கோகன் நினைவுப் பள்ளி, கொடைக்கானல்
கோகன் நினைவுப் பள்ளி (Cohen Memorial School, Kodaikanal), என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, கொடைக்கானலில் அமைந்துள்ள ஒரு பள்ளி ஆகும்.
வரலாறு
தொகுகி. பி. 1912-ஆம் ஆண்டு, கோடைக்கானலில் லாச் எண்டு என்ற ஓர் இடத்தை, அமெரிக்க லூதரன் சமயத்தைச் சார்ந்தவர்கள் விலைக்கு வாங்கினார்கள். அந்த இடத்தில் கி. பி. 1922-ஆம் ஆண்டு, தங்கள் குழந்தைகள் பயிலுவதற் கென்று ஒரு பள்ளியை நிறுவினார்கள். தங்கள் தந்தையர் நாடான அமெரிக்க நாட்டுக்குக் கல்வி முறையை அப்பள்ளியில் புகுத்தினர். கோடைக்காலத்தில் இங்கு வந்து தங்கியவர்களின் குழந்தைகளுக்சான பருவப்பள்ளி (Season school) யாகவே இது முதலில் துவக்கப்பட்டது. பாச்மேன் என்ற ஆசிரியர் பள்ளிக்காகச் சிறிய ஒரு கட்டிடத்தைக் கட்டினார். பிறகு மாணவர்களுக்குத் தங்குமிடமும், கிருத்துவக் கோவிலும் அமைத்தார். இவ்விரண்டின் கட்டிடக் கலையழகு கோடைக்கானலில் குறிப்பிடத்தக்கது. பாச்சானன் தொல்லியல் ஆய்வில் ஆர்வமுள்ளவர். பழனி மலைகளில் கி. பி. 1942-ஆம் ஆண்டு அவர் அகழ்ந்தெத்த புதைபொருள்கள் செண்பகனூரிலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.[1]
குறிப்புகள்
தொகு- ↑ "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 203-268". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.