கொல்லிமலை கொல்லிப்பாவை கோயில்

கொல்லிமலை கொல்லிப்பாவை கோயில் என்பது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். [1] இந்த அம்மன் எட்டு கைகளுடன் காட்சிதருவதால் எட்டுக்கையம்மன் என்றும் அழைக்கின்றனர். பூஞ்சோலை என்ற கிராமத்தில் இருந்து நடைபயணமாக சென்று இக்கோயிலுக்கு செல்ல வேண்டும்.

சொல்லிலக்கணம்

தொகு

கொல்லுகின்ற பாவை என்பதால் கொல்லிப்பாவை என்ற பெயர் வந்தது.

தலவரலாறு

தொகு

கொல்லிமலையில் தேவர்களும், மகரிசிகளும் தவமிருந்த போது அசுரர்களால் துன்பம் நேரிட்டதாகவும், அதை தடுக்க தேவரான விஷ்வகர்மா ஒரு பெண் சிலையைடச் செய்தார். அதற்கு உயிர் கொடுத்த தேவர்கள், அந்தப் பெண்ணின் வசீகரித்தில் மயங்கி வருகின்ற அரக்கர்களை அம்பிகை எட்டுகளைக் கொண்டு கொன்றாள். [2]

மூலவர்

தொகு

கொல்லிப்பாவை எட்டுக்கைகளுடன் காட்சிதருகிறார். எப்போதுமே சந்தனக்காப்பில் மட்டும் காட்சிதருகிறார். [3]

செல்லும் வழி

தொகு

நாமக்கலிருந்து கொல்லிமலை அறப்பள்ளீஸ்வரர் கோயிலுக்கு செல்லும் வழியில், பேருந்து நிறுத்ததிலிருந்து இரண்டு கிலோமீட்டர்கள் நடைபயணமாக செல்லவேண்டும்.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "-தீமைகளைக் கொன்று நல்லவர்களைக் காக்கும் கொல்லிப்பாவை - சுகந்தன் - நக்கீரன் தளம் 01-07-09". Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2016-07-11.
  2. அருள்மிகு அரப்பள்ளீசர் கோயில் - தினமலர் கோயில்கள்
  3. "தீய சக்திகளை சாம்பலாக்கும் கொல்லிப்பாவை - தினகரன் :2013-12-11". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-07-11.

வெளி இணைப்புகள்

தொகு