யாதவர் என்போர் இந்தியா முழுக்க பரவி வாழும் மிகப்பெரிய சமுதாயத்தினர் ஆவர். இவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த சத்திரியர்கள்.ஆவர். யாதவர்கள் கால்நடை வளர்ப்பினராகவும், போர் மறவராகவும், நிலக்கிழாரகவும், குறுநில மன்னராகவும், மன்னராகவும் இருந்துள்ளனர்.

டெல்லி பகுதியில், யாதவ குழுவில் முக்கிய பகுதியாகிய அகீர் குழுவினர், 1868.

தமிழ்நாட்டில் யாதவர்

தமிழ்நாட்டில் இவர்கள் கோனார், கரையாளர், சேர்வைக்காரர், இடையர், ஆயர், பிள்ளை, மணியக்காரர், அம்பலக்காரர் போன்ற பல பட்டங்களை கொண்டுள்ளனர்.

மேலும் கோனார் என்பது பட்டமே அது சாதியினை குறிக்காது. கோனார் என்னும் பட்டதை தென்மாவட்ட யாதவர்கள் மட்டுமே பயன்படுத்தினர் வட தமிழக யாதவர்கள் ஆதியில் இருந்தே யாதவ சாதி என்றும் கிருஷ்ணர் பரம்பரையினர் என்றும் கூறி வந்தனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது.[சான்று தேவை]

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாதவர்&oldid=3002294" இருந்து மீள்விக்கப்பட்டது