கொல்லும் நாவாய்ப்பூச்சி
கொல்லும் நாவாய்ப்பூச்சிகள் (Assassin bugs) என்பவை கொல்லும் நாவாய்ப் பூச்சிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இவை பூமியில் எங்கும் நிறைந்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த உண்மையான நாவாய்ப்பூச்சிகள் அல்லது அரையிறக்கையினப் பூச்சிகளாகும். இவை யாவும் கிட்டத்தட்ட பதுங்கிப் பாயும் கொன்றுண்ணிகளாகும்[2]. இக்குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்களை எளிதில் அடையாளம் காணமுடியும் அவை ஒப்பீட்டளவில் குறுகிய கழுத்தும் உறுதியான வளைந்த உறிஞ்சு குழல்களும் கொண்டவையாகும். ஏராளமான மாதிரிகளை கவனமுடன் கையாள வேண்டும், ஏனென்றால் அவை உறிஞ்சுக் குழல்களால் மிகுந்த வேதனை தரும் தாக்குதலை மேற்கொண்டு தாங்களே தங்களைக் தற்காத்துக் கொள்ளும்.
கொல்லும் நாவாய்ப்பூச்சிகள் கடிப்பதால் சாகாசு நோய் உண்டாகிறது. இந்நோய் 12000 பேரைக் கொன்றிருக்கிறது[3] இப்பூச்சியினத்தால் பரப்பப்படும் ஒட்டுண்ணித் தொற்றால் இந்நோய் ஏற்படுகிறது. மனிதர்களின் முகத்தில் இது அதிகம் கடிப்பதால் இதை முத்தமிடும் பூச்சி என்பர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Weaving, Alan; Picker, Mike; Griffiths, Charles Llewellyn (2003). Field Guide to Insects of South Africa. New Holland Publishers, Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86872-713-0.
- ↑ There are some blood-sucking ectoparasites in the subfamily Triatominae.
- ↑ https://www.sciencealert.com/these-are-the-world-s-15-deadliest-animals பரணிடப்பட்டது 2017-07-19 at the வந்தவழி இயந்திரம்.