கொய்லிகுகர் அருவி

கொய்லிகுகர் அருவி (Koilighugar Waterfall) இந்தியாவில், ஒடிசாவில், ஜார்சுகுடா மாவட்டத்தில் அமைந்துள்ள அருவி ஆகும்.[1]

கொய்லிகுகர் அருவி
Koilighuar Waterfall
କୋଇଲି ଘୋଘର ଜଳପ୍ରପାତ
அமைவிடம்ஜார்சுகுடா மாவட்டம், ஒடிசா, இந்தியா
ஆள்கூறு21°48′23″N 83°40′08″E / 21.806311°N 83.668752°E / 21.806311; 83.668752
மொத்த உயரம்200 அடி (61 மீ)
வீழ்ச்சி எண்ணிக்கை1
நீர்வழிஅகிராஜ்

அமைவிடம்

தொகு

ஜார்சுகுடா மற்றும் ராய்கர் இடையே தேசிய நெடுஞ்சாலை 49-ல் உள்ள கோபிந்த்பூர் சௌக்கிலிருந்து வலதுபுறம் திரும்பி 6 கிமீ (3.7 மை) பயணித்து அடர்ந்த குங்கிலியம் மற்றும் இலுப்பை காடுகள் வழியாகச் சென்றால், கொய்லிகுகர் அருவியினை அடையலாம். இது கோபிந்த்பூர் பெல்பஹாரிலிருந்து 20 கிமீ (12 மை) தொலைவில் அமைந்துள்ளது.

சுற்றுலா ஈர்ப்பு இடங்கள்

தொகு

கொய்லிகுகர் அருவி, சுமார் 200 அடி (61 மீ) உயரத்தில், குஷ்மெல்பஹால் கிராமத்திற்கு அருகிலுள்ள லகான்பூரில் உள்ளது. இந்த அருவி 'சூய்காஞ்ச்' காட்டில் உருவாகும் அகிராஜ் என்ற ஆற்றில் உள்ளது. நீர்வீழ்ச்சிக்குப் பிறகு, ஆறு மேற்கு நோக்கிப் பாய்ந்து மகாநதி ஆற்றில் கலக்கிறது. காடு சார்ந்த பின்னணியுடன் கூடிய அழகிய இடமாக உள்ளது இது.

அருவி அமைந்துள்ள பகுதியின் உள்ளே மகேஸ்வரநாத் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் உள்ளது. லிங்கம் தண்ணீரில் மூழ்கி சாதாரணமாகத் தெரிவதில்லை. பக்தர்கள் நலன் கருதி அருவிக்கு வெளியே மற்றொரு சிவலிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு திருவிழா நடத்தப்படுகிறது.

 
கொய்லிகுகர் ஓடை, அருவிக்கு அருகில்.
 
கொய்லிகுகர் கோவில் கொயிலுகர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Welcoming All The Kosli People: Waterfalls Of Kosal (Western Orissa)". jaikosal.com. 2012. Archived from the original on 14 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 March 2012. Koilighugar, Jharsuguda Dist

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொய்லிகுகர்_அருவி&oldid=4109393" இலிருந்து மீள்விக்கப்பட்டது