கொல்லாமை
கொல்லாமை சமண சமயத்தவரின் தலையாய அறம். கொல்லாமையில் நான்கு படிநிலைக் கோட்பாடுகள் உள்ளன. எந்த உயிரையும் கொல்லாமை, புலால் உண்ணாமை, அகிமசை, சீவகாருண்யம் என்பன அவை.
கொல்லாமை
தொகு- கொல்லாமை சமணர் கோட்பாடு. நடந்து செல்லும்போது கூடத் தன்னை அறியாமல் ஏதாவது சிறு உயிரினங்களைக் கொன்றுவிடுவோமோ என்று தான் நடந்து செல்லும் வழியைத் தானே மயில் இறகால் [1] கூட்டிக்கொண்டே நடந்து செல்வது சமணத் துறவிகளின் வழக்கம். கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவி மயில்பீலியைக் கையில் எடுத்துச் சென்றார். [2] நோன்பு என்பது உயிர்க்கொலை செய்யாதிருக்கும் நற்பண்பு என்பது திருவள்ளுவர் வாக்கு. [3] [4]
- உணவுக்காக வேட்டையாடிய காலம் ஒன்று. மீன் பிடித்தல் ஒருவகை வாழ்க்கை முறை. இப்படிப்பட்ட நிலைமைகளில் கொல்லாமை சிந்தனைக்கு உரியது.
புலால் மறுத்தல்
தொகு- கொல்லாமை துறவிகளின் நோன்பு. புலால் உணவை வேண்டாம் என மறுத்தல் [5] எல்லாரும் கடைப்பிடிக்கக் கூடிய நோன்பு என்பது திருவள்ளுவர் காட்டும் அறம். [6] இந்தக் கோட்பாடு எல்லா சமயத்திலும் ஒருசாரார் கடைப்பிடிக்கும் கோட்பாடு.
இன்னா செய்யாமை
தொகு- எந்த உயிரினத்துக்கும் துன்பம் செய்யாமல் இருக்கும் இன்னா செய்யாமைக் கோட்பாட்டை [7] அகிம்சை என்னும் பெயரால் கடைப்பிடித்துக்கொண்டு தற்காலத்தில் வாழ்ந்து காட்டியவர் காந்தியடிகள். தன்னைச் சுட்டுக்கொன்ற கோட்சேயைக் கூட மன்னித்துவிடும்படி கூறியது காந்தியடிகளின் அகிம்சைக் கோட்பாடு. [8]
- சேவல்சண்டை முதலான விளையாட்டுகள் உயிரினங்களைத் துன்புறுத்துபவை. இவை தவிர்க்கப்பட வேண்டியவை.
அருளுடைமை
தொகு- அருளுடைமையைத் திருக்குறள் மன்னுயிர் ஓம்பி அருள் ஆள்தல் [9] எனக் குறிப்பிடுகிறது. சிபிச் சக்கரவர்த்தி புறாவையும் அதனைக் கொல்ல வந்த பருந்தையும் காப்பாற்றியது அருளுடைமை. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" எனப் பாடி வருந்தியது வள்ளலாரின் சீவகாருண்யக் கோட்பாடு.
அடிக்குறிப்பு
தொகு- ↑ தானே உதிர்ந்த மயில் இறகால்
- ↑
தோம் அறு கடிஞையும், சுவல் மேல் அறுவையும்,
கவுந்தி ஐயை, கைப் பீலியும், கொண்டு;
‘மொழிப் பொருள் தெய்வம் வழித் துணை ஆக’ என
பழிப்பு-அரும் சிறப்பின் வழிப் படர் புரிந்தோர்- (சிலப்பதிகாரம் 10 அடி 98 முதல்) - ↑ கொல்லா நலத்தது நோனமை (திருக்குறள் 984)
- ↑ இந்தக் கூற்றால் திருவள்ளுவரைச் சமணர் என்பர்
- ↑ சைவ உணவு
- ↑ திருக்குறள் அதிகாரம் 26 புலால் மறுத்தல்
- ↑ இன்னா செய்யாமை (திருக்குறள் அதிகாரம் 32
- ↑ தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களைக் கூட அறியாமல் செய்கிறார்களே என்று அவர்களுக்காக வருந்திய உள்ளம் இயேசு பெருமான் உள்ளம்
- ↑ திருக்குறள் 244