கொரடாச்சேரி பஞ்சநதீசுவரர் கோயில்

கொரடாச்சேரி பஞ்சநதீசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் கொரடாச்சேரி அருகில் அமைந்துள்ளது. பார்வையற்றவர்கள் முன்னர் இப்பகுதியில் வழிபாடு நடத்தியதால் குருடர்சேரி என்ற பெயர் பெற்று பின்னர் கொரடாச்சேரி என்றானது என்று கூறுகின்றனர்.[1]

இறைவன், இறைவி தொகு

இக்கோயிலின் மூலவராக பஞ்சநதீசுவரர் உள்ளார். பஞ்சநதீசுவரை பஞ்சலோகங்களைக் கொண்டு பஞ்சபூதங்கள் வழிபட்டதால் மூலவர் இப்பெயரைப் பெற்றுள்ளார். இங்குள்ள இறைவி தர்மசம்வர்த்தினி ஆவார். இறைவி தெற்கு நோக்கிய நிலையில் காணப்படுகிறார்.[1]

அமைப்பு தொகு

திருச்சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், சனீசுவரர், லிங்கோத்பவர், சர்வ சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேசுவரர் உள்ளார். 1925, 1957, 1958 ஆகிய வருடங்களில் இக்கோயிலில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. இக்கோயிலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் உள்ளார். அவரைப் பார்த்த நிலையில் கருடாழ்வார் காணப்படுகிறார். வடக்குநோக்கிய நிலையில் ஆஞ்சநேயர் காணப்படுகிறார்.[1]

திருவிழாக்கள் தொகு

பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், மாசி மகம், சிவராத்திரி மற்றும் பெருமாள் சன்னதி உள்ள நிலையில் வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள் தொகு