கொல்கத்தா கிறித்துமசு விழா

கொல்கத்தாவில் நடைபெறும் கிறித்துமசு விழா கொண்டாட்டம்

கொல்கத்தா கிறித்துமசு விழா (Kolkata Christmas Festival) என்பது, இந்தியாவில் கொல்கத்தாவின் பூங்கா சாலையில் ஆண்டுதோறும் திசம்பர் மாதத்தில் நடைபெறும் இந்தியாவின் மிகப்பெரிய அர்ப்பணிக்கப்பட்ட நத்தார் திருவிழாக்களில் ஒன்றாகும். தூய சவேரியார் கல்லூரியில் தொடங்கி ஜவகர்லால் நேரு சாலை வரை வண்ண மின் விளக்குகளால் கருப்பொருள் ஒன்றை மையப்படுத்தி அலங்கரிக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த அலங்கார வளைவுகள் மேலும் சிலதூரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பூங்கா தெருவில் உள்ள முல்லிக் சந்தை குறுக்கு வரையிலும் ஜவகர்லால் நேரு சாலையின் ஒரு பகுதியான கதீட்ரல் சாலையில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் வரையிலும் அலங்கார வளைவுகள் தற்போது அமைக்கப்படுகின்றன. கொண்டாட்ட நிகழ்வுகள் விளக்கு அலங்காரத்தின் மற்றொரு பகுதி காமாக் தெருவில் உள்ள வர்தன் சந்தை வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பொருளினை மையப்படுத்திய அலங்கார விளக்குகள் அருகிலுள்ள நகரமான சந்தன்நகரைச் சேர்ந்த கைவினைஞர்களால் வடிவமைக்கப்படுகிறது.

பூங்கா சாலையில் உள்ள ஆலன் பூங்காவில் இசைக்குழுக்கள் மற்றும் பல்வேறு பாடகர் குழுக்கள் மேடையில் நிகழ்ச்சியினை நடத்துகின்றனர். சுமார் 500 பள்ளிக் குழந்தைகள் பங்கேற்கும் இரண்டு மணி நேரக் கிறித்துமசு அணிவகுப்பும் ஏற்பாடு செய்யப்படுகின்றது.[1] [2]

துவக்கம்

தொகு
 
2016-ல் கொல்கத்தா கிறித்துமசு விழாவின் போது பூங்கா சாலையில் அணிவகுப்பில் தெற்கு நகரப் பன்னாட்டுப் பள்ளி மாணவர்களின் குழு

கொல்கத்தா கிறித்துமசு விழா 2011ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசின் சுற்றுலாத் துறையால் கிறித்துவ சமூகத்துடன் இணைந்து தொடங்கப்பட்டது.[3] [4] [5]

இந்த விழா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் யோசனையின் கீழ் கொண்டாடப்பட்டது. மேற்கு வங்காள அரசு, கொல்கத்தா மாநகராட்சி, கொல்கத்தா காவல்துறை மற்றும் சில தனியார் அமைப்புகளின் கூட்டு முயற்சியின் விளைவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டது.

திருவிழா

தொகு
 
2016 கொல்கத்தா கிறித்துமசு விழாவில் மாணவர்களின் கிறித்துமசு அணிவகுப்பு

2017ஆம் ஆண்டு கொல்கத்தா கிறித்துமசு விழா திசம்பரில் 22 முதல் 30 வரை நடைபெற்றது. இது ஆரம்பத்தில் கிறித்துப் பிறப்பு தினத்தைச் சார்ந்து கொண்டாடப்பட்டது. ஆனால் பின்னர் சில காலம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டது.

பூங்கா சாலையில் உள்ள ஆலன் பூங்காவில் திருவிழா நடத்தப்படுகிறது (அன்னை தெரசா சரனி என்று பெயர் மாற்றப்பட்டது). பூங்கா சாலையில் கிறித்துமசு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். திருவிழாவின் போது நேரலை இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் மையமாக ஆலன் பூங்கா உள்ளது.

கலிம்போங்கிலிருந்து மருத்துவர் கிரகாம்சு கோம்சு பள்ளியின் பாடகர் குழு, கல்கத்தா இசைப் பள்ளி, பாடகர்கள் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். உஷா உதூப், பேர்பூட், கிராசுவிண்ட்சு, ஒரியண்ட் எக்சுபிரசு போன்ற குழுக்கள் பல ஆண்டுகளாக நேரலை இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

பூங்கா சாலை-கேமாக் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அன்னை தெரசா சிலைக்கு அருகில் பெரிய அளவிலான கிறித்துமசு மரம் வைக்கப்படும். பூங்கா சாலையில் கிறித்துமசு முதல்நாள், கிறித்துமசு நாள், புத்தாண்டு முதல்நாள் மற்றும் புத்தாண்டு தினங்களில், உல்லாசப் பயணிகள் சுதந்திரமாக நடக்கவும், ஒருவரையொருவர் சந்தித்து வாழ்த்துக் கூறவும் வகையில் சாலை 'நடைப் பயணத்திற்கு மட்டும்' பயன்படும் வகையில் போக்குவரத்திற்குத் தடைசெய்யப்படும்.[6] [7][8]

மேலும் பார்க்கவும்

தொகு
  • கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை கால அணிவகுப்புகளின் பட்டியல்
 
2016 கொல்கத்தா கிறித்துமசு விழாவில் உணவுக் கடை

மேற்கோள்கள்

தொகு
  1. Angikaar Choudhury (2015-12-23). "In photos: Glimpses of a Bengali Christmas on Kolkata's Park Street". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 2016-12-05.
  2. "Kolkata Christmas Festival | Christmas in Kolkata | Festivals in Kolkata". Outlook Traveller. Archived from the original on 2016-11-21. பார்க்கப்பட்ட நாள் 2016-12-05.
  3. "Kolkata Christmas Festival to begin from December 18 : PTI feed, News - India Today". Indiatoday.intoday.in. 2015-11-22. பார்க்கப்பட்ட நாள் 2016-12-05.
  4. "Kolkata Christmas Festival to start today". Timesofindia.indiatimes.com. 2015-12-16. பார்க்கப்பட்ட நாள் 2016-12-05.
  5. "5th Kolkata Christmas Festival - News Corner - Egiye Bangla". Eservices.wb.gov.in. 2015-12-16. பார்க்கப்பட்ட நாள் 2016-12-05.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Natasha Anchees (2015-12-08). "How Christmas is celebrated in Kolkata". India.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-05.
  7. "Maa Mati Manush :: M3 Leads - Kolkata Christmas Festival 2015". Maamatimanush.tv. 2015-12-14. பார்க்கப்பட்ட நாள் 2016-12-05.
  8. Scroll.in Article on Chandannagar lights. "From dinosaurs to Dipa Karmakar, everything is illuminated in Chandannagar". பார்க்கப்பட்ட நாள் 2016-12-09.