கொல்கி உபகரணம்
கொல்கி உபகரணம் அல்லது கொல்கிச் சிக்கல் மற்றும் கொல்கி உடல் (Golgi apparatus) என வழங்கப்படுவது மெய்க்கருவுயிரிக் கலங்களில் காணப்படும் ஒரு நுண்ணுறுப்பு ஆகும்.[1] இது இத்தாலி நாட்டு மருத்துவரான கமிலோ கொல்கி என்பவரால் 1897 இல் கண்டறியப்பட்டது. பின்னர் 1898 இல் பெயரிடப்பட்டது.[2]
கொல்கி உபகரணமானது அகக்கலவுருச் சிறுவலையின் பாகமாக அமைந்து, அகக்கலவுருச் சிறுவலையில் உருவாகும் புரதங்களை, கலங்களின் உள்ளே அதன் தொழிற்பாட்டுக்குரிய விதத்தில் தயார்ப்படுத்தி, அவை தொழிற்பட வேண்டிய இடத்துக்கு வழிப்படுத்தும் தொழிலைச் செய்கின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Pavelk M, Mironov AA (2008). The Golgi Apparatus: State of the art 110 years after Camillo Golgi's discovery. Berlin: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-211-76309-0.
- ↑ Fabene PF, Bentivoglio M (October 1998). "1898–1998: Camillo Golgi and "the Golgi": one hundred years of terminological clones". Brain Res. Bull. 47 (3): 195–8. doi:10.1016/S0361-9230(98)00079-3. பப்மெட்:9865849. https://archive.org/details/sim_brain-research-bulletin_1998-10_47_3/page/195.