கொங்கு 24 நாடுகள்

கொங்கு நாடு பழங்காலத்திலிருந்து இடைக்காலம் வரை 24 உள்நாடுகளாகப் பிரிக்கப்பட்டு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த பாளையக்காரர்களால் நிர்வகிக்கப்பட்டது. பண்டைய தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு என பல பிரிவுகளாக இருந்தன.கொங்கு நாட்டில் உள்ள கொங்கு குலாலர் சமுதாயம் மக்கள் தனக்கென்று 24 நாடுகளாக உட்பிரிவு கொண்டுள்ளனர். இதனைப் பழங்கால இலக்கியங்களும், கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன. இன்றைய கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல் மற்றும் திருச்சி, கிருஷ்ணகிரி, பாலக்காடு மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியது கொங்கு நாடு.[1][2]

எல்லை பற்றி பழம்பாடல்

தொகு

வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்கு
குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று – கிழக்கு
கழித்தண் டலைசூழும் காவிரிசூழ் நாடா
குளித்தண் டலையளவும் கொங்கு ---- தனிப்பாடல் [3]

வடக்கு பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று – கிடக்கும்
கழித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டுக்
குளித்தண் டலையளவு கொங்கு” ---- கொங்கு மண்டல சதகப் பதிப்பு [3][4]

கொங்கு நாட்டு எல்லை கூறும் எல்லாப் பாடல்களுமே வெள்ளியங்கிரி மலையை மேற்கு எல்லையாகக் கூறுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு தெற்கே சேரநாடு என்பது இதன் கருத்தாகும். சங்க இலக்கியத்தில் பல இடங்களில் கொங்கு நாடு தனி நாடாகவே குறிக்கப்படுகிறது. நூற்றாண்டுகள் தோறும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கொங்கு நாடு தனி நாடெனக் கூறுகின்றன.

கொங்கு நாட்டில் குடியேறிய வேளாளர்கள் நிர்வாக வசதிக்காகத் தாம் வாழும் நாட்டில் 24 நிர்வாகப் பிரிவுகளை ஏற்படுத்தினர். அவ்வாறு ஏற்படுத்திய ஒவ்வொரு நாடுகட்கும் ஒரு அவை இருந்தது. அதில் எல்லா ஊர்களுக்கும் அங்கம் அளிக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி நாட்டுக் காரியங்களைச் செய்தனர்.

கோயில்கட்குக் கொடைகள் அளித்தனர். ஆலயத் திருப்பணியை மேற்கொண்டனர். குற்றவாளிகளை விசாரித்துத் தண்டித்தனர். நாட்டுக்கு வேண்டிய எல்லாப் பணிகளையும் செய்தனர். இந்நாடுகள் தல சுய ஆட்சியை மேற்கொண்டது. இது தமிழ்நாட்டின் வேறு எப்பகுதியில் இல்லாத ஒன்றாகும். கீழ்க்கண்டவாறு 24 நாடுகளாகும்.

கொங்கு 24 நாடுகள் பட்டியல்

தொகு

கொங்கு நாட்டில் 24 நாடுகள் அடங்கி இருந்தது. [3][1]

வரிசை எண் நாட்டின் பெயர் கல்வெட்டில் நாட்டின் பெயரும் இன்றைய பகுதிகள் உட்பிரிவு நாடு உட்பிரிவு பகுதிகள்
1 ஆறைநாடு ஆறை நாடு, பேரூர் நாடு, வடபாரிசார நாடும் கோயமுத்தூர் வட்டம், அவினாசி வட்டம், பல்லடம் வட்டத்தின் மேற்கு பாகம், அன்னூரைச் சுற்றியுள்ள பகுதி, கோவில்பாளையத்தைச் சுற்றியுள்ள பகுதி. கோவங்க நாடு கோவையைச் சுற்றிய பகுதி
வெள்ளாநாடு
மன்னி நாடு அன்னூரைச் சுற்றியுள்ள பகுதி
கவையநாடு
பூளுவநாடு
கவையநாடு கோவில்பாளையத்தைச் சுற்றி
சேவூர்நாடு சேவூர்
நிரற்றூர்நாடு
செம்பைநாடு
வழையலூர்நாடு
தணக்குநாடு
நாலூர்ப் பற்றுநாடு பெருமாநல்லூரைச் சுற்றி
பழனநாடு
2 ஒடுவங்க நாடு ஒடுவங்க நாடு கோபி, சத்தியமங்கலம் வட்டவடபாகமாக பவானி நதி ஓரத்திலுள்ள பாகமும், மலை அடிவார பகுதிக டணாயகன் கோட்டை நாடு
படி நாடு அல்லது கங்கை கொண்ட சோழவளநாடு சத்தியமங்கலம் வட்ட மேற்கு பாகமும், அவினாசி வட்ட வடகிழக்கு பாகமும்
3 வாரக்க நாடு வாயிரக்க நாடு சூலூர் வட்டம், பல்லடம் வட்ட மேல்பாகமும், பொள்ளாச்சி வட்டத்தின் வடகிழக்குபாகமும்.
4 பொங்கலூர் நாடு பொங்கலூர்க்காநாடு பல்லடம் வட்ட கிழக்குப் பாகமும், தாராபுரம் வட்டத்தின் குண்டடம்
தென் பொங்கலூர் நாடு(பொன்குலிக்கிநாடு தாராபுரம் வட்டத்தின் தென்பாகம்
5 காங்கேய நாடு காங்கேயநாடு காங்கேயம் வட்டம், பழையகோட்டை, நத்தக்காடையூர், வெள்ளக்கோவில், முத்தூர்,

தாரபுரம் வட்டத்தின் வடபாகம்

தென்னிலை, பரமத்தி

நற்காவேரி நாடு காங்கேய வட்டத்தின் கீழ்பாகம், வெள்ளக்கோவில் குறுவட்டம்
6 குறும்பு நாடு குறுப்பு நாடு குருமந்தூர், தாளூன்றி, மண்ணறை, கோசனம், திங்களூர், சீனாபுரம், செவியூர், மூதூர், அயிலூர், நல்லூர், கொளப்பலூர், வெள்ளரி வள்ளி, அலங்கயம், திருப்பூர், குரக்குத்தளி, கலிங்கயம், விஜயமங்கலம், கொடுமணல், ஆதியூர், நிரம்பயூர், அமுக்கயம், சிவலூர், கூடலூர், தக்களூர், குன்னத்தூர், சிறுக்கழிஞ்சி, ஊற்றுக்குழி, அழுக்கொளி, செங்கைப் பள்ளி ஆக ஊர்கள் 35
வீரசோழ வளநாடு கொங்கில் குறும்பில் குரங்குத்தளியாய்
7 காஞ்சிக்கோயில் நாடு காஞ்சிக்கூவல் நாடு கோபி, பவானி, ஈரோடு வட்டங்கள் சந்திக்கும் பகுதியைச் சுற்றியுள்ள பகுதி
8 வடகரை நாடு வடகரைநாடு பவானி வட்டத்தின் சமமான நிலப்பகுதி
9 பூந்துறை நாடு பூந்துறை நாடு ஈரோடு வட்டத்தின் கிழக்குபாகமும், திருச்செங்கோடு வட்டமும் மேல்கரைப் பூந்துறை நாடு பூந்துறை, காளமங்கலம், அறச்சலூர், பேரோடு, வெள்ளோடு, குழாநிலை, விளக்கேத்தி, சித்தோடு, நசியனூர், கிளாம்பாடி, ஈஞ்சம்பள்ளி, திண்டல் புதூர், எழுமாத்தூர், முடக்குறிச்சி, சத்திமங்கலம், இலவமலை, பிடாரியூர், அநுமன் பள்ளி, சேமூர், திருவாச்சி, ஈங்கூர், பழமங்கலம், மங்கலம், பனயம் பள்ளி, பெருந்துறை, குளவிளக்கு, வீரகனல்லூர், ஓடாநிலை, சாத்தம்பூர், காகம், ஈரோடு, முருங்கைத்தொழு ஆக ஊர்கள் 32
கீழ்கரைப் பூந்துறை நாடு அல்லது குன்றத்தூர்க் கூற்றம் திருச்செங்கோடு வட்டம்
பருத்திப்பள்ளி சேலம் வட்டத்தின் பகுதி
குன்றத்தூர்
நாடாள்வான்
கேலநாடு சேலம் வட்டம்
ஏழூர்நாடு நாமக்கல் வட்டத்தின் வடகிழக்குப் பகுதி
10 அரைய நாடு அரயநாடு ஈரோடு வட்டத்தின் தென் கிழக்குபாகமும் , நாமக்கல் வட்டத்தின் மேங்பாகமும், துறையூர் மேல்கரை ஈரோடு வட்டத்தின் தென் கிழக்குபாகம்
கீழ்கரை நாமக்கல் வட்டத்தின் மேங்பாகம், துறையூர்
11 தென்கரை நாடு தென்கரை தாராபுரம் வட்டத்தின் ஒருபகுதி, சங்கரண்டாம்பாளையம், காங்கேயம் வட்டம் (ஊதியூர், வானவராய நல்லூர், லக்கமாநாயக்கன்பட்டி) ---
நரையனூர் நாடு தாராபரம் வட்டத்தின் தென்பாகம்
12 மண நாடு --- கரூர் மாவட்டத்தின் தென் மேற்கு பாகம் - சின்ன தாராபுரம் வடரைநாடு
பணத்தூர் நாடு
13 வெங்கல நாடு வெங்கலநாடு, வெங்கால நாடு கரூர் மாவட்டத்தின் கீழ் பாகம் இடைப்பிச்சநாடு
இடைப்புழுதி நாடு
14 தட்ட நாடு தட்டையூர் நாடு குளித்தலை வட்டத்தின் வட மேற்கு பகுதி - மேலப்பாளையம்
15 கிழங்கு நாடு கிழங்கு நாடு குளித்த‌லை, முசிறி, கரூர் வட்டத்தில் குளித்தலை ஓரமாக காவிரியின் தென் கரை - வாங்கல்,
16 தலைய நாடு தலையூர் நாடு கரூர் மாவட்டத்தின் மேற்கு, தென்பாகம் - சேந்த மங்கலம்,
17 அண்டைநாடு அண்ட நாடு பழனி வட்டத்தின் தென்கிழக்கு பகுதி - விருப்பாச்சி, பன்றிமலை
18 வையாபுரி நாடு [5][6] வையாபுரி நாடு, வைகாபுரி நாடு, திரு ஆவினன்குடி நாடு பழனி வட்டம், உடுமலை வட்டத்தின் கிழக்குப் பகுதி, மடத்துக்குளம் பூளவாடி நாடு குடிமங்கலம், பழனி வட்டத்தின் மேல்பாகம்
கரைவழி நாடு குமரலிங்கம், கொழுமம் கிராமங்கள்
ராஜராஜவளநாடு கல்லாபுரம், சங்கரராம நல்லூர் கிராமங்கள்
19 நல்லுருக்கா நாடு நல்லுருக்கா நாடு உடுமலைப்பேட்டை வட்டத்தின் மேல் பகுதி
20 காவடிக்கா நாடு காவடிக்கா நாடு பொள்ளாச்சி வட்டத்தின் மேல் பாகம்
21 ஆனைமலை நாடு ஆனைமலை நாடு பொள்ளாச்சி வட்டத்தின் தென்மேற்கு பாகம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுக்கா(அத்திக்கோடு, மீனாட்சிபுரம், கொல்லங்கோடு)
22 பூவாணிய நாடு வட பூவாணிய நாடு ஓமலூர் வட்டமும், தர்மபுரி வட்டமும்,

கிருஷ்ணகிரி, ஒசூர், திருப்பத்தூர், அரூர் (சில பகுதிகள்)

நங்கமல்லி நாடு
கீட்பா நாடு
வஞ்சி நாடு
பக்க நாடு
பெரும்பாளைய நாடு
23 வாழவந்தி நாடு நாமக்கல், நாம‌க்க‌ல் வ‌ட‌க்கு, க‌ரூர் தூசூர் நாடு நாமக்கல் வட்டத்தின் வட பாகம்
விமலய நாடு நாமக்கல் வட்டத்தின் வட பாகம்
24 இராசிபுர நாடு சேலம், இராசிபுரம் வட்டத்தின் பகுதிகள், கொல்லிம‌லை,

ஆத்தூர், கங்கவல்லி

கொல்லிமலையில் 14 நாடுகள்
சேல நாடு
சேர்வராயன் மலையில் 3 நாடுகள்

கொங்கு 24 நாடு தொகுப்புப் பழம்பாடல்

தொகு

இவைகளைத் தொகுத்துப் பாடலாகவும் பாடினர்

சொல்ல அரி தானபூந்தது துறைசைதென் கரைநாடு
தோன்றுகாங் கேயநாடு
தோலாத பொன்கலூர் நாடு திகழ் ஆறையளி
தோய்ந்தவர் ரக்கநாடு
வல்லமை செறிந்ததிரு ஆவிநன் குடிநாடு
மணநாடு தலையநாடு
வரதட்டை பூவாணி அரையநாடு ஒடுவங்கம்
வடகரை கிழங்கு நாடு
நல்லுருக் காநாடு வாழவந் தியும் அண்ட
நாடு வெங் காலநாடு
நாவலர்கள் சொல்கா வடிக்காநாடு ஆனைமலை
இல்லறம் வளர்ந்துதவி மல்குகாஞ் சிக்கோயில்
இயல்செறி குறும்நாடு
இனியபுகழ் சேர்கொங்கு மண்டலந் தனிலான
இருபத்து நான்குநாடே

இன்றும் மேற் கூறிய நாடுகளை அங்கு பூர்வீகமாக கொண்ட சங்கு பறையர் இனத்தில் திருமண பேச்சு நடத்தும் போது எந்த நாட்டினர் என்று உறுதிபடுத்தப்படுகிறது. குறிப்பிட்ட நாட்டுக்காரர் பங்காளியாகவும், மற்றவர் மாமன் மச்சாம் முறையாகவும் கொள்ளப்படுகிறது.

பிற்காலத்தில் நாடுகள் 24-ஐக் காட்டிலும் அதிகம் ஆயிற்று, வெங்கால நாட்டின் இணை நாடாக இடைப்பிச்ச நாடு சேர்த்துக் கொள்ளப்பட்டது.

கொங்கு நாடுகள் என்பது பொதுவான வழக்கு இதனை ‘நாலாறுநாடு’ என்ற இலயக்கியத் தொடர் காட்டும். ‘மூவெட்டுநாடு’ எனக் கூறுவதும் உண்டு.

மக்கள் பெருக்கமும், குடியேற்றமும் பிற்காலத்தில் ஏற்பட்டபோது கொங்கு 24 நாடுகள் 42 நாடுகள் எனக் கூறபட்டன அவை:

 • தாராபுரம் சூழ்ந்தநாடு - 24
 • கோட்டை சூழ்நாடு - 6
 • குன்றத்தூர்க் கோட்டம்- 12

நாடுகளாகப் பிரித்து கூறப்படும். கோட்டை என்பது தணாயக்கன்கோட்டை, குன்றத்தூர் என்பது சங்ககிரியாகும். அண்மையில் கிடைத்த ஒரு செப்பேட்டு ஆவணம் கொங்கு 72 நாடுகள் எனக் கூறுகிறது. 24 நாடுகளை 24 கோட்டம் என அழைக்கும் வழக்கமும் உண்டு.[7]

சேரர் மீது வெண்பா

தொகு

"கொங்கு மலை நாடு குளிர்ந்தநதி பன்னிரண்டும்

சங்கரனார் தெய்வத் தலம்ஏழும்-பங்கயம்சேர்

வஞ்சிநகர் நாலும் வளமையால் ஆண்டருளும்

கஞ்சமலர்க் கையுடையோன் காண்.

- சேரர் மீது வெண்பா

இந்த வெண்பா 12 ஆறுகள், 7 சிவாலயங்கள் மற்றும் 4 வஞ்சி நகரங்களைப் பற்றி கூறுகிறது.

குளிர்ந்தநதி பன்னிரெண்டு

தொகு
 1. ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி),
 2. காஞ்சி (நொய்யல்),
 3. வானி (வவ்வானி, பவானி),
 4. பொன்னி (காவேரி),
 5. சண்முகநதி,
 6. குடவனாறு (கொடவனாறு),
 7. நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு),
 8. மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு)
 9. மீன்கொல்லிநதி
 10. சரபங்கநதி
 11. உப்பாறு
 12. பாலாறு

சங்கரனார் தெய்வத்தலம் ஏழு - கொங்கேழ் சிவஸ்தலங்கள்

தொகு
 1. கருவூர் (கரூர்),
 2. வெஞ்சமாக்கூடல்,
 3. திருச்செங்கோடு,
 4. திருநணா (வவ்வானி - பவானி),
 5. கொடுமுடி,
 6. திருமுருகன்பூண்டி,
 7. திருப்புக்கொளியூர் (அவினாசி)

இந்த ஏழும் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்கள் ஆகும்.

வஞ்சிநகர் நாலு:

 1. கருவூர்,
 2. தாராபுரம்,
 3. மூலனூர்,
 4. விளங்கில்**

** விளங்கலுக்கு பதிலாக அது காங்கேயம் / கொங்கூர் / முட்டம் எனவும் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்

மலைகளும் கோட்டைகளும்

தொகு
 1. அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை
 2. கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி, பாலமலை, பெருமாள் மலை
 3. பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை
 4. உடுமலைப்பேட்டை - திருமூர்த்தி மலை
 5. பல்லடம் - தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை
 6. தாராபுரம் - பொன்னூதி மலை, ஊதியூர்மலை,[8]
 7. காங்கேயம் - வட்டமலை, சிவன் மலை
 8. ஈரோடு - சென்னிமலை, பெருமாள் மலை
 9. கோபி - தவளகிரி, குன்றத்தூர்
 10. பவானி - பாலமலை, ஊராட்சிக் கோட்டை மலை
 11. கொள்ளேகால் - மாதேசுவரன் மலை
 12. திருச்செங்கோடு - சங்ககிரி, மோரூர் மலை, திருச்செங்கோடு
 13. இராசிபுரம் - கொங்கணமலை, கொல்லிமலை
 14. சேலம் - சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி
 15. நாமக்கல் - கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை
 16. கரூர் - தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை
 17. பழனி - ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை.

கொங்கு கோட்டைகள்

தொகு
 • கோயம்புத்தூர்
 • சத்தியமங்கலம்
 • கொள்ளேகால்
 • தணாய்க்கன்
 • பொள்ளாச்சி
 • ஆனைமலை
 • திண்டுக்கல்
 • தாராபுரம்
 • பொன்னாபுரம்
 • பெருந்துறை
 • எழுமாத்தூர்
 • ஈரோடு
 • காங்கேயம்
 • பழையகோட்டை
 • கரூர்
 • விஜயமங்கலம்
 • அரவக்குறிச்சி
 • பரமத்தி
 • பவானி
 • மோகனூர்
 • நெருஞ்சிப் பேட்டை
 • மேட்டூர்
 • சரம்பள்ளி
 • காவேரிபுரம்
 • சேலம்
 • தகடூர்
 • ராயக்கோட்டை
 • அமதன் கோட்டை
 • ஓமலூர்
 • காவேரிப்பட்டினம்
 • தேன்கனிக்கோட்டை
 • பெண்ணகரம்
 • பெரும்பாலை
 • சோழப்பாவு
 • தொப்பூர்
 • அரூர்
 • தென்கரைக்கோட்டை
 • ஆத்தூர்
 • சேந்தமங்கலம்
 • நாமக்கல், 300 அடி,
 • சங்ககிரி - 1500 அடி,
 • சதுரகிரி - 3048 அடி,
 • கனககிரி - 3423 அடி
 • மகாராசக்கடை - 3383 அடி,
 • தட்டைக்கல் துர்க்கம் - 2029 அடி.
 • இரத்தினகிரி - 2800 அடி,
 • சூலகிரி - 2981 அடி,

ஆகியன கொங்கு நாட்டுக் கோட்டைகளாம்.

14 ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோட்டைகள் பெருமையுடன் இருந்தன. குறுநில மன்னர்கள் ஆண்டனர். 15 ஆம் நூற்றாண்டுக்குப்பின் முகமதிய, ஆங்கிலேயப் படையெடுப்பால் அழிந்தன. திண்டுகள், நாமக்கல், கோட்டைகள் மட்டும் அழியாமல் இருக்கின்றன. சங்ககிரி, கிருஷ்ணகிரி, மகராஜக் கடை ஆகிய கோட்டைகள் சிதைந்துள்ளன. பிற முழுதும் சிதைந்து போயின. குறுநில மன்னர்களுடன் கோட்டைகளும் அழிந்து போயின.

சான்றாவணம்

தொகு
 1. 1.0 1.1 "Kongu Naadu - History Enclopedia".
 2. "கொங்கு மண்டலத்தின்கீழ் வரும் ஊர்களின் பட்டியல்". www.toptamilnews.com. 2021-07-10. பார்க்கப்பட்ட நாள் 2022-11-19.
 3. 3.0 3.1 3.2 கொங்கு நாட்டு வரலாறு-பக்கம்-25 ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்- அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1954- பிழை காட்டு: Invalid <ref> tag; name "one" defined multiple times with different content
 4. ":: TVU ::". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.
 5. Paḷḷu ilakkiyam
 6. சூலூர் வரலாறு-பக்கம்-149-பாவேந்தர் பேரவை வெளியீடு-
 7. "கொங்கு மண்டலத்தின்கீழ் வரும் ஊர்களின் பட்டியல்". www.toptamilnews.com. 2021-07-10. பார்க்கப்பட்ட நாள் 2022-11-19.
 8. காமராஜ், மு ஹரி. "சித்தர்கள் உலாவும் பொன்னூதி மாமலை..." https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-01-20. {{cite web}}: External link in |website= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கு_24_நாடுகள்&oldid=3885786" இலிருந்து மீள்விக்கப்பட்டது