கொளப்பாக்கம் அகத்தீசுவரர் கோயில்

கொளப்பாக்கம் அகத்தீசுவரர் கோயில் (Kolampakkam Agastheeshwarar temple) என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள, 1300 ஆண்டுகள் பழைமையான சிவாலயமாகும்.[1][2] சென்னையில் உள்ள நவக்கிரக கோயில்களில் சூரியன் சிவபெருமானை வழிபட்ட கோயிலாகும்.

அகத்தீஸ்வரர் கோயில்
பெயர்
பெயர்:அகத்தீஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:கொளப்பாக்கம்
மாவட்டம்:சென்னை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அகஸ்தீஸ்வரர்,
  • வாகீசமகாதேவர்
தாயார்:ஆனந்தவல்லி
தல விருட்சம்:அரசமரம்
தீர்த்தம்:பிரம்ம திருக்குளம்
சிறப்பு திருவிழாக்கள்:
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக் கலை

ஆலய அமைப்பு தொகு

சந்நிதிகள் தொகு

விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிட்ணு, துர்க்கை ஆகியவை கருவறை கோஷ்டத்தில் அமைந்துள்ளன. பிரகாரத்தில் மகாகணபதி, காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, சுப்பிரமணியர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

காசி விஸ்வநாதர்- விசாலாட்சி சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியில் மரகத கல்லால் ஆன பச்சை மயில் வாகனம் உள்ளது.

தல புராணம் தொகு

சூரியனின் வெப்பம் தாங்காமல் அவரது மனைவி சம்க்ஞா தேவி தன்னுடைய நிழலை சாயா தேவியாக விட்டுவிட்டு பிரிந்தார். இதை உணராத சூரியன் சாயாவோடு வாழ்ந்துவந்தார். சனிபகவானையும் பெற்றார்.

சில காலங்களுக்கு பிறகு சாயாவுடன்‌ வாழ்வதை சூரியன் அறிந்து கோபம் கொண்டார். சம்க்ஞா தேவியின் தந்தை விஸ்வகர்மாவிடம் முறையிட, அவர் சூரியனை கொளப்பாக்கம் சென்று சிவபெருமானை வழிபட கூறினார். அதன்படி இத்தலத்தில் சூரியன் சிவபெருமானை வழிபட்டு ஆனந்த வல்லி உடனுறை அகத்தீஸ்வரரை தரிசித்தார். அவர்கள் அருளால் சூரியனின் வெப்பம் குறைந்தது, சம்க்ஞா தேவியும் மீண்டும் சூரியனுடன் சேர்ந்து வாழ்ந்தார் என தலபுராணம் விவரிக்கிறது.

சான்றுகள் தொகு

  1. "நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் பரிகாரத் தலங்கள்!". Dinamani.
  2. "District Wise Temple list". temple.dinamalar.com.