயரம் முறியடித்தது. கொம்தார் கோபுரம் 3 ஆண்டுகளுக்கு மலேசியாவின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது.
சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையம் பினாங்கு மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு கட்டிடமாக கொம்தார் கோபுரம் உள்ளது.
கொம்தார் என்பது காம்ப்ளக்ஸ் துன் அப்துல் ரசாக் (Kompleks Tun Abdul Razak) என்பதின் சுருக்கம். மலேசியாவின் இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக் உசேன் (Abdul Razak Hussein) அவர்களின் பெயரால் இந்தக் கோபுரம் அழைக்கப் படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ கொம்தார் கோபுரம் at Emporis
- ↑ கொம்தார் கோபுரம் at Structurae
- ↑ "Malaysia's highest skywalk opens to public". Channel NewsAsia இம் மூலத்தில் இருந்து 2017-01-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170109113517/http://www.channelnewsasia.com/news/asiapacific/malaysia-s-highest-skywalk-opens-to-public/3375032.html.
- ↑ "Penang Story Lecture: KOMTAR and the Buckminster Fuller Connection", Penang Heritage Trust