கொல்லப்பள்ளி நீர்த்தேக்கம்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது

கொல்லப்பள்ளி நீர்த்தேக்கம் (Gollapalli Reservoir) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நீர்ப்பாசனத் திட்டத்துடன் அமைந்துள்ளது.[1] சிரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் எடுக்கும் ஆந்தரி-நீவா கால்வாயிலிருந்து[2] கொல்லப்பள்ளி நீர்த்தேக்கம் தண்ணீரைப் பெறுகிறது. பெனுகொண்டா தொகுதியில் உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.[3][4][5]

கொல்லப்பள்ளி நீர்த்தேக்கத்தின் தோற்றம்

நீர் வழிபாடு என்ற பொருள் கொண்ட சலயக்னம் என்ற நீர்மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவால் திறந்து வைக்கப்பட்டது.[6] நீர்த்தேக்கத்தில் 1.91 டிஎம்சி அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். நீர்த்தேக்கத்திலிருந்து மடகாசிரா மற்றும் இந்துப்பூருக்கு அந்தரி நிவா சுசலா சரவந்தி திட்டத்தின் பிரதான கால்வாய் மூலம் செலுத்தப்படுகிறது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Staff Reporter (2016-12-03). "Naidu inaugurates Gollapalli reservoir" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/Naidu-inaugurates-Gollapalli-reservoir/article16752065.ece. 
  2. http://www.uniindia.com/all-projects-will-be-completed-to-provide-water-to-rayalaseema-ap-cm/states/news/1103373.html
  3. "Anantapur: Plans afoot to revive 1183 irrigation tanks". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2019-01-17. பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.
  4. Hoskote, Nagabhushanam (2018-12-15). "Penukonda finally gets safe drinking water after decades". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.
  5. "Anantapur: Approaching summer no worry for water officials". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2018-03-22. பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.
  6. Staff Reporter (2016-12-02). "Naidu to inaugurate Gollapalli reservoir today" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/Naidu-to-inaugurate-Gollapalli-reservoir-today/article16738266.ece. 
  7. "Anantapur: Demand to divert surplus water to drought areas". www.deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.