கொலம்பியாவில் இசுலாம்

கொலம்பியாவில் இசுலாம் மக்கள்தொகை 14,000 (0.03 %) ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. [1] கொலொம்பியாவில் சான் ஆன்ட்ரெசு, பொகோட்டா, லா வகீரா, நாரினோ, சான்டா மார்டா போன்ற பல மையங்களில் இசுலாமிய அமைப்புக்கள் உள்ளன. கொலம்பியாவில் அகமதியா சமூகத்தினரும் உள்ளனர்.[2] பொகோட்டா, மைகாவ் நகரங்களில் இசுலாமிய துவக்க, இடைநிலைப் பள்ளிகளும் உள்ளன. மைகாவில் கண்டத்தின் மூன்றாம் மிகப் பெரிய பள்ளிவாசலான உமறு இப்னு அல்-கத்தாப் பள்ளிவாசல் உள்ளது.

கொலம்பியாவின் சான் ஆன்ட்ரெசில் உள்ள பள்ளிவாசல் - சன்ரைசு தங்குவிடுதியிலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படம்

கொலம்பியாவிற்கு 19ஆவது நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் சிரியா, லெபனான், பாலத்தீனம் போன்ற நாடுகளிலிருந்து அராபியர் குடிபெயர்ந்துள்ளனர். [3]

மேற்சான்றுகள் தொகு