கொள்ளி வாய்ப் பிசாசு

(கொள்ளிவாய் பிசாசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொள்ளி வாய்ப் பிசாசு அல்லது கொள்ளிவாய்வளிப் பிசாசு என்பது தமிழக நாட்டுப்புற மக்களிடையே நம்பப் பட்டு வந்த மனிதிலி (அமானுஷ்யம்) அல்லது பேய்க்கதைகளில் வரும் ஒரு பேயாகும். தீயில் எறிந்து இறந்தவர்களே கொல்லிவாய் பிசாசுகளாகத் திரிவர் என கூறப்படுகிறது. சில நாட்டுப்புறக் கதைகளில் கொள்ளிவாய் பிசாசுகள் புளிய மரத்தில் உட்காருந்து கொள்ளும் எனவும், நள்ளிரவு நேரங்களில் போவோரிடம் போய் நெருப்புக் கேட்கும் எனவும், யாராவது பதில் சொல்லான அவர்களைப் பற்றிக் கொள்ளும் எனவும் சொல்லப்படுவதுண்டு[1].

அறிவியல் காரணங்கள்

தொகு
  1. காட்டுத்தீ பற்றி எரியும் போது அவையே மனிதன் போல் உருவம் கொண்டு தெரிவதே நாளடைவில் கொல்லி வாய்ப் பிசாசு என்ற கருத்துரு தோன்றுவதற்கு காரணம் என்பர் அறிவியல் ஆதரவாளர்கள்.
  2. இது மண்ணிற்கு கீழேயிருந்து மீத்தேன் வாயுவின் வெளியேற்றம் காரணமாக சதுப்பு நிலங்களில், கிராமங்களில் உள்ள வயல்களில் சில நேரங்களில் திடீர் தீப்பிளம்பு உருவாகும். ஆனால், அது வெப்பக் காற்றின் மீது பட்டவுடன் எரியத் தொடங்கும். அதனால் அதை தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு யாரோ தீப்பிடித்துக் கொண்டு நடந்து போவது போலத் தெரியுமாம். அதனையே அக் காலத்தில் மக்கள் கொள்ளிவாய் பிசாசுகள் என தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றனர் என தற்கால ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்[2][3] காவிரி கழிமுக மாவட்டங்களில் அதிகளவு மீத்தேன் வாயு வேளாண் நிலத்திற்கடியில் இருப்பதை அண்மைய ஆய்வுகள் தெளிவாக்கியிருப்பதும் இத்தோடு ஒப்பு நோக்க வேண்டியதாகும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "கிராமத்து பேய்கள்". Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 2015-08-29.
  2. பேய் உண்டா, இல்லையா?
  3. கொள்ளிவாய் பிசாசுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்ளி_வாய்ப்_பிசாசு&oldid=3551879" இலிருந்து மீள்விக்கப்பட்டது