மடகாசிரா
மடகாசிரா (Madakasira) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். [2] [3] இது அருகிலுள்ள நகரமான இந்துபூரிலிருந்து 33 கி.மீ தூரத்தில் உள்ளது. இது கர்நாடகாவுடன் மாநில எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு மலைக் கோட்டை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். [4]
மடகாசிரா | |
---|---|
ஆள்கூறுகள்: 13°56′13″N 77°16′10″E / 13.9369°N 77.2694°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | அனந்தபூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 30.17 km2 (11.65 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 21,464 |
• அடர்த்தி | 710/km2 (1,800/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 515301 |
தொலைபேசி இணைப்பகம் | 91–8493 |
வாகனப் பதிவு | ஏபி |
இணையதளம் | Madakasira website |
நிலவியல்
தொகுமடகாசிரா 13.9369 ° வடக்கிலும் 77.2694 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [5] இதன் சராசரி உயரம் 676 மீட்டர் (2221 அடி) ஆகும். மடகசிரா மலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2936 அடியாக உள்ளது. முன்பு இது சிம்மகிரி என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் மலை தூங்கும் சிங்கம் போல் தெரிகிறது. மடகசிராவைச் சுற்றி ஏராளமான தாவரங்கள் இல்லாத தனிமைப்படுத்தப்பட்ட சிகரங்கள் மற்றும் பாறைக் கொத்துகள் உள்ளன. அனந்தபூர் மாவட்டத்தின் பிற இடங்களுடன் ஒப்பிடும்போது நகரம் குளிரானது, எனவே அனந்தபூர் மாவட்டத்தின் ஊட்டி என்று பொருத்தமாக அறியப்படுகிறது.
கோயில்கள்
தொகுநகரைச் சுற்றி சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல கோவில்களும், கல்வெட்டுகளும் உள்ளன. இங்கு விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்ட கோட்டையும் கோயிலும் உள்ள மிகப் பெரிய மலையைக் காணலாம். இந்த நகரில் சமீபத்தில் மிகப் பெரிய சாய் பாபா கோயில் கட்டப்பட்டுள்ளது. [6]
-
மடகாசிரா கோட்டை
-
மடகாசிரா கோட்டை
-
மடகாசிரா கோட்டை - பழைய நுழைவாயில்
புள்ளிவிவரங்கள்
தொகுமடகாசிரா சட்டமன்றத் தொகுதியில் யாதவர்கள் ஆதிக்கம் செலுத்தும் 120 கிராமங்கள் உள்ளன. [7]
2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, மடகாசிரா மண்டலத்தின் புள்ளிவிவர விவரங்கள் பின்வருமாறு: [8]
- நகரில் 37,344 ஆண்களும், 35,878 பெண்களும் என 73,222 என்ற அளவில் மக்கள் இருக்கின்றனர்.
- இதில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: 9,709 (சிறுவர்கள் - 4,972 மற்றும் சிறுமிகள் - 4,739)
- மொத்த கல்வியறிவு பெற்றோர்: 34,125
உசாத்துணை
தொகு- ↑ "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
- ↑ "List of Sub-Districts". Census of India. Archived from the original on 2007-05-14. பார்க்கப்பட்ட நாள் 2007-05-29.
- ↑ "Anantapur District Mandals" (PDF). Census of India. p. 415. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017.
- ↑ "Centrally Protected Monuments". Archeological Survey of India (in ஆங்கிலம்). Archived from the original on 26 June 2017. பார்க்கப்பட்ட நாள் 27 May 2017.
- ↑ "Maps, Weather, and Airports for Madakasira, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 31 July 2019.
- ↑ Sewell, Robert (1882). Lists of the antiquarian remains in the Presidency of Madras. Printed by E. Keys, at the Government Press. பார்க்கப்பட்ட நாள் 13 March 2011.
- ↑ "Here, SCs can't step into Yadav-dominated villages | Hyderabad News - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 31 July 2019.
- ↑ Madakasira mandal at Our Village India.org