கோகலே மண்டபம்

கோபால கிருஷ்ண கோகலே மண்டபம், சென்னை ஜார்ஜ்டவுன் ஆர்மீனியன் தெருவில் அமைந்துள்ள ஒரு பொது மண்டபம் ஆகும். இது 1915 ஆம் ஆண்டு, இளம் ஆண்கள் இந்திய சங்கத்தின் (ஆங்கிலம்: Young Men's Indian Association) தலைமையகமாக, அன்னி பெசன்ட் என்பவரால் கட்டப்பட்டது.

வரலாறு

தொகு

கோகலே மண்டபம், இறைஞானியும் (ஆங்கிலம்: Theosophist) மற்றும் இந்திய விடுதலை ஆர்வலருமான அன்னி பெசன்ட் என்பவரால், இளம் ஆண்கள் இந்திய சங்கமாக (ஆங்கிலம்: Young Men's Indian Association) 1915 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அன்னி பெசன்ட் 1916 ஆம் ஆண்டு ஹோம் ரூல் லீக் (ஆங்கிலம்: Home Rule League) இயக்கத்தை உருவாக்கினார். இம்மண்டபத்தில் இதற்கான அறிவிப்பினையும் வெளியிட்டார்.. இந்திய சேவகர் சங்கத்தின் (ஆங்கிலம்: Servants of India Society) நிறுவனர், தேசபக்தர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் கல்வியில் முன்னோடியான இந்தியத் தலைவர் கோபால கிருஷ்ண கோகலேவின் நினைவாக இம்மண்டபம், பின்னாளில் கோபால கிருஷ்ண கோகலே மண்டபம் என பெயர் மாற்றம் பெற்றது.

பிற்காலத்தில், கோகலே ஹால் இசை நிகழ்ச்சிகளுக்கான இடமாக விளங்கியது. தமிழ் இசை சங்கம் 1944 முதல் 1953 வரை கோகலே மண்டபத்தில் இருந்து செயல்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  • Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. pp. 270–271. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88661-24-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகலே_மண்டபம்&oldid=4091100" இலிருந்து மீள்விக்கப்பட்டது