முதன்மை பட்டியைத் திறக்கவும்

இரைபோசோம்கள் அல்லது ஐங்கரிமக் கருக்காடியகங்கள் என்பன நிலைக்கருவுள்ள உயிரிகளில் காணப்படும் உயிரணுக்களின் உள்ளே காணப்படும் நுண்ணுறுப்புக்களில் ஒன்றாகும். இதன் இயக்கத்தாலேதான் டி.என்.ஏ-வில் உள்ள குறிப்புகள் புரதங்களாக உருவெடுக்கின்றன. இரைபோசோம்கள் விளைவிக்கும் புரதங்கள் உயிரினங்களில் நடைபெறும் எல்லா உயிர்வேதியியல் வினைகளையும் கட்டுப்படுத்துகின்றன.

இரைபோசோம்கள் டி.என்.ஏ இழைத்தொடரின் குறியீடுகளைக்கொண்டு குறிப்பிட்ட புரதங்களை உருவாக்கப் பயன்படும் அமைப்பாகும். இந்தப் புரதங்கள் உருவாக்கும் இரைபோசோம்களில் (ஐங்கரிமக் கருக்காடியகங்களில்) 50 உக்கும் மேலான வெவ்வேறு வகைப் புரதங்களும் ரைபோசோமிய ஆர்.என்.ஏ எனப்படும் பொருள்களும் இருக்கும். ரைபோசோமிலேயே உள்ள புரதங்களை ரைபோசோமியப் புரதங்கள் (ribosomal proteins) என்பர்.

the translation

ரைபோசோம் என்னும் சொல் ரைபோ கரு அமிலம் (ribonucleic acid) என்னும்சொல்லோடு "பருப்பொருள்" அல்லது "உடல்" என்னும் பொருள் படும் கிரேக்கச் சொல்லாகிய சோமா (soma meaning body) என்னும் சொல்லும் சேர்ந்து ரைபோ + சோம் = ரைபோசோம் என்று பெயர் பெற்றது. ரைபோ நியூக்கிளிக் காடியில் ரைபோசு (ribose) என்னும் ஐந்து கரிம அணுக்கள் உள்ள ஒருவகை ஒற்றை இனிப்பியம் (சக்கரை) உள்ள நியூக்கிளியோட்டைடுகள் இருப்பதால் ஐங்கரிமக் கருங்காடி அகம் என்றும் இந்த ரைபோசோம் அழைக்கப்படும். குறிப்பேந்தி ஆர்.என்.ஏயின் (mRNA) உதவியால் புரதங்கள் உருவாகின்றன, ஆனால், இந்த குறிப்பேந்தி ஆர்.என்.ஏ-க்கள் டி.என்.ஏ-வில் இருந்து குறிபெயர்க்கப்படுகின்றன. ஆகவே நேரடியாக டி.என்.ஏ-விலிருந்து புரதங்கள் உருவாக்கப்படுவதில்லை. இடையே தொழிற்படும் குறிப்பேந்தி ஆர்.என்.ஏ-வும் புரதம் உருவாக்க வினையூக்கியாக இயங்கும் ரைபோசோமும் தேவைப்படுகின்றது. பாக்டீரியா, ஆர்க்கீயா, யூக்காரியோட்டு ஆகிய மூன்று வகை உயிரினத் தொகுதிகளிலும் உள்ள ரைபோசோம்கள் குறிப்பிடத்தக்கவாறு வெவ்வேறு கட்டமைப்பும் ஆர்.என்.ஏ (ஐங்கரிமக் கருக்காடி)களும் கொண்டுள்ளன. ஆனால் யூக்காரியோட்டு உயிரணுக்களின் இழைமணியில் (மைட்டோகோன்றியா)வில் உள்ள ரைபோசோம்கள் பாக்டீரியாவில் உள்ளதை ஒருவாறு ஒத்துள்ளது. இவ்வொற்றுமையானது பல்தோகுதி உயிரின வளர்ச்சியின் உட்தொடர்புகளை சுட்டிக்காட்டுகின்றது [1]

ரைபோசோம்கள் தனித்தனி அமினோக் காடிகளைப் பிணைத்து பாலிபெப்டைடு (polypeptide) தொடர்களாக மாற்றுகின்றன. ரைபோசோம்கள் குறிப்பேந்தி ஆர்.என்.ஏ (messenger RNA) மூலக்கூற்றுடன் பிணைத்துக்கொள்கின்றன. இதன் துணையால் சரியான அமினோக் காடிகள் வரிசையைக் கோக்க முடிகின்றது. இந்த அமினோக்காடிகள், கடத்து-ஆர்.என்.ஏ-வுடன் (transfer RNA) ஒட்டிக்கொண்டு சென்று குறிப்பேந்தி ஆர்.என்.ஏ "சொல்லும்" வரிசைப் படி சரியாகப் புரதத் தொடர்களை அடுக்குகின்றன.

Atomic structure of the 30S Subunit from Thermus thermophilus. Proteins are shown in blue and the single RNA strand in orange.[2]
Ribosomer i arbete

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

  1. Benne R, Sloof P (1987). "Evolution of the mitochondrial protein synthetic machinery". BioSystems 21 (1): 51–68. doi:10.1016/0303-2647(87)90006-2. பப்மெட்:2446672. 
  2. Schluenzen F, Tocilj A, Zarivach R, Harms J, Gluehmann M, Janell D, Bashan A, Bartels H, Agmon I, Franceschi F, Yonath A (2000). "Structure of functionally activated small ribosomal subunit at 3.3 angstroms resolution". Cell 102 (5): 615–23. doi:10.1016/S0092-8674(00)00084-2. பப்மெட்:11007480. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரைபோசோம்&oldid=2776313" இருந்து மீள்விக்கப்பட்டது