கோனார் (Konar) என்போர் தமிழ்நாட்டிலுள்ள, யாதவர்களில் ஓர் உட்பிரிவு இனக்குழுவினர் ஆவர். கோனார் என்பது பட்டமே அது சாதியினை குறிக்காது. கோனார் என்னும் பட்டம் தென்தமிழக யாதவர்களை குறிக்கும், வட தமிழக யாதவர்கள் கோனார் என்ற பட்டத்தைப் பயன்படுத்துவது இல்லை.

கோனார்/இடையர்/ஆயர்/யாதவர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஆயர், யாதவர்[1]

சொற்பிறப்பு

கோனார் மற்றும் கோவலர் ஆகிய பெயர்கள் கோன் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெறப்பட்டவை ஆகும். இது "ராஜா" மற்றும் "கால்நடை வளர்ப்போர்" என்று பொருள்படும்.[2][3] இந்த வார்த்தை சமசுகிருத வார்த்தையான கோ (மாடு) என்பதிலிருந்து அல்லது தமிழ் வார்த்தையான கோல் (கால்நடை வளர்ப்பவர்) என்பதிலிருந்து பெறப்பட்டவையாகும்.[2]

ஆயர் என்ற சொல் பசு என்ற பொருளைக் கொண்ட என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெறப்பட்டிருக்கலாம்.[2] இடை (நடுத்தர) என்ற சொல் முல்லை பகுதியைக் குறிக்கும். இது குறிஞ்சி (மலைப் பகுதி) மற்றும் மருதம் (வயல் பகுதி) என அழைக்கப்படும், இரண்டு சங்க நிலப்பரப்புகளுக்கு இடையிலான இடைநிலை மண்டலமாகும்.[4] இடையர் என்பது ஒரு மாடு வளர்ப்பவருக்கு தமிழில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.

இவர்கள் கால்நடை மேய்த்தல் தொழிலைச் செய்பவர்களாக இருந்தனர். தமிழ்நாடு சாதிகள் பட்டியல் காட்டும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இவர்கள், யாதவா என்னும் பெயரில் உள்ள தமிழ் பேசும் இடையர்கள் ஆவர். இவர்களோடு தெலுங்கு பேசும் வடுக அஸ்த்தர கோல்லாவும் யாதவா பிரிவில் உள்ளனர்.

இதையும் பார்க்கவும்

யாதவர்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோனார்&oldid=2938781" இருந்து மீள்விக்கப்பட்டது