கொலம்பிய மக்கள்

கொலம்பிய மக்கள் (Colombian people) என்பது கொலம்பியா நாட்டில் வாழ்பவரைக் குறிக்கிறது. இவர்களுள் பெரும்பாலானோர் எசுப்பானிய மொழி பேசும் ரோமன் கத்தோலிக்கர்கள். இவர்கள் ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்கள், மற்றும் அமெரிந்தியர்கள் ஆகிய மரபுகளின் கலப்பினால் உருவானவர்கள். 2006 ஆம் ஆண்டில் கொலம்பியாவின் மக்கள்தொகை சுமார் 43.6 மில்லியன். லத்தீன் அமெரிக்காவில் பிரேசில் மற்றும் மெக்சிகோவை அடுத்து மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு கொலம்பியா. கொலம்பிய மக்கள் வெனிசுவேலா போன்ற அண்டை நாடுகளிலும் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலம்பிய_மக்கள்&oldid=2994237" இருந்து மீள்விக்கப்பட்டது