கொல்கா-கர்மடோன் பாறை-பனி சரிவு
கொல்கா-கர்மடோன் பாறை-பனி சரிவு (Kolka-Karmadon rock-ice slide) வட ஒசேத்தியாவில் உள்ள கழ்பேக் மலைமுகட்டின் வடக்கு சாய்வில் நிகழ்தது, உருசியாவின் கொல்கா (Kolka) பகுதியில் 2002-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் திகதி பனியாறு பொறிவைத் தொடர்ந்து அது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,780 மீட்டர் (15,680 அடி)[1] உயரத்தில் உள்ள ட்ழிமரை-க்ஹொக்ஹ (Dzhimarai-Khokh ) பகுதியின் வடக்கு மற்றும் வடகிழகு சுவரிலும் சரிய தொடங்கியது.[2] மேலும் தீவிரமாக கேனல்டன் (Genaldon) மற்றும் கர்மடோன் ( Karmadon) பள்ளத்தாக்கையும் பாதித்தது. இந்த பேரிடரில், பனிச்சரிவு மற்றும் சேற்றுப் பெருக்கத்தால் 125 பேர் கொல்லப்பட்டனர். (இவ்விபத்தில் உருசிய நடிகர் "செர்ஜி போட்ரோவ் ஜெஆர்" (Sergei Bodrov Jr) உட்பட படக்குழுவினர் 27 பேரும் அடங்குவர்) என்பது குறிபிடத்தக்க மூலத்தகவல்.[3]
கொல்கா பனியாறு, உத்தேசமாக 150 மீட்டர் (490 அடி) அகலமுள்ள தடித்த ஒரு மலைமுகட்டின் துண்டின்மீது சுமார் 32 கிலோமீட்டர் (20 மைல்) பயணப்பட்டு, கிழேயுள்ள கர்மடோன்(Karmadon) ஜார்ஜ் மற்றும் கோபான் (Koban) பள்ளத்தாக்கில் மணிக்கு 100-க்கும் (100 km/h (62 mph).[4] கூடுதலான விசையில், 10-லிருந்து 100 மீட்டர் (33-328 அடி) கன அளவிலும் 200 மீட்டர் (660 அடி) பரந்த அளவிலும் மண் மற்றும் கழிவுகளை பொறிவுகளில் அடித்துவரப்பட்ட,[5] வெள்ளநீர் பள்ளத்தாக்கிலிருந்த நிஜ்னி கர்மடோன் (Nijni Karmadon) என்ற கிராமத்தில் அடைப்பட்டு தங்கியது, இறுதியில் பேராறக மாற்றம் பெற்றதால் அக்கிராம பகுதியில் எச்சரிக்கை விடப்பட்டு கண்காணிப்பிற்கு உட்படுத்தபட்டது.[6] 2002 செப்டம்பர் 25-ம் திகதி கோர்ணய சனிப (Gornaya Saniba) எனும் கிராமம் அருகில் வெள்ளநீரை குரைக்க பனிச்சரிவை வெடிவைத்துத் தகர்க்க திட்டமிடப்பட்டது, அதற்கான பணிகள் துவங்கி முதல் சுற்று தோல்வியில் முடிந்ததாக மூலதாரத்தில்காணப்படுகிறது.[7]
சான்றுகள்
தொகு- ↑ "Bker, Happy Kolka-Karmadon rock/ice slide Day!-இணையத்தில் பார்த்த நாள்:09/12/2015". Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 2015-12-09.
- ↑ The Kolka-Karmadon rock/ice slide of 20 September 2002: an extraordinary event of historical dimensions in North Ossetia, Russian Caucasus-Journal of Glaciology, vol. 50, Issue 171, p.533-546-இணையத்தில் பார்த்த தினம்:09/12/2015
- ↑ BBC UK Sergei Bodrov: Russia's lost actor-Wednesday, 25 September, 2002, 13:31 GMT 14:31 UK-வலையில் கண்டது:09/12/2015
- ↑ What is kolka?-வலையில் கண்டது:10/12/2015
- ↑ Kolka-Karmadon rock ice slide-வலையில் கண்டது:10/12/2015
- ↑ "பைக்கர், கொல்கா-கர்மடோன் பாறை / பனி சரிவு தினம்!-19-09-2013, 23:20-இனையத்தில் பார்த்தது:12/12/2015". Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 2015-12-09.
- ↑ "கொல்கா-கர்மடோன் பாறை பனி சரிவு காணொளி|நிகழ்வு பாதுகாப்பு மற்றும் நேர்காணல்கள்-வலைகண்டநாள்|12/12/2015". Archived from the original on 2016-03-08. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.