வானவராய நல்லூர்
வானவராயநல்லூர் (Vāṉavarāya Nallūr) கிராமம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் ஊதியூரில் இருந்து கிழக்கே 5 கிமீ தொலைவில் ஊதியூர்-தாசவநாயக்கன்பட்டி சாலையில் அமைந்துள்ள ஒரு குக்கிராமாகும்.[4][5]
வானவராய நல்லூர் Vāṉavarāya Nallūr | |||||||
— கிராமம் — | |||||||
ஆள்கூறு | 10°52′47″N 77°34′09″E / 10.879803°N 77.569291°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
பகுதி | கொங்கு நாடு | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருப்பூர் | ||||||
வட்டம் | காங்கேயம் | ||||||
அருகாமை நகரம் | தாராபுரம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3] | ||||||
ஊராட்சித் தலைவர் | |||||||
மக்களவைத் தொகுதி | ஈரோடு | ||||||
மக்களவை உறுப்பினர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | காங்கேயம் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மொழிகள் | தமிழ், ஆங்கிலம் | ||||||
---|---|---|---|---|---|---|---|
வட்டார மொழிகள் | கொங்குத் தமிழ் | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
இது கொங்குநாடு திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட முதலிபாளையம் கிராமம், பெருமாள்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமமாகும். இவ்வூர் ஊதியூரில் இருந்து 5 கி.மீ., கம்பிளியம்பட்டியில் இருந்து 5 கி.மீ., குண்டடத்தில் இருந்து 18 கி.மீ., காங்கேயத்தில் இருந்து 19 கி.மீ. மற்றும் தாராபுரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[6][7]
இங்கு மானாவாரி விவசாயமே பிரதான தொழில் ஆகும். இந்த கிராமத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கொங்கு வேளாளர் சமூகத்தின் செம்பூத்தான் குலம் குலதெய்வ கோவிலான கரியகாளி அம்மன் கோவில், தேவாங்கர் செட்டியார் சமூகத்தின் லத்தேகாரர் குலதெய்வ கோவிலான சஞ்சீவி பெருமாள் கோவில் உட்பட பல புகழ்பெற்ற முக்கிய கோவில்கள் உள்ளன.[8][9][10]
இந்த கிராமத்தில் ஆவின் பால் பதப்படுத்தும் மையம், அரசு பள்ளி, நியாய விலைக் கடை மற்றும் பிற அரசு அலுவலகங்கள் உள்ளன.[11]அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் இந்த கிராமத்தில் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள்.[12]
வரலாறு மற்றும் சொற்பிறப்பியல்
தொகுவரலாற்று ரீதியாக, இந்த கிராமம் கொங்கு நாட்டின், தென்கரை நாட்டுக்கு உட்பட்ட பகுதி ஆகும்.[13]
வானவராயர் என்பது கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தின் கீரனூர் பவளன் குலம் கோத்திரத்தால் பயன்படுத்தப்படும் பட்டம் ஆகும். அன்னூர் கோவிலில் ஒரு கல்வெட்டு வானவராயநல்லூரைச் சிவனுக்குப் பவளன் குலத்தான் கொடுத்ததாகக் கூறுகிறது.[14]எனவே, பவளன் குலம் வானவராயர் என்ற பட்டத்தில் இருந்து இப்பெயர் வந்திருக்கும்.[15][16]கொங்கு வெள்ளாள கவுண்டர் வரலாற்றில் பொள்ளாச்சி சமத்தூரில் வாணவராயர் பாளையக்காரர் ஜமீன் குடும்பமும் உள்ளது.[17][18]
இந்த கிராமத்தில் உள்ள கொங்கு வேளாளர் கவுண்டர் செம்பூத்தான் குல தெய்வ கரிய காளியம்மன் கோயில் தீபத்தம்பத்தை நிறுவியவர் செம்பூத்தகுல மாணிக்கி தெய்வானை என்பவர் என்பதை அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.[19][20]
இந்த கிராமத்திற்கு வேறு ஒரு பெயர் காரணமும் சொல்லபடுகிறது. இந்த கிராமத்தில் சஞ்சீவி பெருமாள் ஆஞ்சநேயர் கோவில் உள்ளதாலும், ஆஞ்சியர் சாமிக்கு வானரம் என்ற பெயரும் இருப்பதால், இந்த பெயர் வந்திருக்கும் என்று கூறப்படுகிறது.[8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Vanavarayan Nallur Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-23.
- ↑ "Vanavarayan Nallur". wikimapia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-23.
- ↑ "Vanavaraya Nallur, Tamil Nadu". vymaps.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-23.
- ↑ "Vanavaraya Nallur- 638703".
- ↑ 8.0 8.1 "Arulmigu KariyaKāliAmman Temple, Vānavarāya Nallūr". templesofindia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-23.
- ↑ 9.0 9.1 Unknown, இடுகையிட்டது. "அருள்மிகு பெரிய ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் நெல்லுகுப்பம்மன் திருக்கோயில் குள்ளக்காபாளையம் பொள்ளாச்சி". பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
- ↑ Saint Geroge Fort Administation - Dharapuram Taluk, Coimbatore dist, Madras pre.
- ↑ "PANCHAYAT UNION PRIMARY SCHOOL, VANAVARAYA NALLUR - Perumal Palayam, District Erode (Tamil Nadu)". schools.org.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-23.
- ↑ "வானவராய நல்லூர் to ஊதியூர்". வானவராய நல்லூர் to ஊதியூர். பார்க்கப்பட்ட நாள் 2022-06-23.
- ↑ "கொங்கு நாடு வரலாறு". kongubloods.blogspot.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-06.
- ↑ Koṅku Veḷḷāḷar varalār̲u By Ṭi. Kē Caktitēvi. p. 68, 161, 162.
{{cite book}}
: line feed character in|title=
at position 25 (help) - ↑ Kandaswamy, S. P. (1985-01). "The history of the kongu vellalas" (in English). University. http://shodhganga.inflibnet.ac.in:8080/jspui/handle/10603/139704.
- ↑ "The_Society_of_Kongunadu_Through_the_Inscriptions_of_Seven_Kongu_Saivaite_Temples".
- ↑ Kālaveḷiyil oru jīvanati Vāṇavarāyar varalār̲u.
{{cite book}}
: line feed character in|title=
at position 25 (help) - ↑ Kongu Velir history.
- ↑ "பேராழி". பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
- ↑ "Tamil Virtual University". www.tamilvu.org. p. c031/c0314 - c0314331. பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.