ஊதியூர்

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள நகரம்

ஊதியூர் (Ūthiyūr) என்பது இந்தியாவின் ஆட்சிப்பகுதியில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம் வட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த நகரம் ஆகும். காங்கேயம் - தாராபுரம் செல்லும் வழியில்[4] பொன்னூதி மலையின் அடிவாரத்தில் ஊதியூர் அமைந்துள்ளது. இவ்வூர் ஒன்பதாவது நூற்றாண்டு பழமை வாய்ந்த உத்தண்ட வேலாயுதசாமி கோயில், ஊதியூர் மற்றும் கொங்கணச் சித்தரின் ஜீவசமாதிக்குப் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகும். இஃது அருணகிரிநாதர் திருப்புகழ் பெற்ற தலங்களில் ஒன்று ஆகும்.[5] கொங்கு நாட்டில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் இது.[6][7][8]

ஊதியூர்

பொன்னூதி மலை

—  சுற்றுலா நகரம்  —
வரைபடம்:ஊதியூர், இந்தியா
ஊதியூர்
அமைவிடம்: ஊதியூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°53′34″N 77°31′40″E / 10.8928°N 77.5279°E / 10.8928; 77.5279
நாடு  இந்தியா
பகுதி கொங்கு நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் காங்கேயம்
அருகாமை நகரம் காங்கேயம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி ஈரோடு
மக்களவை உறுப்பினர்

கே. ஈ. பிரகாஷ்

சட்டமன்றத் தொகுதி காங்கேயம்
சட்டமன்ற உறுப்பினர்

எம். பி. சாமிநாதன் (திமுக)

மக்கள் தொகை 3,500 (2011)
பாலின விகிதம் 1006 /
கல்வியறிவு

• ஆண்
• பெண்

68.63% 

• 78.20%
• 59.15%

மொழிகள் தமிழ், ஆங்கிலம்
வட்டார மொழிகள் கொங்குத் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


305 மீட்டர்கள் (1,001 அடி)

குறியீடுகள்
ஊதியூர் மலை
ஊதியூர் வேலாயுதசாமி கோவில்

இந்த நகரம் ஈரோடு மற்றும் பழனியை இணைக்கும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 83 ஏ-இல் அமைந்துள்ளது. இது காங்கேயத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் தாராபுரத்திலிருந்து 18 கி.மீ‌. தொலைவிலும், வெள்ளக்கோயிலில் இருந்து 24 கி.மீ. தொலைவிலும் அதன் மாவட்ட தலைமையகமான திருப்பூரிலிருந்து 38 கி.மீ. மற்றும் ஈரோட்டிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

பெயர்க் காரணம்

தொகு

இந்த நகரம் மற்றும் மலைகளுக்குப் பொதுவாக இரண்டு பெயர்க் காரணங்கள் உள்ளன.

கொங்கணர் இம்மலையில், வாழ்ந்தபோது, மக்களின் வறுமையை நீக்க விரும்பினார். மக்கள் நலன் கருதி மலையில் கிடைத்த அபூர்வ மூலிகைகளைச் சேர்த்துத் தீவைத்து புகைமூட்டி மண்குழல் கொண்டு ஊதியதால் முருகன் எழுந்தருளிய மலையைப் பொன்னாக்கினார். ஆதலால் இவ்வூர் ஊதியூர் எனப் பெயர் பெற்றது. இங்கே 'பொன்னூதி' என்ற பழமை வாய்ந்த மலை உள்ளது. போகரின் சீடரான கொங்கணர் சித்தர் தங்கி நெருப்பூதி, பொன்செய்ததால் இம்மலைக்குப் 'பொன்னூதி மலை' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.[9] இது கொங்கண கிரி என்றும் அழைக்கப்படுகிறது.[10]

சில அறிஞர்கள் வேறு காரணத்தைக் கூறுகின்றனர். மேலைக்கொங்கு நாட்டினை ஆட்சி செய்த, உதியர்கள் குலச்சின்னமாக 'உதி' என்ற மரம் விளங்கியது. இம்மரத்திற்கு ஒதி, ஓதி என்ற பெயர்களும் உண்டு. மேலும், இந்த உதி மரத்தில் பூக்கும் பூக்கள், பொன்னிறமாய் மின்னுமாம். இம்மரங்கள், இம்மலைகளில் நிறைந்திருந்தன. அதனால் 'பொன் ஒதி மலை' என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. அதுவே மருவி 'பொன்னூதி மலை'யானதாக, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[11]

புராணம்

தொகு

பெரும் காவியமான இராமாயணத்தில், இலங்கையில் இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே இராமாயணப் போர் நடந்தபோது, ​​இராமனின் சகோதரர் இலட்சுமணன் இராவணனால் அனுப்பப்பட்ட இந்திரஜித்தின் அம்புக்குறியால் தாக்கப்பட்டு, அவர் உயிருக்குப் போராடினார். அதனால் அவரைக் குணப்படுத்த, ரிஷபம் மற்றும் கைலாச சிகரங்களுக்கிடையே இமயமலைத் தொடரிலிருந்து ஒரு சஞ்சீவனி மூலிகையைப் பெறும்படி ஜாம்பவான் அனுமனிடம் கேட்டார். அனுமன் அவரின் கருத்தினை ஏற்றுச் சஞ்சீவி மூலிகையைப் பெறப் புறப்பட்டுச் சென்றார். ஆனால் அந்த இருசிகரங்களுக்கு இடையே உள்ள மலையில் குறிப்பிட்ட இடத்தில் அவரால் உயிர்காக்கும் மூலிகையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் விரக்தியடைந்த அவர் மலையைத் துண்டுகளாக உடைப்பது போல் உணர்ந்தார். ஆனால் அவருக்குத் திடீரென்று முழு மலைப்பகுதியையும் தூக்கி ஜாம்பவானிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவே அதேபோல் செய்தார். அவர் இமயமலையிலிருந்து இலங்கை வரை இந்தியாவின் முழு நீளத்திலும் மலையைத் தூக்கிக்கொண்டு பறந்தபோது மலையின் ஒரு சில பகுதிகள் தரையில் பல இடங்களில் விழுந்தன. அதில் ஒன்று தான் 18 சித்தர்களில் ஒருவரான கொங்கணச் சித்தர் முனிவர் தியானம் செய்த ஊதியூர் மலை ஆகும். அனுமன் வந்த அடைந்தவுடன் ஜாம்பவான், மலையிலிருந்த சஞ்சீவனி மூலிகையை எடுத்து அதன் சாற்றை மயக்க நிலையில் இருக்கும் இலஷ்மணன் மற்றும் அவரது வானர சேனையில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து அனைவரின் உயிரையும் காப்பாற்றினார்.[12][13]

இந்த மலை, இன்றுவரை, சஞ்சீவனி உட்பட அனைத்து மருத்துவ தாவரங்களையும் கொண்டுள்ளது.[14] பல மருத்துவ தாவரங்கள் இருப்பதால் இது தெற்கின் சஞ்சீவி மலை என்று அழைக்கப்படுகிறது.[15]

தொல்பொருள் மற்றும் இலக்கியக் குறிப்பு

தொகு

மகத்தான மருத்துவ மூலிகைகள் உள்ள சஞ்சீவி மலையின் ஒருபகுதி எனக் கருதுவதால் தென்னிந்தியாவின் சஞ்சீவி மலை என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர்-பாடிய திருப்புகழ் (106) பாடப்பெற்ற புன்னிய தலமான முருகப் பெருமான் தலம் இங்கே அமைந்துள்ளது. இம் மலையில் இந்துக்கள் மற்றும் தமிழர்களின் பண்பாட்டைச் சித்திரிக்கும் கலைப் பொக்கிசங்களான புராதனச் சின்னங்கள் மற்றும் சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் இம்மலையைச் சுற்றி வரலாற்றுப் பெருமைகள் தாங்கிய பல்வேறு தொல்லியல் சிற்பங்களும் உள்ளன.[16][17]

  • தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கை முறை, பண்பாடு ஆகியவற்றை விளக்கும் பல்வேறு சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் தற்போது மலையடிவாரத்தில் காணப்படுகிறன.
  • தமிழினத்தின் பெருமைமிகு வரலாற்றைக் கொண்ட சோழர் காலத்திய 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்தி சிற்பங்களும், நாக சிற்பங்களும் காணப்படுகின்றன.

மலையைச் சுற்றியுள்ள பல்வேறு தொல்பொருள் சிற்பங்கள் வரலாற்றுப் பெருமையைக் கொண்டுள்ளன.[18] இந்தத் திருத்தளத்தின் சிறப்பு என்னவென்றால், கொங்கணச் சித்தர் தங்கம் செய்யப் பயன்படுத்திய களிமண் குழாய்கள் இங்கு இன்னும் உள்ளன.[19][20][21][22][23]

வரலாறு

தொகு

ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஊதியூர், மெட்ராஸ் மாகாணத்தின், கோயம்புத்தூர் மாவட்டத்தின் தாராபுரம் தாலுகாவில் இருந்தது.[24]

நிலவியல் மற்றும் காலநிலை

தொகு

ஊதியூர் 10°53′55"N 77°31′41"E இல் சராசரியாக கடல் மட்டத்தில் இருந்து 305 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஊதியூர் மலை 7 கிலோமீட்டர் நீளமுள்ள மலைத்தொடர் ஆகும்.[25]

ஊதியூரில் ஆண்டு முழுவதும் வெப்பமாக இருக்கும். ஆண்டு முழுவதும், வெப்பநிலை பொதுவாக 70 °F முதல் 98 °F வரை மாறுபடும் மற்றும் அரிதாக 65 °F -இக்குக் கீழே அல்லது 103 °F -இக்கு மேல் இருக்கும்.[26]

மலைகள் மற்றும் காடு

தொகு

இந்த மலைகளில் மான், குரங்கு, நரி, பன்றி, காட்டுப்பன்றி, காட்டு நாய்கள், பசுக்கள் மற்றும் பிற ஊர்வன உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளையும் மற்றும் பல்வேறுபட்ட அரியவகை தாவரங்களையும் இயற்கையான சூழலில் காணலாம். இந்த மலை ஆனமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பல மருத்துவ தாவரங்கள் இருப்பதால் இது தென்னிந்தியாவின் சஞ்சீவி மலை என்று அழைக்கப்படுகிறது.[27][28][29][30] மலையின் பல்வேறு இடங்களில் சந்தன மரங்களும் உள்ளன.[30][31]

மக்கள் வகைப்பாடு

தொகு
மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்(அனைத்து சமயங்கள்)
98.80%
கிறிஸ்தவர்கள்
1.15%
முஸ்லிம்கள்
0.00%
மற்றவை
0.05%

2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பஞ்சாயத்தின் கீழ் உள்ள பகுதியில் 3500 மக்கள் தொகை மற்றும் நகர்ப்புற ஒருங்கிணைந்த மக்கள் தொகை 10000 ஆக உள்ளது. 2011-ஆம் ஆண்டில், ஊதியூர் கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 68.63% ஆக உள்ளது. தமிழ்நாட்டில் 80.09% உடன் ஒப்பிடும்போது குறைவாக இருந்தது. ஊதியூரில் ஆண்களின் கல்வியறிவு 78.20% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 59.15% ஆகவும் உள்ளது.[32][33][34][35][36]

கணக்கெடுப்பின்படி, ஊதியூர் கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 1006 ஆகும், இது தமிழ்நாடு மாநில சராசரி 996-ஐ விட அதிகம். ஊதியூருக்கான குழந்தை பாலின விகிதம் 969 ஆகும், இது தமிழக சராசரியான 943-ஐ விட அதிகம்.[37] இங்குப் பெரும்பாலான மக்கள் இந்து மதத்தின் சைவ சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். தமிழ் மற்றும் ஆங்கிலம் பேரூராட்சியின் அதிகாரபூர்வ மொழியாகும். இங்குப் பேசப்படும் தமிழின் வட்டார பேச்சுவழக்கு கொங்கு தமிழ் ஆகும்.[38][39] மலையாளம் மற்றும் இந்தி ஆகியவை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பேசப்படுகின்றன.

பொருளாதாரம்

தொகு

விவசாயம் மற்றும் வணிகம் இவ்விரண்டும் இங்கு முதன்மையான பொருளாதாரமாகும். இது பல பொருளாதார, சுரங்க, ஜவுளி, தென்னை, சணல், பால் தொழிற்சாலைகள், மின்சார மின் நிலையங்கள் மற்றும் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல நிறுவனங்கள் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு வட இந்திய தொழிலாளர்களை ஈர்க்கும் சிறிய பொருளாதார மையமாகும். இந்த நகரத்தில் குண்டடம் சாலையில் ஹட்சன் அக்ரோ ஆலை உள்ளது.[40][41][42][43][44][45]

அரசியல் மற்றும் நிருவாகம்

தொகு

இந்தச் சிறிய நகரம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம், காங்கேயம் வட்டம், தாராபுரம் வருவாய் கோட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்டது.[46][47][48]

இந்த நகரம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதி மற்றும் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[49][50] இங்குப் பொதுவான அதிமுக, திமுக, பாஜக கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.[51][51][52][53][54] இந்தப் பகுதியில் பெரும்பாலும் திருக்கோவில் நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுவதும் மற்றும் விற்கப்படுவதும் அதிகாரிகளுக்குப் பெரிய சவாலாக இருக்கிறன.[54]

கோவில்கள்

தொகு
 
அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் பராமரிக்கப்படும் பல கோயில்கள் ஊதியூர் மலையில் உள்ளன. சில முக்கியமானவை உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில், கொங்கண சித்தர் ஆலயம், செட்டி தம்பிரான் கோவில், சொர்ன லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் உச்சி பிள்ளையார் கோவில் ஆகும். ஊதியூர் மலைத்தொடர் தோராயமாக 7 கி.மீ‌. அகலம் கொண்டது.[55] இந்து சமய அறநிலையத்துறையின் படி மலையில் இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன.[56] மலைகளில் விநாயகர், சிவன், பார்வதி, ராமர், அனுமன், இடும்பன், இந்திரா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சன்னதிகளும் உள்ளன.

சாலையில் இருந்து பார்க்கும்போது, அழகிய மலை மீது முருகன் ஆலயம் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கின்றது. சுமார் 300 அடி உயரம்உள்ள இம்மலை 150 படிகளைக் கொண்டதாகும். அடிவாரத்தில், பாத விநாயகர், அனுமந்தராயர் சன்னிதிகள் உள்ளன. படியேறும்போது வழியில் உள்ள பாறையில் பழமையான விநாயகர் புடைப்புச்சிற்பமும் அதன் அருகில் இடும்பன் சன்னிதியும் உள்ளன. பொன்னூதி மலையின் நடுப்பகுதியில் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.[11][57] கடந்து மேலே சென்றால் நுழைவாயிலோடு கூடிய ஒரு மண்டபம் இருக்கிறது. அதைக் குறட்டு வாசல் என்பர்.[58][59][60]

ஊதியூர் நகரில் உள்ள கோவில்களின் பட்டியல்[61][62]
வ.எண் கோயில் எண் கோவிலின் பெயர் இடம் வட்டம் மாவட்டம் அஞ்சல் குறியீடு நிர்வாக அலுவலர்
1 TM010204 அருள்மிகு உத்தண்டவேலாயுதசுவாமி திருக்கோயில் பொன்னூதி மலை, ஊதியூர் காங்கேயம் திருப்பூர் 638703 இணை ஆணையர், திருப்பூர்
2 TM013197 அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஊதியூர் காங்கேயம் திருப்பூர் 638703 உதவி ஆணையர், திருப்பூர்
3 TM013198 அருள்மிகு இடும்பகுமாரசுவாமி திருக்கோயில் பொன்னூதி மலை, ஊதியூர் காங்கேயம் திருப்பூர் 638703 உதவி ஆணையர், திருப்பூர்
4 TM013199 அருள்மிகு உச்சிவிநாயகர் திருக்கோயில் பொன்னூதி மலை, ஊதியூர் காங்கேயம் திருப்பூர் 638703 உதவி ஆணையர், திருப்பூர்
5 TM013226 அருள்மிகு கொங்கணகிரி சித்தர் திருக்கோயில் & தவபீடம் பொன்னூதி மலை, ஊதியூர் காங்கேயம் திருப்பூர் 638703 உதவி ஆணையர், திருப்பூர்
6 TM013230 அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோயில் பொன்னூதி மலை, ஊதியூர் காங்கேயம் திருப்பூர் 638703 உதவி ஆணையர், திருப்பூர்
7 அருள்மிகு பிரகலநாயகி சமேத - கைலாசநாதர் ஆலயம் ஊதியூர் காங்கேயம் திருப்பூர் 638703 தனியார்
8 TM013226 செட்டி தம்பிரான் சித்தர் ஆலயம் பொன்னூதி மலை, ஊதியூர் காங்கேயம் திருப்பூர் 638703 உதவி ஆணையர், திருப்பூர்

உத்தண்ட வேலாயுத சாமி கோவில்

தொகு

மலைகளில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திராவிடக் கட்டடக்கலையில் கட்டப்பட்ட ஊரின் முக்கிய சிவாலயம் உத்தண்ட வேலாயுதசாமி கோவில் ஆகும். இது மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழில் நிறைய பழங்கால கல்வெட்டுகள் உள்ளன. இது தரையிலிருந்து 100 படிகள் மலைகளின் மேல் அமைந்துள்ளது. பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு இது முக்கியமான இடம்.[11][63][64]

திருக்கோவில் நுழைவு வாசல் தென்புறம் அமைந்துள்ளது. கிழக்கில் ராஜகோபுரம் வாசலுடன் காணப்படுகிறது. கருவறையில், உத்தண்ட வேலாயுத சுவாமி, கிழக்கு நோக்கி ஐந்தடி உயரத்தில் காட்சி தருகின்றார். இவரின் கோலம் மேற்கு நோக்கிய பழனி ஆண்டவரைத் தரிசித்தவாறு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூலவரை கொங்கண சித்தர் உருவாக்கியதாகத் தலவரலாறு கூறுகிறது. இவருக்குத் துணையாக விநாயகப் பெருமான் மற்றும் பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

இந்த ஆலயத்தில் பவுர்ணமி, சஷ்டி, பங்குனி உத்திர விழாக்கள் சிறப்பாக நடைபெறும். பவுர்ணமி நாட்களில் நள்ளிரவு வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.[11][57] இக்கோயில் பழனியில் உள்ள தெண்டாயுதபாணி கோயிலுக்கு நிகரான சக்தி பெற்றதாகும்.

திப்பு சுல்தான் மற்றும் கோவில்

தொகு

18 ஆம் நூற்றாண்டில், திப்பு சுல்தான் மன்னன் வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை , கால்களில் வெட்டியதாகவும், இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்ததாகவும் அதுபோலவே திப்புசுல்தான் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 1200 ஏக்கர் நிலமும் உள்ளது.[65]

கொங்கண சித்தர் தவபீடம் மற்றும் ஆலயம்

தொகு

18 சித்தர்களில் ஒருவரான மற்றும் போகரின் சீடரான கொங்கணச் சித்தர், என்ற முனிவர் தான் தவம் புரிய ஏற்றதோர் இடத்தைத் தேடிய போது, இம்மலையைக் கண்டார். உடனே அவருக்கு இனம் புரியாத ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. பஞ்சபூத தலமாகவும், அரிய கற்கள், பாறைகள் நிறைந்த இடமாகவும் இம்மலை இவருக்குப் புலப்பட்டது. இதனால் இம்மலையிலுள்ள, சந்திரகாந்தக் கல் தூணின் மீது அமர்ந்து தவம் இயற்றினார்.[66][67]

இங்கே அவரது ஜீவ சமாதி மற்றும் சந்திரகாந்த தியான பாறைகள் உள்ளன.[68][69][70] அதன் அருகில் கிணறு போன்று பெரிய சுனை உள்ளது.[71]

பொன்னூதி மலையின் உச்சியில் கொங்கணர் ஆலயம் அமைந்துள்ளது. உத்தண்ட வேலாயுத சுவாமி ஆலயம் வழியாக, மூன்று கிலோமீட்டர் தொலைவு மலைமீது செல்ல வேண்டும். செட்டித்தம்பிரான் சித்தர் ஜீவசமாதி, உச்சிப்பிள்ளையார் கோவில், ஆகியவற்றைக் கடந்து செல்லும்போது கொங்கணர் சித்தர் ஆலயம் வருகின்றது. மற்றொரு எளிய வழியும் உள்ளது. இம்மலை அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதையில் ஏறினால், அரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே. இந்த வழியாகச் செல்பவர்கள் சந்திரகாந்தக்கல், அக்குபஞ்சர் பாறை, விஷமுறிவு பாறைகள் இவற்றைத் தரிசிக்க முடியும்.[72]

பாறை மீது அமைக்கப்பட்டுள்ளது எளிய கொங்கணர் ஆலயம். கருவறையில் கொங்கணச் சித்தர் சந்திரகாந்தக் கல் மீது தவமியற்றும் கோலத்தில் அமர்ந்துள்ளார். இவருக்கு 200 அடி தூரத்தில் கொங்கணர் தவம் இயற்றிய குகை ஒன்று உள்ளது. இக்குகையில் இருந்து பழனி முருகன் கோவிலுக்குச் சுரங்கப்பாதை உள்ளதாகக் கூறப்படுகிறது. தியானத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இங்கே தவம் செய்யும்போது தெய்வீக அனுபவத்தை உணரலாம்.[72]

பவுர்ணமிக்கு முதல் நாள் தொடங்கி, நான்கு நாட்கள் சிறப்புப் பூஜைகள் இக்கோவிலில் நடத்தப்படுகின்றன. குறையோடு வரும் பக்தர்களை இங்குள்ள விஷமுறிவு பாறையில் படுக்க வைத்துப் பரிகாரம் செய்யப்படுகின்றது.[11][73]

செட்டி தம்பிரான் சித்தர் ஆலயம்

தொகு

மலையின் மேலே சென்றால் கொங்கணச் சித்தரின் சிஷ்யரான தம்பிரான் செட்டி கோவில் இவர் சுமார் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் வாழ்ந்ததாகவும் பின்பு தியான நிலையிலேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவரின் ஜீவ சமாதியும் தவம் செய்த குகையும் உள்ளது.[74][75][76] அதன் அருகில் விநாயகர், ராகு, கேது சன்னிதிகள் உள்ளன. எங்கும் இல்லாத வகையில் விநாயகர் லட்சுமியுடன் சேர்ந்து லட்சுமி கணபதியாக அருள்பாளிக்கிறார். இவரை வழிபட்டால் வீட்டில் வறுமை நீங்கிச் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இங்கே உள்ள சுற்றுவட்டார மக்கள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் இவரை வணங்கிவிட்டுத்தான் தொழில் ஆரம்பிப்பார்கள். தம்பிரான் செட்டி கோவிலுக்கு மேலே சென்றால் உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளது.[11][65][77]

உச்சி பிள்ளையார் கோயில்

தொகு

உச்சி பிள்ளையார் கோயில் என்பது விநாயகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மலை உச்சிக்கோயில். இது கடல் மட்டத்திலிருந்து 1080 மீ உயரத்தில் அமைந்துள்ளது.[78]

சொர்ண லிங்கேஸ்வரர் திருக்கோவில்

தொகு

மலையின் உச்சியில் சிவபெருமான் சித்தருக்குக் காட்சி தந்த இடம் மற்றும் சிவலிங்கமும் உள்ளது. இங்குச் சிவன் சொர்ண லிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் எல்லோரும் இதனைத் தரிசிக்க முடியாது ஏறுவது மிகவும் கடினம். வெள்ளியங்கிரி மலையைப் போன்று இம்மலையும் ஏழு குன்றுகளைக் கொண்டது. வெள்ளியங்கிரி மலை உச்சியில் எப்படி மூன்று பாறைகளுக்கு மத்தியில் காட்சி தருகிறாரோ அதே போன்று இங்கும் சிவன் மூன்று பாறைகளுக்கு மத்தியில் காட்சி தருகிறார். அதனால் இம்மலையைச் சின்ன வெள்ளியங்கிரி என்றும் அழைப்பர். வெள்ளியங்கிரி மலை ஏற முடியாதவர்கள் இங்குத் தரிசனம் செய்யலாம்.

இங்குப் பௌர்ணமி திதி மிகவும் முக்கியமானது. இந்த மலை பாறைகளில் உள்ள சந்திரகாந்தக் கல் படிமங்கள் பௌர்ணமி இரவில் நிலா ஒளியில் பிரதிபளிக்கும். இது நம் உடலில் படுவதன் மூலம் உடல் மன ரீதியான அனைத்து நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் இரவு முழுவதும் பக்தர்கள் பாறைகளில் படுத்து இருப்பர்.

இங்கு மலைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒருவகை மூலிகை கஷாயம் வழங்கப்படும். இது தீர்க்க முடியாத பல நோய்களையும் தீர்க்கிறது என்று நம்பப்படுகிறது. இம்மலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளததால் சில கட்டுப்பாடுகளும் உள்ளது.[79]

மகாமண்டபம்

தொகு

மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் மயில்வாகன முருகன், காமதேனு, அடியவர், இடும்பன், மார்க்கண்டேயர், திருமால், ஐயனார், சூரியன், வேலாயுதர், பூதம், விநாயகர், இராம இலட்சுமணன் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மகா மண்டபம் மற்றும் வாத்ய மண்டபத்தில் சுந்தரர், முதலையிடமிருந்து பிள்ளையை மீட்ட காட்சி சிற்பமாகத் தீட்டப்பட்டுள்ளது. இங்குப் பைவரவருக்குத் தனிச் சன்னிதியுள்ளது.[58]

ஸ்ரீ பிரகலநாயகி சமேத - கைலாசநாதர் ஆலயம்

தொகு

இக்கோவில் மலை அடிவாரத்தில், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஊரிலேயே பெரிய கோவில். பழனி பாதயாத்திரை பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற கோயில் இது.[80]

திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள்

தொகு

இந்தக் கோவிலில் கிருத்திகை, ஒவ்வொரு மாத நட்சத்திர நாட்கள், தைப்பூசம், சித்ரா பௌர்ணமி, அமாவாசை, தலை ஆடி, வைகாசி பிரம்மோத்ஸவம், வைகாசி விசாகம், மற்றும் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் கொண்டாடப்படுகின்றன. தீபாவளி, நவராத்திரி, பங்குனி உத்திரம், மற்றும் கார்த்திகை தீபம் ஆகியவை இந்த ஊதியூர் வேலாயுதசுவாமி முருகன் கோவிலின் பிரமாண்டமான திருவிழாக்களாகும்.[22]

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்கள் இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவை.[81]

போக்குவரத்து இணைப்பு

தொகு

அருகிலுள்ள நகரங்களான காங்கேயம் மற்றும் தாராபுரம் ஊதியூரிலிருந்து முறையே 14 கி.மீ. மற்றும் 18 கி‌.மீ. தொலைவில் உள்ளது.[82][83] திருப்பூர் 38 கி.மீ. ஈரோடு 60 கி.மீ. கோயம்புத்தூர் 71 கி.மீ. தொலைவில் உள்ளது.[84][85][86][87]

ஊதியூர் மாநில நெடுஞ்சாலை 83A-இல் (தமிழ்நாடு) அமைந்துள்ளது. இஃது ஈரோடு, சேலம், பெங்களூர் நகரங்களைப் பழனி மற்றும் தாராபுரம் போன்ற நகரங்களுக்கிடையேயான இணைப்புச் சாலையாக விளங்குகிறது. இந்த நான்கு வழிச் சாலை வழியாகப் பேருந்துகள் 24/7 இயக்கப்படுகின்றன.[88] இந்த நகரம் குண்டடம் மற்றும் வெள்ளக்கோயிலுக்கு இடையேயான இணைப்பாகவும் செயல்படுகிறது.

தாராபுரம், பழனி, ஈரோடு மற்றும் சேலத்திற்கு ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் பேருந்துகள் இயங்குகின்றன. இங்கிருந்து காங்கேயம், தாராபுரம், குண்டடம், வெள்ளக்கோயில், திருப்பூர் மற்றும் பல்லடம் ஆகிய நகரங்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அருகில் உள்ள ரயில் நிலையம் திருப்பூர் ரயில் நிலையம் 40 கி.மீ. மற்றும் பழனி ரயில் நிலையம் 50 கி.மீ. ஆகும். அருகில் உள்ள விமான நிலையங்கள் கோவை சர்வதேச விமான நிலையம் மற்றும் சேலம் விமான நிலையம் ஆகும்.[89][90]

கல்வி, சுகாதாரம் வசதிகள்

தொகு

ஊதியூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல அரசு, அரசு நிதியுதவி பெரும் மற்றும் தனியார் ஆரம்ப பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை உள்ளன.

  • சாந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி, கே.கே.எஸ் நகர், குள்ளம்பாளையம், ஊதியூர் 638703[91]
  • VMCDV அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, தாயம்பாளையம், ஊதியூர்.[92]
  • அரசு நடுநிலைப்பள்ளி, முதலிபாளையம், ஊதியூர் 638703
  • ஸ்ரீ நந்தனா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஊதியூர்.

இப்பகுதியில் பல அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன.

  • குள்ளம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், ஊதியூர் 638703[93]
  • தாயம்பாளையம் மேம்படுத்தபட்ட அரசு சுகாதார நிலையம், ஊதியூர் 638703[94]
  • பிரபா தேவி மருத்துவமனை, ஊதியூர் டவுன் 638703

ஊதியூரில் ஒரு காவல் நிலையம் அதன் அருகிலுள்ள பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.[95] திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுகாவில் உள்ள ஒரு வட்டம் ஊதியூர் ஆகும். ஊதியூர் இப்பகுதியில் தலைமை தபால் அலுவலகம் உள்ளது.[96] ஊதியூரில் ஏடிஎம் மற்றும் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது.[97][98]

மேலும் படிக்க

தொகு
  • சிவன்மலை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில் கிராமம்
  • காங்கேயம், தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகரம்
  • தாராபுரம், தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று நகரம்
  • திருப்பூர், தமிழ்நாட்டில் உள்ள மாநகரம்

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Uthiyur Village in Kangeyam (Tiruppur) Tamil Nadu | villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  5. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  6. "Kongu Nadu History". Google Books. https://books.google.co.in/books?id=So2pSQQ3JGYC&q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88&dq=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88&hl=en&newbks=1&newbks_redir=1&printsec=frontcover&sa=X&ved=2ahUKEwiK8MH0_u_zAhVFxTgGHdmoCb0Q6AF6BAgEEAI. 
  7. A, Abiram. "கொங்கு மண்டலத்தில் மட்டும் இருக்கும் அதிக முருகன் கோவில்கள் | Tamil Minutes" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
  8. "Uthanda Velayutha Swami Temple : Uthanda Velayutha Swami Temple Details | Uthanda Velayutha Swami- Uthiyur | Tamilnadu Temple | உத்தண்ட வேலாயுத சுவாமி". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
  9. "Uthanda Velayutha Swami Temple : Uthanda Velayutha Swami Temple Details | Uthanda Velayutha Swami- Uthiyur | Tamilnadu Temple | உத்தண்ட வேலாயுத சுவாமி". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
  10. காமராஜ், மு ஹரி. "சித்தர்கள் உலாவும் பொன்னூதி மாமலை..." www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-02-10.
  11. 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 "ஊதிமலை உத்தண்ட வேலாயுதசுவாமி திருத்தலம் - Swasthiktv". Dailyhunt (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  12. "கொங்கண சித்தர்". Tamil and Vedas (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-05.
  13. "Professor's Dairy - Ramayana and Pon uthi hills".
  14. "Pon Uthiyur Hills & Konganar Siddhar Samadhi (Karur - Tamil Nadu)". பார்க்கப்பட்ட நாள் 2021-08-05.
  15. "Pon Uthiyur Hills & Konganar Siddhar Samadhi (Karur - Tamil Nadu)". பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
  16. "Pon Uthiyur Hills & Konganar Siddhar Samadhi (Karur - Tamil Nadu)". பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  17. "Pon Uthiyur Hills & Konganar Siddhar Samadhi (Karur - Tamil Nadu)". பார்க்கப்பட்ட நாள் 2021-04-24.
  18. "Pon Uthiyur Hills & Konganar Siddhar Samadhi (Karur - Tamil Nadu)". பார்க்கப்பட்ட நாள் 2021-04-30.
  19. காமராஜ், மு ஹரி. "சித்தர்கள் உலாவும் பொன்னூதி மாமலை..." www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
  20. Moondravathu Kan | [Epi - 252] (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-05-14
  21. Kongana Siddhar Mystery - சித்தர்களைத் தேடி ஒரு பயணம் | Karna | Tamilnavigation (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-05-15
  22. 22.0 22.1 "Uthiyur Velayudhaswamy Murugan Temple". ePuja (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
  23. {{cite book}}: Empty citation (help)
  24. Minutes of Several Conversations at the ... Yearly Conference of the People Called Methodists ... (in ஆங்கிலம்). 1897.
  25. "Uthiyur Hills". wikimapia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
  26. "Weather in Uthiyur, Tamil Nadu - Accuweather".
  27. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  28. "கூண்டில் சிக்கிய அரிய வகை மர நாய்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  29. "அரிய வகை தேவாங்கு வனத்துறையிடம் ஒப்படைப்பு". Dinamalar. 2019-04-16. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  30. 30.0 30.1 "காங்கயம்: குடியிருப்பில் புகுந்த பாம்பைப் பிடித்த தீயணைப்பு வீரர்கள்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  31. குழு, ஆசிரியர் (2019-02-07). "கோயில் நிலத்தைக் காக்கப் போராடும் தனியொருவர்!". தமிழ்ஹிந்து (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-18.
  32. "Uthiyur, Tiruppur | Village | GeoIQ". geoiq.io. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  33. "Uthiyur Village Population - Kangeyam, Tiruppur, Tamil Nadu". Censusindia2011.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  34. "Census 2011 - Tiruppur district" (PDF).
  35. "TN census 2011 Tiruppur district" (PDF).
  36. "District Census Handbook 2011 | Tiruppur District, Government of Tamil Nadu | Textile City | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  37. "Uthiyur Village Population - Kangeyam - Tiruppur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  38. "Kongu Tamil". Namma Coimbatore (in ஆங்கிலம்). Archived from the original on 2021-10-17. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  39. ValaiTamil. "Kongu, கொங்கு Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  40. "Uthiyur | Village | GeoIQ". geoiq.io (in ஆங்கிலம்). Archived from the original on 2021-04-24. பார்க்கப்பட்ட நாள் 2021-04-24.
  41. "Hatsun Agro Product Commences Commercial Production Of Milk At Uthiyur Plant, In Tamil Nadu". Moneycontrol (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
  42. "Hatsun Agro Product commences commercial production of milk at Uthiyur plant, in Tamil Nadu". www.outlookindia.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
  43. "Gainers & Losers: 10 Stocks That Moved Most On July 12". Moneycontrol (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
  44. . 
  45. "Electric Tumble Dryer". indiamart.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
  46. "Block Development Office | Tiruppur District, Government of Tamil Nadu | Textile City | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
  47. "Villages & Towns in Kangeyam Taluka of Tiruppur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
  48. "REVENUE VILLAGES | Tiruppur District, Government of Tamil Nadu | Textile City | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
  49. டீம், ஜூனியர் விகடன். "என்ன செய்தார் எம்.எல்.ஏ ? - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  50. Jan 2021, ANI | 24; Ist, 09:00 Pm. "Tamil Nadu polls 2021: Rahul Gandhi holds roadshow in Uthiyur". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  51. 51.0 51.1 "Rahul Gandhi holds roadshow in TN's Uthiyur | City - Times of India Videos". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
  52. Jan 2021, ANI | 24; Ist, 09:00 Pm. "Tamil Nadu polls 2021: Rahul Gandhi holds roadshow in Uthiyur". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  53. டீம், ஜூனியர் விகடன். "என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  54. 54.0 54.1 "Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tamil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |". www.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  55. Admin (2019-02-04). "பெருமைமிகு ஊதியூர் கொங்கணச் சித்தர் கோவிலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு." இந்துமுன்னணி (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  56. "Shiva temples of Erode Distric". shaivam.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
  57. 57.0 57.1 "Pon Uthiyur Hills & Konganar Siddhar Samadhi (Karur - Tamil Nadu)". பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  58. 58.0 58.1 "அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில், ஊதியூர் – Aalayangal.com". koyil.siththan.org. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  59. காமராஜ், மு ஹரி. "சித்தர்கள் உலாவும் பொன்னூதி மாமலை..." www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  60. https://books.google.co.in/books?id=zxpHAQAAIAAJ&q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88&dq=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88&hl=en&newbks=1&newbks_redir=1&printsec=frontcover&sa=X&ved=2ahUKEwiK8MH0_u_zAhVFxTgGHdmoCb0Q6AF6BAgCEAI/. {{cite book}}: Missing or empty |title= (help)
  61. "Government of Tamil Nadu – Hindu Religious & Charitable Endowments Department". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-09.
  62. "www.tamilvu.org/ Temples in Tamil Nadu, Coimbatore commisioner".
  63. "Uthanda Velayutha Swami Temple : Uthanda Velayutha Swami Uthanda Velayutha Swami Temple Details | Uthanda Velayutha Swami- Uthiyur | Tamilnadu Temple | உத்தண்ட வேலாயுத சுவாமி". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  64. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  65. 65.0 65.1 Admin (2019-02-04). "பெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு." இந்துமுன்னணி (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
  66. Kongana Siddhar Mystery - சித்தர்களைத் தேடி ஒரு பயணம் | Karna | Tamilnavigation (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-08-01
  67. மூலிகை ரசம் மூலமாக பல வியாதிகளைப் போக்கும் அதிசயம் | Mannil Ulavum Marmamgal Epi- 78 | JayaTV, பார்க்கப்பட்ட நாள் 2022-03-24
  68. "ஊதியூர் கொங்கண சித்தர் கோயிலில் நாளை பஞ்சகலச யாக பூஜை". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  69. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  70. ராமகிருஷ்ணன்,எம்.புண்ணியமூர்த்தி, ஜி பழனிச்சாமி,கு. "சாமியார்கள் - துணுக்குகள்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  71. "காரிய சித்திக்கும், பகையை வெல்லவும், வாழ்வில் வளம் பெறவும் கொங்கணர் சித்தரை வழிபடும் முறைகள்". TopTamilNews (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-01-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  72. 72.0 72.1 "Thread by @kannanthvan on Thread Reader App". threadreaderapp.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  73. Staranandram (2020-09-11). "கொங்கணர் சித்தரின் சூட்சுமங்கள்". Dr.Star Anand Ram (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-29.
  74. "ஸ்ரீ செட்டி சித்தர் – Page 3". Chettiar tv (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
  75. தொலைக்காட்சி, வாணியர் (2020-04-24). "செட்டியார் சமுதாயத்தை சேர்ந்த ஸ்ரீ செட்டி தம்பிரான் சித்தர்". Chettiar tv (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
  76. "ஸ்ரீசெட்டி சித்தர் ஆலயம்". Siddharbhoomi (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-12-21. பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
  77. Unknown. "Famous Astrologer in Tamil Nadu: முருகன் கோயில்கள் ஊர் வாரியாக!". Famous Astrologer in Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  78. "ஊதியூர் மலைக் கோயில்களுக்குப் படிக்கட்டுகள் வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-09-17.
  79. "அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்" (in english). பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  80. "ஶ்ரீ பிரகலநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் கோவில் · VGVG+8P7, ஊதியூர், தமிழ்நாடு 638703, இந்தியா". ஶ்ரீ பிரகலநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் கோவில் · VGVG+8P7, ஊதியூர், தமிழ்நாடு 638703, இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  81. "ஊதியூர் மலைக் கோயில்களுக்குப் படிக்கட்டுகள் வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  82. "Uthiyur to Kangeyam". Uthiyur to Kangeyam (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  83. "Uthiyur to Dharapuram". Uthiyur to Dharapuram (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  84. "Uthiyur to Tiruppur". Uthiyur to Tiruppur (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  85. "Uthiyur to Erode". Uthiyur to Erode (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  86. "Uthiyur to Coimbatore". Uthiyur to Coimbatore (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  87. "Uthiyur to Vellakoil". Uthiyur to Vellakoil (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  88. "Erode to Palani bus timetable - Bustimes.in". www.bustimes.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  89. "ஊதியூர் to கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்". ஊதியூர் to கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம். பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  90. "ஊதியூர் to Salem Airport". ஊதியூர் to Salem Airport. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  91. "Shanthinikethan Higher Secondary School". Shanthinikethan Higher Secondary School (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.
  92. "Schools in the district of ERODE : DISE information - Classes, Infrastructure, Facilities". schools.thelearningpoint.net. பார்க்கப்பட்ட நாள் 2021-04-30.
  93. "Kullampalayam primary health centre". Kullampalayam primary health centre (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.
  94. "Thayam Palayam Government Hospital". Thayam Palayam Government Hospital (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.
  95. "Police Stations | Tiruppur District, Government of Tamil Nadu | Textile City | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  96. "REVENUE VILLAGES | Tiruppur District, Government of Tamil Nadu | Textile City | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  97. "Canara Bank Erode Uthiyur Tamil Nadu (IFSC Code) IFSC Code - Bank branch MIRC Code, Address details". cleartax.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
  98. GetPincodes. "Pin code 638703, Udhiyur S.O Post Office in Erode, Tamil Nadu". GetPincodes (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதியூர்&oldid=3825239" இலிருந்து மீள்விக்கப்பட்டது