கொழும்பு இந்துக் கல்லூரி

கொழும்பு இந்துக் கல்லூரி (Colombo Hindu College) அல்லது பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி இலங்கை தலைநகர் கொழும்பில், பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையாகும். மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில (அண்மையில்) மொழியூடாகக் கற்கைகளை மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உண்டு. தனியாக ஒரு கணினி ஆய்வுகூடமும், நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம் போன்ற வசதிகள் உண்டு. 2006ஆம் ஆண்டின் படி 4,500 மாணவர்களும் 120 ஆசிரியர்களும் இப்பாடசாலையில் பணியில் உள்ளனர்.[1][2][3]

கொழும்பு இந்துக் கல்லூரி
அமைவிடம்
பம்பலப்பிட்டி, கொழும்பு
இலங்கை இலங்கை
தகவல்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்கற்றாங்கு ஒழுகுக
தொடக்கம்1951
அதிபர்திரு நாகேந்திரா
பணிக்குழாம்120
தரங்கள்வகுப்பு 1 - 13
பால்ஆண்கள்
வயது6 to 18
மொத்த சேர்க்கை4,500 (2006)
இணையம்

வரலாறு

தொகு

கொழும்பு இந்துக் கல்லூரி, 1951 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி "பிள்ளையார் பாடசாலை" என்ற பெயருடன் கொழும்பு இந்து வித்தியாவிருத்திச் சபையினால் தொடங்கப்பட்டது. நீதியரசர் செல்லப்பா நாகலிங்கம் தலைமையில் 24 அங்கத்தவர்களைக் கொண்டு இச்சபை ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரி இப்போது இயங்கிவரும் காணி சம்மாங்கோடு மாணிக்க விநாயகர் கோயில், மற்றும் கதிரேசன் கோயில் தர்மகர்த்தாக்களால் வழங்கப்பட்டது.

இப்பாடசாலையின் முதல் அதிபராக இருந்தவர் கார்த்திகேசு பத்மநாபன். ஆரம்பப்பிரிவு அதிபராக ரி. சதாசிவம் பணியாற்றினார். உயர் வகுப்புகள் 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

1953 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல கொழும்பின் புறநகரான இரத்மலானையில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இதனை அடுத்து ஐந்தாம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகள் 1955 ஆம் ஆண்டு இரத்மலானைக்குக் கொண்டு செல்லப்பட்டன. இரத்மலானை பாடசாலை "கொழும்பு இந்துக் கல்லூரி' என்றும், தற்போதைய பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி "இந்து கனிஷ்ட பாடசாலை' எனவும் பெயர் மாற்றங்கள் பெற்று இயங்கிவரத் தொடங்கின. 1966 ஆம் ஆண்டு முன்னாள் செனட்டர் ரி. நீதிராஜா முதலாவது மூன்று மாடிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

1974, பெப்ரவரி 6 ஆம் திகதி மூன்றாவது மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் நாட்டினார்கள். இதனை அடுத்து கல்விப் பொதுத்தராதர உயர்வகுப்பு 1976 இல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை 1976 சனவரி 1 ஆம் நாள் "கொழும்பு இந்துக் கல்லூரி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கல்லூரி அதிபர்கள்

தொகு
  • கார்த்திகேசு பத்மநாதன் (1951)
  • என். சத்தியேந்திரா (1957)
  • டி. சுப்பிரமணியம் (1959)
  • எஸ். அம்பலவாணர் (1962)
  • பி. நல்லையா (1967)
  • ரி. சங்கரலிங்கம் (1971)
  • டி. ஆர். ராஜலிங்கம் (1986)
  • எஸ். ஸ்ரீராஜசிங்கம் (1990)
  • பீ. எஸ். சர்மா (1991)
  • தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசாமி (1996)
  • ஐயம்பிள்ளை ராஜரத்தினம் (2011)

இக்கல்லூரியில் படித்து புகழ் பெற்றவர்கள்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Colombo Hindu College". fat.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-29.
  2. Shaman, Eranga. "Education Times – Hindu College Colombo, 04; A temple of learning showing true colours". educationtimes.lk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-21.
  3. "Colomboo.lk". colomboo.lk. பார்க்கப்பட்ட நாள் 2017-03-29.