கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோயில்

எட்டுக்கை அம்மன் கோயில், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் கிராமத்தில் உள்ள தனியார் சமூகத்திற்கு சொந்தமான அம்மன் கோயிலாகும். இத்தலத்தின் மூலவராக இருக்கும் அம்மன் எட்டுக்கைகளை உடைய பெண் தெய்வமாதலால் எட்டுக்கை அம்மன் என்று வழங்கப்படுகிறார்.

எட்டுக்கை அம்மன் கோயிலின் படம்

எட்டுக்கை அம்மன் செம்பூத்தான் கூட்டம் மற்றும் பண்ணை கூட்டம் குடிப்பாட்டு கொங்கு வேளாளர் குலதெய்வமாகும். எனவே இருகுலத்தோர் இத்தலத்தினைப் பராமரித்து வருகிறார்கள்.[1][2]இக்கோயில் கொங்கு நாடு 24 நாட்டில் வாழவந்திநாட்டில் அமைந்துள்ளது.[3]

அம்மனின் தோற்றம் தொகு

எட்டுக்கை அம்மன் தனது வலது கரங்களில் எறி சூலம், வேல், சிறிய கத்தி, உடுக்கை ஆகியவற்றையும், இடக் கரங்களில் அக்னி, வில், மணி, கபாலம் ஆகியவைகளையும் தாங்கியபடி காட்சியளிக்கிறார். மேலும் அம்மையப்பனைப் போல வலக்காதில் மகர குண்டலத்தினையும், இடக்காதில் பத்திர குண்டலமும் அணிந்துள்ளார், இதன்மூலம் எட்டுக்கையம்மன் சிவசக்தி அம்சமாகவும் இருக்கின்றார், கொற்றவை கொல்லிப்பாவை போன்ற தெய்வங்களின் வடிவம் என சொல்வார்கள்

திருவிழா தொகு

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம்​ திருவிழா நடைபெறும், 11 நாட்கள் திருவிழா பூந்தேர் பெரியத்தேர் சிம்ம வாகனம், பூத வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம் போன்ற வாகனங்களில் உலா வரும் நிகழ்வு, பல்லக்கில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்வு, குதிரை துலுக்குதல் நிகழ்வு, பொங்கல் வைத்தல், கும்மியாட்டம், நாடகம், அம்மன் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து திருவிழா விமரிசையாக நடைபெறும், சித்திரைப் பௌர்ணமி நாளில் பக்தர்கள் பூசை செய்து வழிபடுவர், பக்தர்கள் பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். இது ஆசீவக நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் சைவ கோயில் ஆகும், இந்த ஆலயத்தில் உயிர்ப் பலி கொடுப்பது கிடையாது. முழுக்க முழுக்க தமிழ் கோயில்.

மேற்கோள்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-09. பார்க்கப்பட்ட நாள் 2013-06-25.
  3. "ETTUKKAI AMMAN, எட்டுக்கை அம்மன், KEERAMBUR" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-24.