கொல்லாரிபெட்டா
(கொல்லாரிபேட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கொல்லாரிபெட்டா (Kolaribetta) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி மலைகளில் இரண்டாவது மிக உயர்ந்த சிகரம் ஆகும்.[1]
இது தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் உதகமண்டலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சிகரம், அவலாஞ்சி பகுதியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.[2]
இது முக்கூர்த்தி தேசிய பூங்கா மற்றும் சாலியார் நதிப் படுகையில் மிக உயரமான இடமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2,630 மீ உயரத்தில் உள்ளது.
இங்கு நீலகிரி மந்தி, நீலகிரி வரையாடு, நீலகிரி கரும் வெருகு ஆகியன காணப்படுகின்றன.
இப்பகுதியில் உள்ள பிற முக்கிய சிகரங்களாக தொட்டபெட்டா, குடிகாடு (2,590மீ), முக்கூர்த்தி (2,554மீ), பிச்சால்பெட்டா (2,544மீ), டெர்பெட்டா (2,531மீ) சுனோடான் (2,531மீ) உள்ளன.