கொல்லம் பூரம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் திருவிழா

கொல்லம் பூரம் (Kollam Pooram, மலையாளம்: കൊല്ലം പൂരം) என்பது ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரில் கொண்டாடப்படும் ஒரு கோயில் திருவிழா ஆகும். மாநிலம் முழுவதிலுமிருந்து பெருவாரியான மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர். கொல்லம் ஆசிரமத் திடலில் [1] உள்ள கிருட்டிணசுவாமி ஆலய ஆசிரமத்தின் ஆண்டுத்திருவிழாவாக கொல்லம் பூரம் கொண்டாடப்படுகிறது. தற்போது இத்திருவிழா, ஒரு தேசியத் திருவிழாவாக கருதப்பட்டு நாடெங்கிலுமுள்ள மக்களை கொல்லம் நகரை நோக்கி ஈர்த்துள்ளது.

கொல்லம் பூரம்
அதிகாரப்பூர்வ பெயர் கொல்லம் பூரம்
வகைகோயில் திருவிழா
அனுசரிப்புகள்கோயில் திருவிழா, குட மாட்டம், இளஞ்சித்ரமேளம், யானை அணிவகுப்பு

விழாவில் குடமாட்டம் நிகழ்விற்காக 30 யானைகள், பதினைந்துப் பதினைந்து யானைகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒரு குழு தாமரைக்குளம் சிறீ மகாகணபதி ஆலயத்தின் சார்பாகவும் மற்றொரு குழு புதியகாவு பகவதி ஆலயம் சார்பாகவும் பங்கேற்கும். வண்ணவண்ணக் குடைகளுடன் நிகழும் இக்குடமாட்ட நிகழ்வு பாரம்பரிய மேள இசையுடன் நடைபெறுகிறது [2]. இதைத் தொடர்ந்து கண்ணைக் கவரும் வான வேடிக்கை பெரிய அளவில் நடைபெறுகிறது.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லம்_பூரம்&oldid=3848886" இலிருந்து மீள்விக்கப்பட்டது